Published:Updated:

இந்திக்கு எதிரானவர்களின் வீட்டுப் பிள்ளைகள் தமிழில்தான் படிக்கிறார்களா? - குஷ்பு `பளீச்' பேட்டி

குஷ்பு
குஷ்பு

நம்முடைய அடுத்த தலைமுறை தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே பறந்து செல்ல வேண்டாமா? தமிழ் மொழியை நானும் உயிராக நேசிக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவிடம் சில கேள்விகள்...

''பா.ஜ.க-வின் புதிய கல்விக் கொள்கை மற்றும் பொது சிவில் சட்டங்களை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் வரவேற்கிறீர்களா?''

''நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். ஆனால், மத்திய அரசு புதிதாக ஒரு கொள்கை - சட்டத்தைக் கொண்டுவரும்போது அதை முழுமையாகப் படித்துப் பார்த்து, புரிந்துகொண்டுதான் என் தனிப்பட்ட ஆதரவைத் தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தை மதிக்கிற எங்கள் கட்சி, அதற்கான சுதந்திரத்தை எனக்கு அளித்திருக்கிறது.''

''புதிய கல்விக் கொள்கையிலுள்ள இந்தித் திணிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?''

''புதிய கல்விக் கொள்கையைப் படிக்கிறபோது, அதில் எங்கேயும் இந்தி மொழியைத் திணிப்பதாக எனக்குத் தெரியவில்லை. நம்முடைய எதிர்ப்பை நாம் தெரிவிக்கலாம். அதே சமயம் நாடு முன்னேற வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறை தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே பறந்து செல்ல வேண்டாமா? தமிழ் மொழியை நானும் உயிராக நேசிக்கிறேன். ஆனால், தமிழ் மொழிக்கு ஆதரவாகவும், இந்திக்கு எதிராகவும் பேசுகிறவர்களின் வீட்டுப் பிள்ளைகள் தமிழில்தான் படித்து வருகிறார்களா?''

''கட்சிக் கொள்கைக்கு நேர் எதிராக இதுபோன்ற கருத்துகளைச் சொல்கிறபோது, கட்சிக்குள்ளிருந்து நெருக்கடி அதிகரிக்காதா?''

''காங்கிரஸ் கட்சிக்குள் நான் வந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. கட்சிரீதியாக எந்தவொரு விஷயத்தையும் நான் விட்டுக்கொடுத்ததில்லை. அதேசமயம் கட்சித் தரப்பிலான எல்லா விஷயங்களுக்கும் என்னால் தலையாட்ட முடியாது. என் மனதுக்கு எது சரியெனப்படுகிறதோ அந்தக் கருத்தைத் தனிப்பட்ட முறையில் நான் பேசுவேன். அதற்காக காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்!''

''காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரான நீங்களே, எதிர்க் கருத்தை கொண்டிருக்கும்போது, கட்சியின் கொள்கைகளை எப்படி வீரியமாக எடுத்துச் செல்ல முடியும்?''

''எனக்கு எது சரியென்றுபடுகிறதோ, அதைப் பற்றி மட்டும்தான் பேசுவேன். மற்றபடி கொள்கைரீதியாக நான் எப்போதும் கட்சியுடனேயேதான் இருக்கிறேன்.''

''அ.தி.மு.க-வில் குஷ்பு இணையவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையில் அமைச்சர் வேலுமணி ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றனவே?''

''எனக்கே இது புதிதாக இருக்கிறது. பா.ஜ.க-வில் நான் சேரவிருப்பதாகத்தான் இதுவரை செய்திகளைக் கிளப்பிவிட்டார்கள். எனவே, அது எனக்குப் பழகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க-வில் நான் சேரப்போவதாக எங்கிருந்துதான் கிளப்பிவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. அமைச்சர் வேலுமணியை நான் இதுவரை நேரில் சந்தித்ததுகூட இல்லை!''

> ''உங்கள் இருப்பையும் எதிர்ப்பையும் ஒருசேர பதிவுசெய்வதற்காகவே இது போன்று முரண்பட்டு பேசிவருவதாகக் கட்சியினர் சொல்கிறார்களே..?'' > '' `நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும்' என உங்களைப்போலவே பிரியங்கா காந்தியும் கருத்து தெரிவித்திருக்கிறாரே?'' > '' 'ஜோதிராதித்ய சிந்தியா அல்லது சச்சின் பைலட்' என்ற கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?'' > ''காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்குப் பஞ்சமா... ஏன் நேரு குடும்பத்துக்குள்ளிருந்து மட்டுமே தலைவரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?'' > ''தமிழக அரசுக்கு ஆண்மை இருக்கிறதா, இல்லையா என்று ஹெச்.ராஜாவும், அமைச்சர் ஜெயக்குமாரும் மோதிக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணியவாதியாக இந்த விவாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

- இந்தக் கேள்விகளுக்கு குஷ்பு அளித்த பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3hxmXr7 > "ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுப்பது என் கௌரவத்துக்கு இழுக்கு!" - குஷ்பு ஓப்பன் டாக் https://bit.ly/3hxmXr7

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு