Published:Updated:

லெனின் படத்தை வைத்திருப்பது சட்டவிரோதமா?

லெனின் படத்தை வைத்திருப்பது சட்டவிரோதமா?
பிரீமியம் ஸ்டோரி
News
லெனின் படத்தை வைத்திருப்பது சட்டவிரோதமா?

காளியப்பன்

‘பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்’ என்பவை பாரதியின் வரிகள். ஆனால், இந்தியாவில் இன்று இதுதான் நடைமுறை. உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் உருவம், மாமேதை லெனினின் உருவம்.

`அந்தப் படத்தை வைத்திருப்பதே சட்டவிரோத நடவடிக்கை’ என ஓர் அரசு அறிவிக்குமானால், அது எவ்வளவு பெரிய சர்வதிகார அரசாக, அநாகரிக அரசாக இருக்க வேண்டும்.

மத்திய மோடி அரசும், பல மாநிலங்களில் ஆட்சிபுரியும் பா.ஜ.க அரசுகளும் அரசியல் சட்ட உரிமைகளை துவம்சம் செய்கின்றன. எதிர்க்கருத்து என்ற ஒன்றையே தேச விரோதச் செயலாக்கி, ஒடுக்குமுறைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

வெர்னன் 
 கொன்சால்வஸ் - அருண் 
ஃபெரைரா - கௌதம் 
நவ்லாகா - சுதா 
பரத்வாஜ் - வரவர 
ராவ் - ஆனந்த் 
டெல்டும்டே
வெர்னன் கொன்சால்வஸ் - அருண் ஃபெரைரா - கௌதம் நவ்லாகா - சுதா பரத்வாஜ் - வரவர ராவ் - ஆனந்த் டெல்டும்டே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடந்ததைப்போல, அஸ்ஸாமிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. இதில் கலந்துகொண்டதற்காக ஊழல் எதிர்ப்புப் போராளியும், விவசாயிகள் சங்க ஆலோசகருமான அகில் கோகோய், அவரின் உதவியாளர் பிட்டு சோனோவால் ஆகிய இருவரையும் சட்ட விரோத தடுப்புச் சட்டம் (UAPA) என்ற ஆள்தூக்கிச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது அஸ்ஸாமை ஆளும் பா.ஜ.க அரசு. இவர்களை `மாவோயிசத் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள்’ என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்கு அரசு சொல்லும் ‘ஆதார’ காரணங்கள் என்னவென்று தெரியுமா? ‘ஃபேஸ்புக் பக்கத்தில் லெனின் படம் வைத்திருந்தார். அவர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைப் புத்தகம் இருந்தது. அவர்கள் தங்கள் நண்பர்களை `தோழர்’ என்று அழைக் கிறார்கள்; செவ்வணக்கம் கூறுகிறார்கள். `முதலாளித்துவத்தை அழிக்க வேண்டும்’ என்ற பொருள்பட லெனின் கூறிய வாசகத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் வைத்துள்ளார்கள்.’ - இவைதான் அகில் கோகோயும் அவரின் இரு உதவியாளர்களும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடைய வர்கள் என்பதற்குக் கடந்த மே 29-ம் தேதி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள ஆதாரங்கள்.

அகில் கோகோய் -  பிட்டு சோனோவால்
அகில் கோகோய் - பிட்டு சோனோவால்

முதல் பார்வையில் இந்தக் குற்றச்சாட்டுகள் நகைச்சுவையாகத் தோன்றலாம். இதன் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால், `அரசுக்கு எதிரான கருத்து கொண்டிருப்பவர்களையும், அரசை விமர்சிப்பவர்களையும் ஒடுக்கவும் சிறைப்படுத்தவும் எந்த நியாயமான, உண்மையான காரணங்களும் தேவையில்லை’ என்பதே.

`மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி’ என்பதுதான் இப்போது பா.ஜ.க அரசின் சட்டம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த இந்த ஆறு ஆண்டுகளில் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையான பொய்க் குற்றச்சாட்டுகளே.

டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியரான சாய்பாபா, உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 90 சதவிகிதம் முடமான, சக்கர நாற்காலியில் நடமாடும் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனக் கூறியதையும், போலி ஆதாரங்களையும் நீதிமன்றம் ஏற்று தண்டித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய வல்லுநர் குழு, `பேராசிரியர் சாய்பாபாவை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்ததையும் அரசு நிராகரித்துவிட்டது. 19 வகையான கடும் நோய்களுடன் போராடும் ஒருவருக்குப் பிணை வழங்க மறுக்கிறது உயர் நீதிமன்றம்.

