Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

`நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தை, அன்றே `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் சொன்னார் இலுமினாட்டி கமல்ஹாசன்’, `கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி அன்றே ‘ஹேராம்’ படத்தில் பேசிய நவயுக நாஸ்ட்ராடமஸ் கமல்ஹாசன்’ என நெட்டிசன்கள் வெறிகொண்டு ஆதாரங்களை அடுக்கி வருகிறார்கள்.

ஐடியா அய்யனாரு!

`நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தை, அன்றே `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் சொன்னார் இலுமினாட்டி கமல்ஹாசன்’, `கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி அன்றே ‘ஹேராம்’ படத்தில் பேசிய நவயுக நாஸ்ட்ராடமஸ் கமல்ஹாசன்’ என நெட்டிசன்கள் வெறிகொண்டு ஆதாரங்களை அடுக்கி வருகிறார்கள்.

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

தேபோல், கமல் வேறு என்னவெல்லாம் நடக்கும் என முன்கூட்டியே ஐடியா கொடுத்திருக்கிறார் என்பதைச் சொல்கிறான் இந்த அய்யனாரு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* இந்திய நாட்டில்தான் எத்தனை எத்தனை பிரச்னைகள்... மக்கள் எல்லோரும் துன்பப்பட்டு, துயரப்பட்டு, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, அவஸ்தைப்பட்டு, அவமானப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பிரதமர் மட்டும், எந்த `பட்டு’ம் படாமல், பட்டாடை அணிந்து கொண்டு ஃபாரினில் சுற்றிக்கொண்டிருக்கிறார். இதையும் அன்றே `பம்மல் கே.சம்பந்தம்’ படத்தில் சொல்லியிருக்கிறார் கமல். `ஊர்ல எல்லோருக்கும் மெட்ராஸ் ஐ வந்தப்போ, அண்ணனுக்கு மட்டும் வரலை. ஏன்னா, அவர் அப்போ பாம்பேல இருந்தாரு’ எப்பூடி..!

* `ஒரே நாடு, ஒரே மொழி’ என அமித் ஷா பேசியது பெரும்சர்ச்சையானது. `இந்தியை நம்மீது திணிக்கப் பார்க்கிறார்கள்’ எனப் பலரும், `அந்த ஒரு மொழி ஏன் தமிழாக இருக்கக் கூடாது’ என சிலரும் கொந்தளித்தனர். `அந்த ஒரு மொழி தமிழாகவே இருக்கட்டும்’ என அன்றே சொல்லியிருக்கிறார் கமல். `பஞ்ச தந்திரம்’ படத்தில், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் பொதுமொழியாக தமிழ்தானே பேசுவார்கள். தந்திரம்... தந்திரம்!

* சில நாள்களுக்கு முன், வெளிநாடு சென்ற எடப்பாடி பழனிசாமி கோட்சூட்டில் வலம்வந்தார் அல்லவா! அதையும் ஊருக்குள் வெள்ளை வேட்டிச்சட்டையோடு திரியும் `இந்தியன்’ தாத்தா, ஃபாரின் சென்றதும் கோட் சூட்டில் இருப்பதாகக் காட்டியிருப்பார் கமல்.

அதேபோல், தமிழ் மக்களின் அன்பைப் பெற அரசியல்வாதிகள் தமிழ் செய்யுள் ஒப்புவிப்பதையும் `தசாவதாரம்’ படத்தில் காட்டியிருப்பார். `வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்’ என க்ளைமாக்ஸில் செய்யுள் சொல்வார் ஜார்ஜ் புஷ்.

* `ஜெய் ஸ்ரீராம்...’ எனச் சொல்லச்சொல்லி முஸ்லிம் மக்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறை, நம் நாட்டுக்கே பெருத்த அவமானம். இனி இந்த நாட்டில் சிறுபான்மை மதத்தினர் ஊமையாக இருந்தால்தான் வாழ முடியும் என்பதை, `அவ்வை சண்முகி’ படத்தில், ‘நான் முஸ்லிம்தாங்க ஒத்துக்குறேன். ஆனா, சத்தியமா ஊமைங்க’ என நாசர் வசனம் பேசுவதாக வைத்திருப்பார்.

ஆழ்வார்பேட்டை ஆண்டவர், ஐடியா அய்யனாருக்கே டஃப் கொடுப்பார்போல!