மாவோயிஸ்ட்டுகளைப் பிடிக்க கேரள அரசால் உருவாக்கப்பட்ட ‘தண்டர்போல்ட்’ எனும் சிறப்பு கமாண்டோ படைப் பிரிவினரால் நடத்தப்படும் என்கவுன்டர்கள், பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

சம்பவம் 1: 2016 நவம்பர்... நிலம்பூர் வனப் பகுதியில் தண்டர்போல்ட் பிரிவினர் நடத்திய தாக்குதலில் குப்பு தேவராஜ், அஜிதா என்கிற இரண்டு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

சம்பவம் 2: 2019 மார்ச்... வயநாடு மாவட்டத்தில் ஒரு ரிசார்ட் அருகே தண்டர்போல்ட் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜலீல் என்கிற மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார்.

சம்பவம் 3: 2019 அக்டோபர் 28-ம் தேதி... பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி பகுதியில் தண்டர்போல்ட் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மணிவாசகம், கார்த்தி, ரமா, அரவிந்த் ஆகிய நான்கு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோயிஸ்ட்டு களால் நிறுவப்பட்டுள்ள அமைப்பு, பவானி தளம். அதன் தலைவராக இருந்த மணிவாசகமும் அவரின் சகாக்களும்தான் கொல்லப் பட்டவர்கள். இதில் மணிவாசகம், கார்த்தி இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். மஞ்சக்கண்டியில் நடந்த இந்த என்கவுன்டர்தான் கேரள சட்டசபை வரை விவாதப்பொருளாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சிகள் முதல் பழங்குடி மக்கள் வரை ‘இந்தத் தாக்குதல் போலியானது’ என்று குற்றம்சாட்டுகின்றனர். ‘ஆதிவாசி தாய்க்குலச் சங்க’த்தின் துணைத் தலைவர் ஷிவானி, ‘‘போலீஸ், மாவோயிஸ்ட் இருதரப்பினருக்கும் இடையே நான்தான் நடுநிலையாளராக இருந்தேன். மாவோயிஸ்ட்டுகள் சரண்டராகத் தயாராகத்தான் இருந்தனர். போலீஸ் தாக்குதல் நடத்திய நேரத்தில், அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். மணிவாசகம், உடல்நலக் குறைவால் மிகவும் அவதிப்பட்டுவந்தார். கொல்லப்பட்ட அரவிந்த், தன் மனைவி ஸ்ரீமதி மற்றும் ஆறு மாதக் குழந்தையுடன் இங்கு இருந்தார். இந்தச் சூழ்நிலையில் அவர்கள் எப்படி தாக்குதல் நடத்துவார்கள்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்த மாவோயிஸ்ட் சைனா, ‘‘கேரளாவில் சி.பி.எம் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை ஏழு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியின் தவறுகளை நாங்கள் தட்டிக்கேட்பதுதான் இவர்களுக்குப் பிரச்னையாக இருக்கிறது. `இரண்டு நாள்களாக சண்டை நடந்தது’ என்று போலீஸார் கூறுகின்றனர். அதிலும், மாவோயிஸ்ட்டுகள்தான் முதலில் தாக்குதல் நடத்தியதாகக் கூறுகின்றனர். ஆனால், போலீஸ் தரப்பில் ஒருவருக்குக்கூட காயமில்லை. அது எப்படி? மாவோயிஸ்ட்டுகள் மட்டுமல்ல, ஆர்.டி.ஐ மூலம் ஊழல்களை அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்களும் கொலை செய்யப் படுகின்றனர். `மாவோயிஸ்ட்டுகளை அழிக்க வேண்டும்’ என்று அமித் ஷா சொல்கிறார். பினராயி விஜயன் அதைச் செய்துவருகிறார். கேரளத்தை ஆட்சிசெய்வது இடதுசாரிகள் பெயரில் இருக்கும் வலதுசாரிகள்தான்’’ என்றார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘‘மாவோயிஸ்ட்டுகளே முதலில் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலைத்தான் போலீஸார் நடத்தினர். மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து ஏ.கே 47 உள்ளிட்ட பல நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்று கூறியுள்ளார்.

பாலக்காடு எஸ்.பி-யான விக்ரம் சிவா, ‘‘சரணடைவதற்கான திட்டம் ஏதும் அவர்களிடம் இல்லை. மாவோயிஸ்ட்டுகள் கூட்டத்தில், தப்பிச் சென்றவர்களைத் தேடிவருகிறோம். இந்த என்கவுன்டர் போலியானதல்ல’’ என்றார்.

விவகாரத்தின் தகிப்பு இன்னும் அடங்கவில்லை!

கேரளாவில் தண்டர்போல்ட் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகளில் ஒருவர் கார்த்தி. கண்ணன் என்றும் அழைக்கப்படும் இவர், சென்னையைச் சேர்ந்தவர்.

2001-2004 காலகட்டத்தில், தன்னார்வ உதவிகள், போராட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுவந்தார். பிறகு, திருப்பூரில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். 2006-ம் ஆண்டு, திருப்பூரில் மாவோயிஸ்ட் குழு ஒன்றை காவல்துறையினர் கைதுசெய்த போது, கார்த்தியும் அப்போது கைதானார். மதுரை மத்திய சிறை, ஒடிஷா மாநில கோராபுட் சிறை ஆகியவற்றில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தி, 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பின் ராணுவப் பிரிவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் செயல்பட்டார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், மணிவாசகம். கல்லூரிப் படிப்பை முடித்ததும் முற்போக்கு இளைஞரணி அமைப்பில் சேர்ந்து, தர்மபுரி பகுதியில் கந்துவட்டி, விவசாயப் பிரச்னைகளுக்காகப் போராடியவர். ஆத்தூரில் தனியார் பள்ளியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, மாவோயிஸ்டுகளின் விவசாயிகளுக்கான அமைப்பான உழவர் உழைப்பாளர் மாமன்றத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ஆனார். அப்போது ஆத்தூர் கீரிப்பட்டியில் தலித் குடியிருப்பு கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்திய தற்கு ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அவர்களைக் கண்டித்து மணிவாசகம் நடத்திய போராட்டம், அவரை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்தியது. கடந்த 2002-ல் ஊத்தங்கரையில் ஆயுதப்பயிற்சி பெற்றபோது கைதுசெய்யப்பட்டு, பொடா சிறைவாசியாக நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அங்கிருந்து வெளியே வந்தவர், 2008-க்குப் பிறகு தலைமறைவாகி மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆயுதப்படைப் பொறுப்பாளர் ஆனார். மாவோயிஸ்ட் அமைப்பில் இருக்கும் இவரின் மனைவி கலா, தங்கை சந்திரா, தங்கையின் கணவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறையில் இருக்கின்றனர்.