Published:Updated:

`நேர்காணல் இல்லை; மதிப்பெண் அடிப்படையிலேயே வேலை'- அரசுப்பணியில் சீர்திருத்தம் செய்யும் ஜெகன்!

``ஒவ்வொரு பதவியும் 4 லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது’ என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

`மதுக்கடைகளைக் குறைக்கும் திட்டம்’ `ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கே கொண்டுவரும் திட்டம்’ `விவசாயிகளுக்கு நிதிஉதவி’ `ஆட்டோ-கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு நிதிஉதவி’ என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறது ஆந்திர அரசு. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவி ஏற்ற 100 நாள்களுக்குள் இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆந்திராவில் அரசு வேலைகளுக்கான ஏபிபிஎஸ்சி (APPSC) தேர்வுகளில், நேர்முகத் தேர்வை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஜனவரி 2020-ம் ஆண்டுமுதல், அரசு வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், நேர்காணலுக்கும் செல்லவேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமின்றி, தேர்வுகளில் அவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். இதுதொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக்கூட்டத்தில், 2020-ம் ஆண்டுக்கான ஆந்திரமாநில அரசுப் பணி தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடுவதுகுறித்து ஆலோசித்தார். அதில் இடம் பெற வேண்டிய பணியிடங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. விரைவில் தேர்வுகள் விவரம் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி... தடம் மாறும் தவப்புதல்வன்!

அரசு வேலைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான முதல் படியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த கிராமச் செயலகத்திற்கான (Gram Sachivalayam) தேர்வில், வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சரச்சையை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகள், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிமீது கடுமையான புகார்களை முன்வைத்தனர். ஊழியர்கள் சிலர் வேண்டுமென்றே இவ்வாறு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இதையடுத்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஒரு மாதத்துக்குள் மறு தேர்வை நடத்தி முடிவுகளை வெளியிட்டது. ``ஒவ்வொரு பதவியும் 4 லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது’ என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கவும், தங்களுக்கு சாதகமானவர்களை அரசுப் பணியில் அமர்த்துவதற்கு எதிராகவும், இந்த முடிவை ஆந்திரா அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், `லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் முயற்சி’ என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முதலில் அரசு எடுத்து நடத்தும்... அப்புறம் மதுக்கடைகள் மூடப்படும்!"- ஜெகன் மோகனின் அதிரடி பிளான்