Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

`இந்தியாவின் தந்தையாக திகழ்கிறார் பிரதமர் மோடி’ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ட்ரம்ப். அதைக் கேட்டு `என்னமா ஃபீல் பண்ணி கூவுறார்யா..!’ என மோடியும் ஆனந்த கண்ணீர் வடித்துவிட்டார்.

ஐடியா அய்யனாரு!

`இந்தியாவின் தந்தையாக திகழ்கிறார் பிரதமர் மோடி’ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ட்ரம்ப். அதைக் கேட்டு `என்னமா ஃபீல் பண்ணி கூவுறார்யா..!’ என மோடியும் ஆனந்த கண்ணீர் வடித்துவிட்டார்.

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

இந்த வித்தியாசக் கூவலில் இருந்து ஒரு ஐடியா பிடிக்கிறான் ஐடியா அய்யனாரு! அதான், அதேதான்... அதே பாணியில் தமிழகத்தின் சொந்த பந்தமெல்லாம் யார் எனப் பார்ப்போம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • எந்த வம்புதும்புக்கும் போகாமல், தான் உண்டு... தன் சோலி உண்டு என நேரத்துக்கு உணவு உண்டு, ஜமுக்காளத்தை விரித்து உறங்கும் பெரியப்பாவைப்போல்... தெரிகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். அடிக்கடி அப்பாவுக்கு சப்போர்ட் செய்துவிடுவதும், பிரச்னைகளை குணமாய் வாயில் சொல்வதும் என தமிழகத்தின் பெரியப்பாவாகவே திகழ்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

  • முகத்தை இறுக்கமாகவே வைத்திருக்கும் கோவக்கார சித்தப்பாவாகத் தெரிகிறார் ஸ்டாலின். குடும்பப் பிரச்னைகளின்போது துடுக்காக வாய் பேசி, சட்டையைக் கிழித்துக்கொண்டு சலம்பல் செய்து, `இனி இந்த வீட்ல காலை வெச்சேனே பாரு’ என வீர வசனம் பேசிவிட்டு வெளிநடப்புச் செய்யும் சித்தாப்பக்களை சில நேரங்களில் கண் முன் நிறுத்துவிடுகிறார் ஸ்டாலின். அவருக்கும் சித்தப்பாக்களுக்கும் நிறைய தொடர்புண்டு என்பது ‘சீனி சர்க்கரை சித்தப்பா... ஏட்டில் எழுதி நக்கல் அடிப்பா’ என அவர் சொன்னதன் மூலமே உணரலாம்.

  • `குச்சிமிட்டாய் வாங்கித் தாங்க மாமா...’ என்று நாம் அடம்பிடித்தபோது, குச்சிமிட்டாய் கிடைக்காமல் கடைக் கடையாய் அலைந்து, கடைசியில் மிட்டாயை மட்டும் வாங்கிக்கொண்டு அதில் குச்சியைச் செருகி நம் கையில் கொடுத்த பாசக்கார தாய்மாமன்களை நினைவுப்படுத்துகிறார் விஜயகாந்த். பிறகு, “மாப்ளே... வயசாகிடுச்சுலே!” என சிக்கல் சண்முகசுந்தரமாய் வசனம் பேசி, அவர்களும் அழுது, நம்மையும் அழவைப்பதில் விஜயகாந்த்தான் தமிழகத்தின் ரியல் தாய்மாமன்.

  • அக்காவாக தமிழிசை, அய்யாவாக ராமதாஸ், சின்னம்மாவாக சசிகலா, அண்ணனாக சீமான் எல்லாம் ஏற்கெனவே இருப்பதால் இத்துடன் நாம் நிறுத்திக்கொள்வோம். வேண்டுமென்றால், திடீரென வீட்டு விழாக்களுக்குக் கிளம்பி வந்து அலப்பறையைக் கொடுக்கும் தொலை தூரத்துச் சொந்தத்தைப்போல் கார்த்திக்கை எடுத்துக்கொள்ளலாம். கார்த்திக் யாரா? இப்படித்தான், தூரத்துச் சொந்தகளின் பெயரெல்லாம் அடிக்கடி மறந்துவிடும்!