Published:Updated:

`அவர் எந்தக் கட்சிக்குத் தலைவர்..?' - ரஜினி மீது பாயும் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக ரஜினி சொன்ன கருத்துக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ``தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் நிரூபித்துள்ளன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் கூறி வருகிறார். அவர் எந்தக் கட்சிக்குத் தலைவராக இருக்கிறார்? ரஜினிகாந்த் ஒரு நடிகர்தான். சம்பந்தம் இல்லாத ஒருவர் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பெங்களூரு புகழேந்தி, அ.தி.மு.க-வில் இணைய கடிதம் கொடுத்தால், தலைமைக் கழகம் பரிசீலித்து முடிவெடுக்கும்.

`ஜெயலலிதா சொன்னார்; எடப்பாடி கண்டுகொள்ளவில்லை!’ - மூன்றாகப் பிரித்தும் கோபம் அடங்காத வேலூர்

சென்னையில் காற்று மாசு இல்லை என்பதை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். மாநில தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு. அவர்கள்தான் உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும். குறித்த காலத்தில் தேர்தலை அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.

ரஜினி
ரஜினி

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். தொல்லியல்துறை வசமுள்ள மாமல்லபுரத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுற்றுலாத் தலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.