Published:Updated:

“சாதிய எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம்!”

‘பாக்ஸர்’ தீனா
பிரீமியம் ஸ்டோரி
News
‘பாக்ஸர்’ தீனா

தெறிக்கவிடும் தீனா

‘வடசென்னை’, ‘தெறி’, ‘பிகில்’ என்று பல படங்களில் வில்லனாக வந்து, தமிழ் சினிமா ரசிகர்களைத் தெறிக்க வைத்துக்கொண்டிருப்பவர் ‘பாக்ஸர்’ தீனா. தற்போது, சாதிக்கு எதிராக அவர் தெறிக்கவிடும் கருத்துகள், இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கின்றன. சென்னை, காசிமேட்டில் இருக்கிறது தீனாவின் வீடு. அந்தப் பகுதிக்கேயுரிய மிகமிக எளிமையான வீடு. அங்கேதான் அவரைத் தேடிச் சென்று சந்தித்தோம். அவரிடம் பேசப் பேச... ‘தீனாவுக்குள்ளும் இத்தனை நெருப்பா’ என்று நாம் அதிசயித்துப் போனோம்.

“பொதுமேடைகளில் சாதிக்கு எதிரான கருத்துகளைப் பேசிவருகிறீர்கள். ஏதேனும் எதிர்ப்புகள் வருகின்றனவா?”

“நான் இதுவரை எந்தவொரு சாதி குறித்தும் தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசியது கிடையாது. அம்பேத்கரில் ஆரம்பித்து பெரியார், கக்கன், காமராஜர், முத்துராமலிங்கனார் என அனைத்து தலைவர்களையும் எனக்குப் பிடிக்கும். அண்ணன் திருமாவளவன் மீட்டிங் என்றாலும், அய்யா ராமதாஸ் மீட்டிங் என்றாலும் பாகுபாடு பார்க்காமல் முன்னால் அமர்ந்து கேட்பேன். அதனால், எனக்கு சாதிய உணர்வோ அடையாளமோ கிடையாது. பாணன், பறையன், துடியன், கடம்பன் என்று தொழில்முறைப் பிரிவுகளுடன் சாதியற்றக் குடிகளாக வாழ்ந்துவந்த மரபைக்கொண்டது நம் தமிழ்ச் சமூகம். 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சாதி எனும் தீண்டாமையின் பிடி இங்கே இறுக ஆரம்பித்திருக்கிறது.

வரலாற்றைப் படித்தறியாமல், சாதிவெறி பிடித்துத் திரிகிற சாதிய மனநோயாளிகளாக இருப்பவர்களிடமிருந்து என் போன்றோருக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். ஆனால், அதற்காக அவர்கள்மீது நான் கோபம் கொள்ள மாட்டேன். ஏனெனில், அவர்களும் என் சகோதரர்கள் தான். வரலாற்றைப் படித்ததாலும் கேட்டுத் தெரிந்து கொண்டதாலும் தான் நான் இப்படிப் பேசுகிறேன். அப்படி வரலாற்றைப் படிப்பதற்கும் கேட்பதற்குமான வாய்ப்பு எனக்கு எதிராகப் பேசிக்கொண்டி ருக்கும் சகோதரர்களுக்கும் கிடைக்கும்போது, அவர்களுக்கும் தெளிவு கிடைக்கும். அது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“சாதியத்துக்கு எதிரான உங்களது கொந்தளிப்பின் பின்னணி என்ன?”

“தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன், முற்படுத்தப்பட்டவன் இப்படி எந்த அடையாளத் துக்குள்ளும் என்னை நீங்கள் அடைக்க முடியாது. காரணம், சாதி என்றால் என்னவென்றே சொல்லித்தரப்படாத சூழ்நிலையில் வளர்க்கப் பட்டவன் நான். ஆனால், தீண்டாமைக் கொடுமைகளை நேரில் பார்த்திருக்கிறேன். இன்றுவரையிலும் சாதி தன் ஆதிக்கத்தை எப்படியெல்லாம் உருமாற்றி ஆட்சி செய்து வருகிறது என்ற உண்மைகள் தெரிந்தபோது, சாதிய விஷத்துக்கு எதிராக என் எதிர்ப்புகளையும் நான் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன். அதைத் தவிர வேறு எந்தப் பின்னணியும் எனக்குக் கிடையாது.”

‘பாக்ஸர்’ தீனா
‘பாக்ஸர்’ தீனா

“ `காதல், சாதியை ஒழிக்கும்’ என்று மேடைகளில் நீங்கள் பேசுகிறீர்கள். எதிர்தரப்பு சொல்லும் நாடகக் காதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“எல்லா சமூகங்களிலும் நல்லவர், கெட்டவர் உண்டு. யாரோ ஓரிருவர் செய்யும் கெட்ட விஷயங்களுக்காக அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது ஏற்புடையதல்ல. ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனைவரும் யோக்கியர்களா, சாதியின் பெயரால் பாலியல் வன்கொடுமை செய்துகொண் டிருக்கும் சைக்கோக்களை எப்படி நியாயப்படுத்து கிறீர்கள்? காதல் என்றால் காதல்தான். அதில் நல்ல காதல், கள்ளக்காதல், நாடகக் காதல் என்றெல்லாம் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் அது அரசியல்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“`பாரதியாரை முன்னிலைப்படுத்திய அளவுக்கு பாரதிதாசனை எவரும் முன்னிலைப்படுத்த வில்லை’ என்று பேசியிருக் கிறீர்கள்... பாரதியாரை அடித்தட்டு மக்கள் வரையிலும் கொண்டுசேர்த்தவர்கள் பொதுவுடைமைத் தோழர்கள்தான். அவர்கள்மீதுதான் விமர்சனம் வைக்கிறீர்களா?”

“அவர்களை நான் விமர்சிக்கவில்லை. தன் கவிதையின் வழியே சமூகநீதியையும் பெண் விடுதலையையும் உயர்த்திப் பிடித்த பாரதிதாசனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று பொதுச்சமூகத்தைத்தான் நான் கேள்வி கேட்கிறேன். சினிமாவில்கூட பாரதியாரை மட்டுமே உச்சத்துக்குக் கொண்டுபோய் வைத்தவர்கள் யார், ஏன் அவர்கள் பாரதிதாசனைப் பற்றி ஒரு வரிகூடப் பேசாமல் மறைத்துவிட்டார்கள்? இந்த அரசியலைத்தான் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

“நீங்கள் இதுபோன்ற கருத்துகளைப் பேசுவதால், சினிமா வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் வராதா?”

“நான் ஒட்டுமொத்த திரைத்துறையையும் விமர்சிக்க வில்லை. குறிப்பிட்ட நபர்கள் தொடர்ச்சியாகச் செய்து வரும் அரசியலைத்தான் விமர்சிக்கிறேன். இன்றைய தேதியில் சினிமாதான் எனக்கு சோறுபோடுகிறது. அதற்காக கண்ணெதிரில் நடந்து கொண் டிருக்கிற அநியாயங் களைப் பற்றி விமர்சனம்கூட செய்யக்கூடாதா? நான் சினிமாவுக்கு நேர்மையாக இருக்கிறேன்... அதுபோதும்.”