கடந்த 2018-ல் மராட்டிய மாநிலம், பூனேயில் நடந்த பீமா கோரகன் 200-ம் ஆண்டு விழாவில் ஏற்பட்ட கலவரத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள் என 11 பேர்மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு போட்டு சிறை வைத்திருக்கிறது மராட்டிய அரசு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகழ்பெற்ற மக்கள் கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ், அருண் ஃபெரைரா, வெர்னன் கொன்சால்வஸ், கௌதம் நவ்லாகா ஆகியோருக்குப் பிணை மறுக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்றனர். கடந்த மாதம் இதே வழக்கில் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, பத்திரிகையாளரும், மனித உரிமைப் போராளியுமான கெளதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே மத்திய அரசின் பல எண்ணெய் நிறுவனங்களின் செயல் இயக்குநராகவும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

லெனின் படத்தை வைத்திருப்பது சட்டவிரோதமா?

உலக அளவில் அறியப்பட்ட அறிஞர் சுதா பரத்வாஜ், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப் பணித்துக்கொண்ட வழக்குரைஞர். தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு ஆலோசகராக விளங்கியவர். பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே பாபாசாகிப் அம்பேத்கரின் பேத்தியின் கணவர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண் பத்திரிகையாளர் உட்பட மூன்று சிறந்த பத்திரிகையாளர்கள்மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் முதலாண்டில் மட்டும் 382 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீமா கோரகன் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள 11 அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவே இல்லை. அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே இல்லை. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த், முன்னாள் மராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி கோல்சா பட்டேல் ஆகியோர்தான். இதைவிடக் கொடுமை, இந்த அறிஞர்கள் பிரதமர் மோடியைக் கொலை செய்யச் சதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுதான். ஒன்றரை ஆண்டுகளாக எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. நீதிமன்றமும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

உலக அளவில் மதிப்பு பெற்ற சொந்த நாட்டு அறிஞர்களைப் பொய்க் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்து வதைக்கும் அரசு ஆட்சியில் இருக்குமென்றால், அந்த நாட்டில் ஜனநாயகம் எப்படி வாழும்? `இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ எனச் சொல்லிக்கொள்வதைப் போல கேலிக்கூத்து வேறு ஏதேனும் இருக்க முடியுமா?

சாய்பாபா
சாய்பாபா

பா.ஜ.க அரசுகள் தங்கள் ‘எதிரி’ என்று கருதுபவர்களை ஒடுக்குவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நீதிமன்றங்கள்? ஒடுக்குமுறைக்கு அவையும் துணைபோகும்போது சட்டத்தின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு பாசிசமே அரங்கேறும். ‘அரசியல் சட்டத்தின் கடமைகளை உச்ச நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது’ என மூத்த வழக்குரைஞர்களும், முன்னாள் நீதிபதிகளும் வெளிப்படையா கவே குற்றம்சாட்டுகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர் களின் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் இரக்கமற்ற முறையில் நடந்து கொண்டது நாடு முழுவதும் கண்டனத்துக்கு உள்ளானது. அதன் பிறகே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பேசியது உச்ச நீதிமன்றம்.

தமிழகத்தில் உபா சட்டத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தவில்லையே தவிர மாற்றுக் கருத்தை, விமர்சனத்தை ஒடுக்குவதில், ஜெயலலிதாவைவிடத் தீவிரமாகச் செய்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு. பத்திரிகையாளர் வரதராஜன் தெரிவித்த மிகச் சாதாரண கருத்தைக்கூடப் பொறுக்க முடியாத எடப்பாடி அரசு, முதியவர் என்றும் பாராமல் அவர்மீது வழக்கு போட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் ‘தோழர்’ என்று அழைத்துக் கொள்பவர்களைக் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார் அன்றைய கோவை காவல் ஆணையரும், இன்றைய மத்திய மண்டல ஐ.ஜி-யுமான அமல்ராஜ். தமிழகம், அறிவிக்கப்படாத போலீஸ் ஆட்சியில்தான் இருக்கிறது.

உபா சட்டம் அரசியல் சட்டத்துக்கும், இந்தியா உட்பட உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட மனித உரிமைச் சாசனத்துக்கும் எதிரானது. `கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என்கிறது அரசியல் சட்டம். `30 நாள்கள் காவல் நிலையத்தில் வைத்துக்கொள்ளலாம்’ என்கிறது உபா சட்டம். உபா சட்டத்தின்கீழ், ‘தடைசெய்யப்பட்ட அமைப்பு, அவற்றுடன் தொடர்புடையவர்களை மட்டுமே கைது செய்ய முடியும்’ என்பதை, ‘எந்த ஒரு தனிநபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க முடியும்’ எனச் சட்டத் திருத்தம் செய்தது மோடி அரசு.

உபா சட்டம் பாசிசத்தை நிரந்தரமாக்கும் சட்டம். அரசியல் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கும் சட்டம். உழைக்கும் மக்கள், அறிவுத்துறையினர், ஜனநாயகவாதிகள்மீது போடப்பட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத விலங்கு உபா சட்டம். ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெறுவதற்கு முதல்படி, உபா சட்டத்தை உடைப்பதுதான்.