Published:Updated:

ஷியாம் சரண் நேகி: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்... 106 வயதில் காலமானார்!

இந்தியாவின் முதல் வாக்காளர்

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்கை பதிவு செய்த இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் சரண் நேகி தன்னுடைய 106 வயதில் காலமானார்.

ஷியாம் சரண் நேகி: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்... 106 வயதில் காலமானார்!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்கை பதிவு செய்த இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் சரண் நேகி தன்னுடைய 106 வயதில் காலமானார்.

Published:Updated:
இந்தியாவின் முதல் வாக்காளர்

இமாச்சல பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இவர் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை தனது 106- ஆவது வயதில் மரணமடைந்தார். இதுவரை 34 முறை தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்.

ஷியாம் சரண் நேகியின் மறைவைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``இமாச்சல் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்காக ஷியாம் சரண் நேகி, தபால் மூலம் தனது இறுதி வாக்கைப் பதிவு செய்தார். இதற்காக அவரை கின்னூர் துணை ஆணையர் அவருடைய இல்லத்தில் கவுரவித்தார். அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்'' என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் முதல் வாக்காளர்
இந்தியாவின் முதல் வாக்காளர்

மேலும் தேர்தல் குழுவின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ,`` ஷியாம் சரண் நேகி தேசத்துக்கு ஆற்றிய சேவைகளுக்கு நாங்கள் என்றும் நன்றிப்பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்" என்றார்.

அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கின்னூரில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இறுதிச்சடங்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றும் மாநில தேர்தல் அதிகாரி மகேஷ் கார்க் தெரிவித்தார். மேலும் அவரது மறைவிற்கு இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.