Published:Updated:

ராணுவ வீரர்களின் கல்லறை மண்ணைத் தேடும் ஆசிரியரின் பயணம்... ஏன், எதற்காக?!

உமேஷ் கோபிநாத்
உமேஷ் கோபிநாத்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேரின் கல்லறைகளில் இருந்து மண் சேகரித்துள்ளார். தொடர்ந்து, கார்கில் மற்றும் இதர போர்களில் உயிர் நீத்தவர்கள் என இதுவரை 76 கல்லறைகளில் இருந்து மண்ணைச் சேகரித்துள்ளார்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட கோர நிகழ்வு ஒட்டுமொத்த தேசத்தையும் நிலைகுலையச் செய்தது. கொடூரமான இந்த புல்வாமா தாக்குதல் இசை ஆசிரியர் ஒருவரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

மகராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதான உமேஷ் கோபிநாத் என்ற இசை ஆசிரியர், தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.

வாகனம்
வாகனம்

நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோரது கல்லறைகளில் இருந்து மண்ணைச் சேகரித்து அதனைக் கொண்டுச் சென்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் நினைவு தூண் அமைக்க முடிவு செய்திருக்கிறார்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேரின் கல்லறைகளில் இருந்து மண் சேகரித்துள்ளார். தொடர்ந்து, கார்கில் மற்றும் இதர போர்களில் உயிர் நீத்தவர்கள் என இதுவரை 76 கல்லறைகளில் இருந்து மண்ணைச் சேகரித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைய காரணமாக இருந்த இந்திய ராணுவத்தின் முதல் ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷாவின் கல்லறை அமைந்துள்ள ஊட்டி கல்லறைத் தோட்டத்திற்கு வந்து மண்ணைச் சேகரித்தார்.

உமேஷ் கோபிநாத்
உமேஷ் கோபிநாத்

இது குறித்து உமேஷ் கோபிநாத்திடம் பேசினேன். "புல்வாமா தாக்குதல் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. நாட்டிற்காக உயிர் நீத்த தியாகிகள் மற்றும் போரில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்களின் நினைவிடத்தில் இருந்து மண் சேகரித்து அதனைக் கொண்டு ஜம்மு - காஷ்மீரில் நினைவுத்தூண் அமைக்க முடிவு செய்துள்ளேன்.

`குடும்பத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள்!’ ராணுவ வீரர்களின் அன்பான பேச்சு; சரணடைந்த தீவிரவாதி

60 ஆயிரம் கி.மீ பயணித்து இதுவரை 76 பேரின் நினைவிடத்தில் இருந்து மண் சேகரித்துள்ளேன். 2021 ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தப் பயணத்தை முடிக்கிறேன். இந்திய நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்கள், காவல்துறையினர், துணை ராணுவ படையினர் என அனைவரின் கல்லறைகளில் இருந்தும் மண் சேகரித்து கொண்டுச் சென்று ஜம்மு காஷ்மீரில் நினைவு தூண் அமைப்பேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு