‘‘இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்களை அடைத்து வைக்க, எந்த இடத்திலும் வதை முகாம்கள் இல்லை’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ‘‘இல்லை... இல்லை. ஆர்.எஸ்.எஸ் பிரதமர், பாரதத்தாயிடம் பொய் சொல்கிறார்’’ என்று பிரதமர்மீது ராகுல் காந்தி பாய்கிறார். ‘‘இருவருமே வேடமிடுகிறார்கள். மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதே உண்மை’’ என்கின்றனர் அஸ்ஸாம் வரலாற்றை அறிந்தவர்கள்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் போராட்டம் சற்று வித்தியாசமானது. ‘சி.ஏ.ஏ சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்க வேண்டும்’ என்று இந்தியாவின் மற்ற பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதே வேளையில், ‘இந்துவாக இருந்தாலும் இஸ்லாமியராக இருந்தாலும், சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள் எங்கள் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும்’ என்பது அஸ்ஸாம் மக்களின் கோரிக்கை.

வங்கதேச இந்துக்கள், இஸ்லாமியர்கள் இந்தக் குட்டி மாநிலத்தில் குடியேறி, அஸ்ஸாமிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இந்தியாவில் முதன்முறையாக இந்த மாநிலத்தில் மட்டுமே தேசிய குடியுரிமைப் பதிவேடு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 19 லட்சம் பேர் அஸ்ஸாமிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று தேசிய குடியுரிமைப் பதிவேடு சொல்கிறது.

‘அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்களைத் துரத்த வேண்டும்’ என முதன்முதலில் முழங்கி, அதற்கான நடவடிக்கையில் இறங்கியவர் கோபிநாத் போர்டோலாய். இவர் காங்கிரஸ் கட்சித் தலைவர். சுதந்திரம் பெற்ற பிறகு அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சரும் இவர்தான்.

பல ஆண்டுகாலமாக தங்கள் மாநிலத்தை வெளிநாட்டினரிடமிருந்து காத்துக்கொள்ள அஸ்ஸாம் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 2001-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. முதல்வராக தருண் கோகோய் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் அதாவது, 2008-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த 50 பேர் சட்டவிரோதமாகப் புகுந்த வழக்கில் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற அஸ்ஸாம் உயர் நீதிமன்ற நீதிபதி சர்மாக் உத்தரவிட்டார். அவர்களிடத்தில் வாக்காளர் அடையாள அட்டை இருந்ததைக் கண்டு நீதிபதியே அதிர்ந்துபோனார். அவர் தன் தீர்ப்பில், ‘வங்க தேசத்தவர்கள் நுழைந்தது மட்டுமல்லாமல் வாக்குரிமை வேறு பெற்றுள்ளனர். இப்படியேபோனால், அஸ்ஸாம் மக்களின் உரிமை என்னாவது?’ என்று கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

தீர்ப்பளித்த மூன்றாவது மாதத்தில், அதாவது அக்டோபர் 30-ம் தேதி அஸ்ஸாமின் முக்கிய நகரமான கௌஹாத்தி, ரத்த வெள்ளத்தில் குளித்தது. தொடர் குண்டுவெடிப்புகளால் 70 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள். 470 பேர் கை, கால்களை இழந்தார்கள். வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி என்கிற தீவிரவாத அமைப்பு, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அஸ்ஸாம் மக்கள் கொந்தளித்தனர். வங்கதேச மக்களைக் குறிவைத்துத் தாக்கினர். இதனால், மாநிலத்தை ஆண்டுக்கொண்டிருந்த காங்கிரஸ் அரசு பயந்துபோனது. வங்கதேசத்தவர்மீது இவ்வளவு நாளும் கரிசனம் காட்டிக்கொண்டிருந்த தருண் கோகோய் அரசு, வேறு வழியில்லாமல் தன்னை மாற்றிக்கொண்டது.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களைக் கணக்கிட்டுப் பிடிக்க தருண் கோகோய் அரசு முடிவெடுத்தது. இவர்களை அடைத்துவைக்க கோல்பாரா, சில்சார், கோக்ராஜார் ஆகிய மூன்று இடங்களில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. சில நாள்கள் கழித்து மேலும் மூன்று இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டன. முதன்முறையாக 362 பேர் வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டனர்.

இவற்றையெல்லாம் விரிவாக எடுத்துரைப்பவர்கள், ‘‘பிரதமர் மோடி பொய் சொல்வதாகக் குற்றம்சாட்டும் ராகுல் காந்தி சார்ந்த கட்சிதான், நாட்டிலேயே முதன்முறை யாக சட்டவிரோதக் குடியேறிகளுக்கான முகாம்களை உருவாக்கியது. இந்த வரலாறு ராகுல் காந்திக்குத் தெரியாதா?’’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.

‘‘அஸ்ஸாம் மக்கள்மீது உண்மையான அக்கறையுடன் காங்கிரஸ் கட்சி வெளிநாட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்தே இதுபோன்ற முகாம்களை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியது. முகாம்கள் அமைத்ததைச் சுட்டிக்காட்டியே 2011-ம் ஆண்டு அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தது காங்கிரஸ். பிறகு, வெளிநாட்டவர்கள் விவகாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ‘சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றுவோம்’ என்ற உறுதிமொழியுடன் பா.ஜ.க அங்கே ஆட்சியைப் பிடித்தது’’ என்கின்றனர் அவர்கள்.

இதற்கிடையே, இந்தச் சர்ச்சைக்கு விளக்கமளித் துள்ள அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய், ‘‘கௌஹாத்தி உயர் நீதிமன்ற ஆணையின்படியே எங்கள் அரசு இதுபோன்ற முகாம்களை ஏற்படுத்தியது. ஆனால், பா.ஜ.க அரசு அந்த மையங்களை 46 கோடி ரூபாய் மதிப் பீட்டில் விரிவுபடுத்துகிறது’’ என்று கூறியுள்ளார்.

நன்றாகவே நடக்கிறது நாடகம்!