Published:Updated:

`தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கே இனி மது' - மதுக்கடைகளுக்கு கேரள அரசு புதிய உத்தரவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேரள மாநில மதுக்கடையான பீவரேஜஸ்
கேரள மாநில மதுக்கடையான பீவரேஜஸ்

`ஒரு டோஸ் வேக்ஸின் எடுத்துக்கொண்ட சான்றிதழ் அல்லது ஆர்.டி-பி.சி.ஆர் டெஸ்ட் நெகட்டிவ் சான்றிதழுடன் செல்லும் குடிமகன்களுக்கு மட்டுமே மதுக்கடைகளில் மது வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரளத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துவருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-க்கும் அதிகம் ரிப்போர்ட் ஆகிறது. நேற்று மட்டும் 21,445 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி கடைகளுக்குப் பொருள்கள் வாங்கச் செல்பவர்கள், ஆர்.டி-பி.சி.ஆர் சோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டது. இவை இரண்டும் இல்லாமல் இருந்தால் மூன்றாவது ஆப்ஷனாக கொரோனா பாதிப்பு வந்து, அதன் பின்பு நலமடைந்து ஒரு மாதம் ஆனதாக ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், மதுக்கடைகளில் மது வாங்கப் போகும் நபர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மதுக்கடைகள் நடத்தப்படுவதுபோல கேரளத்தில் பீவரேஜஸ் என்ற நிறுவனம் மூலம் அரசு மது விற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்தநிலையில், கேரள ஐகோர்ட் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் ஒரு வழக்கை விசாரித்ததற்கு இடையே அரசின் புதிய கட்டுப்பாடுகளை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறுகையில், ``திருமண வீடுகள், மரண வீடுகளில் கொரோனா விதிகளை அமல்படுத்தும் அரசு, மது விற்கும் கடைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்காதது ஏன்... கடைகளுக்குப் பொருள்கள் வாங்கச் செல்லும் நபர்கள் ஒரு டோஸ் வேக்ஸின் போட்டிருக்க வேண்டும் எனக் கூறும் அரசு, ஷாப்களுக்கு மது வாங்கச் செல்லும் நபர்களும் வேக்ஸின் எடுத்திருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அப்படிக் கட்டுப்பாடு விதித்தால், மது வாங்குவற்காக நிறைய பேர் வேக்ஸின் போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும்.

மது வாங்குவதற்கு மக்கள் கூட்டமாகக் கூடுகின்றனர். மதுவின் வருமானம் அரசுக்கு வருகிறது, ஆனாலும் அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாகம் கேரளத்தில் இருக்கிறது. மக்களின் ஆரோக்கியமே கோர்ட்டுக்கு முக்கியம்" என விமர்சித்திருந்தார். இதையடுத்து கேரள அரசு, மதுக்கடைகளுக்கு மது வாங்கச் செல்லும் குடிமகன்களுக்கும் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

கொரோனா: ஊரடங்குக்கு மாற்று.. பரவலைக் கட்டுப்படுத்த மூன்றுகட்ட திட்டங்களை அறிவித்த கேரளா!
மதுக்கடைகளில் கூட்டம்
மதுக்கடைகளில் கூட்டம்

அதன்படி `ஒரு டோஸ் வேக்ஸின் எடுத்துக்கொண்ட சான்றிதழ் அல்லது ஆர்.டி-பி.சி.ஆர் டெஸ்ட் நெகட்டிவ் சான்றிதழுடன் செல்லும் குடிமகன்களுக்கு மட்டுமே மதுக்கடைகளில் மது வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது குடிமகன்களும் சான்றிதழுடன் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று மது வாங்கிவருகின்றனர். வேக்ஸின் அல்லது நெகட்டிவ் சான்று இல்லாதவர்கள் அந்தச் சான்று வைத்திருக்கும் நபர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அல்லது கமிஷன் கொடுத்து மது வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு