Published:Updated:

பஞ்சமி நில விவகாரத்தில் பதற்றம்... மேலவளவு குற்றவாளிகள் விடுதலையில் சைலன்ட்!

மேலவளவு
பிரீமியம் ஸ்டோரி
மேலவளவு

நாடகமாடுகிறதா பா.ஜ.க?

பஞ்சமி நில விவகாரத்தில் பதற்றம்... மேலவளவு குற்றவாளிகள் விடுதலையில் சைலன்ட்!

நாடகமாடுகிறதா பா.ஜ.க?

Published:Updated:
மேலவளவு
பிரீமியம் ஸ்டோரி
மேலவளவு

தி.மு.க-வின் முரசொலி அறக்கட்டளை வளாகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்திருக்கும் விவகாரத்தில் பதறிக்கொண்டு ஆர்வம் காட்டும் பா.ஜ.க தரப்பு, மேலவளவு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றமே கண்டனம் தெரிவித்தும் அமைதியாக இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி நம்மிடம் பேசிய மதுரை மாவட்ட திராவிடர் விடுதலை கழகச் செயலாளர் மணி அமுதன், “தாழ்த்தப்பட்ட மக்கள்மீதான வன்முறைகளுக்கு எதிராக பா.ஜ.க எப்போதுமே குரல்கொடுத்ததில்லை. ஆனால், திடீரென பஞ்சமி நில மீட்பர்களைப்போல் பேசிவருகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஜெயலலிதா கட்டிய சிறுதாவூர் பங்களாமீது புகார் வந்தபோதே குரல்கொடுத்திருக்க வேண்டும். தி.மு.க-வை மட்டும் இலக்காக வைத்து குற்றம் சுமத்துவதன்மூலம் அவர்களின் நோக்கம் புரிகிறது.

மணி அமுதன்
மணி அமுதன்

மேலவளவில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேரைக் கொடூரமாகக் கொலைசெய்து ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருந்த 13 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருக்கிறது. இதை உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டித் துள்ளது. உண்மையிலேயே பட்டியல் சமூகத்தினர்மீது அக்கறையிருந்தால் இதற்கு எதிராக பா.ஜ.க குரல் கொடுத்திருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சமி நிலம் பற்றி பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துக்கு புகார் அனுப்பியதும் உடனே நோட்டீஸ் விடுகிறார்கள்.

பஞ்சமி நில விவகாரத்தில் பதற்றம்... மேலவளவு குற்றவாளிகள் விடுதலையில் சைலன்ட்!

இதுமட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன்பு மதுரை அருகே பாலமேடு மறவப்பட்டியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவனின் முதுகு கிழிக்கப்பட்டது. அதற்கு முன்பு கச்சநத்தத்தில் மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். தொடர்ந்து பல்வேறு இடங்களில் பட்டியல் சமூகத்தினர்மீதான வன்முறைகள் தொடர்கின்றன. அப்போதெல்லாம் வாய் திறக்காத பா.ஜ.க-வினர், பஞ்சமி நில விவகாரத்தில் பதறுவது அரசியல் நாடகம்தான்” என்றார்.

பஞ்சமி நில விவகாரத்தில் பதற்றம்... மேலவளவு குற்றவாளிகள் விடுதலையில் சைலன்ட்!

இதுகுறித்து பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசனிடம் பேசினோம். “முரசொலி அறக்கட்டளை வளாகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்று தி.மு.க ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். பிறகு பேசலாம். தவிர, ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். மேலவளவு குற்றவாளிகளை எதன் அடிப்படையில் விடுதலை செய்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதுபற்றி கட்சியில் ஆலோசித்துவிட்டு, கருத்து தெரிவிப்போம். இவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று கூறும் அமைப்புகள்தான் ‘குண்டுவெடிப்பு வழக்கில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகிறார்கள்” என்றார் காட்டமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism