Published:Updated:

சேலம்: `துணை முதல்வர் பதவி; பா.ஜ.க கோரினால் பரிசீலிப்போம்!' - ரங்கசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரங்கசாமி பேட்டி
ரங்கசாமி பேட்டி ( எம். விஜயகுமார் )

``பா.ஜ.க மூன்று அமைச்சர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் சேர்ந்து ஆட்சி அமைக்கவிருக்கிறோம்” - ரங்கசாமி

``புதுவையில் துணை முதல்வர் பதவி என்பது இதுநாள் வரை கிடையாது. ஒருவேளை மத்திய பா.ஜ.க அரசு கோரிக்கை வைத்தால் துணை முதல்வர் பதவி குறித்துப் பரிசீலனை செய்வோம். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கவிருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி.

சாமி தரிசனம்
சாமி தரிசனம்

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. அதையடுத்து முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி விரைவில் பதவி ஏற்கவிருக்கிறார். அதனால் தன் இஷ்ட தெய்வமான சேலம் ஜங்ஷன் அருகேயுள்ள அப்பா பைத்தியம் சாமி ஆலயத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

''வருகிற 7-ம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. நான் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறேன். பா.ஜ.க மூன்று அமைச்சர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் சேர்ந்து ஆட்சி அமைக்கவிருக்கிறோம். புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் துணைநிலை ஆளுநர் முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசுக்கும் சிறந்த முறையில் நிச்சயம் ஆதரவு தருவார்.

ரங்கசாமி
ரங்கசாமி

புதுவையில் துணை முதல்வர் பதவி என்பது இதுநாள் வரை கிடையாது. ஒருவேளை மத்திய பா.ஜ.க அரசு கோரினால் துணை முதல்வர் பதவியை பரிசீலனை செய்வோம். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கவிருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதுவையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. நாங்கள் பொறுப்பேற்றதும் மேலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு