Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

மூளைக்குள் இருக்கும் ‘மீம் டெம்ப்ளேட்’களை மறந்துவிடுங்கள்.

ஐடியா அய்யனாரு!

மூளைக்குள் இருக்கும் ‘மீம் டெம்ப்ளேட்’களை மறந்துவிடுங்கள்.

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்பு, அரசு நிறுவனங்கள் தனியார் மயமாதல் என அம்மாம்பெரிய பிரச்னைகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ போகவிட்டு வள்ளுவருக்கு காவிக்கலர், முரசொலிக்கு மூலப்பத்திரம், காயத்ரிக்குக் கண்டனம் என்று மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி, ‘டேக் டைவர்ஷன்’ ஆகாமலிருக்க என்ன செய்யலாம் என்று ஐடியா கொடுக்கிறான் இந்த அய்யனாரு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • முக்கியமான பிரச்னைகளை மறக்காமல் இருக்க, `கஜினி’ சூர்யாவைப்போல் உடலில் பச்சைக்குத்தி கொள்ளலாம். “ஏன், ‘கஜினி’ அமீர்கான் மாதிரி குத்தக்கூடாதா, சூர்யா மாதிரிதான் குத்தணுமா?” என சிலர் உங்களை ‘டேக் இன்டர் டைவர்ஷன்’ செய்ய முயல்வார்கள். மாட்டிக்கொள்ளாதீர்கள். அதேபோல், முக்கியச் செய்தி பற்றிய தகவல்களை எல்லாம் கத்தரியில் வெட்டி சுவரில் ஒட்டி அடிக்கடி பார்த்து வெறியேற்றிக்கொள்ளுங்கள்.

  • அடிக்கடி ஃபேஸ்புக் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். தல - தளபதி சண்டை, ராஜா - ரஹ்மான் சண்டை, லூஸ் மோகன் - `என்னத்த’ கன்னையா சண்டை என எதையாவது இழுத்துப்போட்டு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது களத்தில் இறங்கி கதக்களி ஆடலாம் என்று ரத்தம் கொதிக்கும். நெஞ்சைத் தடவிவிட்டு, கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐடியா அய்யனாரு!
ஐடியா அய்யனாரு!
  • மூளைக்குள் இருக்கும் ‘மீம் டெம்ப்ளேட்’களை மறந்துவிடுங்கள். `உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் ‘‘மறதி ஒரு தேசிய வியாதி’’ என்று சொன்ன அதே கமல்தான், ‘ஹேராம்’ படத்தில் ‘‘ஞாபகம்தான் நமக்கு வியாதி’’ என்று சொல்லியிருப்பார். ஆக, பிரச்னைகளை மறக்காமலிருக்க, மீம் டெம்ப்ளேட்களை மறந்துவிடுங்கள். இல்லையெனில், அந்தந்த நாளைக்கு அந்தந்த பிரச்னைகளுக்கு மீமைப் போட்டு ‘‘அடுத்த பிரச்னை என்னப்பா, புது மீம் போடணும்’’ என்று காத்திருக்கத் தொடங்கிவிடுவோம்.

  • “எங்களின் பூ.பு.க எனப்படும் பூனை புலியாகும் கட்சியின் தலைவர் இடிச்சபுளி மட்டும் முதல்வரானால், நம் நாடு சுபிட்சமாகும்”, “சென்னையின் மாசுக்குக் காரணம் செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள ஒரு குப்பைக்கிடங்கை எரித்ததுதான்”, “மதன்கௌரி அண்ணனுக்கு ஐன்ஸ்டினைவிட ஐ.க்யூ அதிகம். அவரை ஆட்சி செய்ய வைக்கலாம்” என பேரலல் யுனிவர்ஸில் இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை வேண்டவே வேண்டாம். நம்மை டைவர்ட் செய்யும் முயற்சிகள் பல ரூபங்களில் நடக்கும். ஜென் நிலையிலிருந்து ஜெகத்தைக் காப்பாற்றுவோம் மக்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism