Published:Updated:

`பிரமாண்ட மரியாதை; தினந்தோறும் ஊர்வலம்?' - மதுரை `ஜெயலலிதா சிலை' சர்ச்சை

அ.தி.மு.கவினர் தினந்தோறும் ஊர்வலமாகச் சிலைக்கு மரியாதை செய்ய ஊர்வலமாக வருவதற்கு எந்தவொரு தடையும் விதிக்காமல் பாதுகாப்பு வழங்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

ஜெயலலிதா சிலை
ஜெயலலிதா சிலை

ஜெயலலிதா நினைவு தினத்தன்று மதுரை கே.கே.நகர் ரவுண்டானா அருகிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜெயலலிதாவுக்குச் சிலை திறக்கப்பட்டு, அன்றுமுதல் அ.தி.மு.கவினர் மாலை அணிவித்து அஞ்சலி செய்யத் தொடங்கினார்கள்.

அ.தி.மு.க ஊர்வலம்
அ.தி.மு.க ஊர்வலம்

சில மாதங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் சிலை பராமரிப்பு என்று தடுப்புகள் ஏற்படுத்திச் சிலர் வேலை செய்து வந்தபோதே உள்ளே ஜெயலலிதா சிலை அமைப்பதற்கு வேலை நடப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இதற்கு எந்தவோர் அனுமதியும் பெறவில்லை என்றும் சொல்லப்பட்டது.

`எம்.ஜி.ஆர் சிலை பராமரிப்பு; திடீரென உருவான ஜெயலலிதா சிலை!' -கொதிக்கும் மதுரை தி.மு.க

தலைவர்கள் சிலைகளைப் பொதுவெளியில் வைக்க உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை விதித்துள்ள நிலையில், அனுமதி வாங்காமல் ஜெயலலிதாவுக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க நிர்வாகிகள் மதுரை கலெக்டரிடம் புகார் அளித்தார்கள். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தினம்தோறும் அ.தி.மு.க நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள்.

அ.தி.மு.க ஊர்வலம்
அ.தி.மு.க ஊர்வலம்

மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் சாலையில் சிறு நிகழ்ச்சி நடத்தினாலோ, மக்கள் பிரச்னைக்காக ஊர்வலமாகச் சென்றாலோ அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வார்கள். ஆனால், தற்போது அ.தி.மு.கவினர் தினந்தோறும் ஊர்வலமாக வந்து சிலைக்கு மரியாதை செய்கிறார்கள். ஊர்வலமாக வருவதற்கு எந்தவொரு தடையும் விதிக்காமல் பாதுகாப்பு வழங்கி வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இன்று அ.தி.மு.கவின் மாநகர் வர்த்தக அணிச்செயலாளர் கறிக்கடை முத்துகிருஷ்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கான கட்சியினர் ஊர்வலமாக வந்து ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செய்தனர்.

ஜெயலலிதா சிலை
ஜெயலலிதா சிலை

இதனால் அப்பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அமைதிகாப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.