‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?’ என்று தி.மு.க எம்.பி-யான தயாநிதி மாறன் பேசிய சர்ச்சையே தீரத நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை செருப்பால் அடித்ததாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் மீது புகார் எழுந்துள்ளது.

திருவண்ணாமலையை அடுத்த பறையம்பட்டு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த கருணாநிதி. அதே கிராமத்தைச் சேந்த பட்டியல் சமூகப் பட்டதாரி இளைஞர் ராம்குமார். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். இவரைத்தான் கருணாநிதி செருப்பால் அடித்து அவமானப்படுத்தி யிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது? ராம்குமாரிடம் பேசினோம். “மே 15-ம் தேதி காலை 10 மணி இருக்கும். பறையம்பட்டு ஏரிக்கரையில் நான் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். எனக்கு எதிர் திசையில் பைக்கில் வந்துகொண்டிருந்த தருமன், தவறான திசையில் வந்து என்மீது இடித்துவிட்டார். ‘தவறான திசையில் வந்து இடிக்கிறீர்களே... இதே வேகமாக வந்து இடித்திருந்தால் இருவருக்குமே அடிப்பட்டு இருக்குமே!’ என்று நான் கோபத்துடன் கேட்டேன். அதற்கு தருமன், ‘நானும் தலைவரும் வருவது உனக்குத் தெரியவில்லையா? நீ ஒதுங்கிப் போக வேண்டியதுதானேடா!’ என்று என்னை கெட்டவார்த்தையில் திட்டினார். நானும் பதிலுக்குத் திட்டினேன்.

அப்போது, தருமன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பஞ்சாயத்துத் தலைவர் கருணாநிதி, என்னை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, ‘என்னையா எதிர்த்துப் பேசுற... உங்களை அப்பவே ஊரைவிட்டுத் துரத்தியிருக்கணும். அதைச் செய்யாமல்விட்டதால எங்களை எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா?’ என்று கேட்டு அவரது செருப்பைக் கழற்றி என் கன்னத்திலும் நெஞ்சிலும் அடித்தார்.

இதைப் பார்த்த கருணாநிதியின் அண்ணன் பார்த்தசாரதி என்னவென்றுகூட விசாரிக்காமல் ஓடிவந்து, ‘மோளம் அடிச்சுப் பொழப்பு நடத்துறவன் நீ... வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க வக்கில்லை. என் தம்பியையே எதிர்த்துப் பேசுறியா?’ என்றபடி அவரும் அடிக்க ஆரம்பித்து விட்டார். தகவல் தெரிந்து ஓடிவந்த என்னுடைய அம்மாவையும் செருப்பால் அடித்துவிட்டார்கள். எங்களுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.

உடனே தச்சம்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்தேன். முதலில் எனது புகாரை ஏற்க மறுத்தார்கள். நீண்டநேரம் போராடிய பிறகே எஃப்.ஐ.ஆர் போட்டார்கள். இந்த நிலையில், தச்சம்பட்டு தி.மு.க ஒன்றிய கவுன்சிலரான ரமணன் எனக்கு போன் செய்து, ‘பஞ்சாயத்துப் பேசி முடிச்சுக்கிடலாம் கேஸை வாபஸ் வாங்கு’ என்று மிரட்டுகிறார்” என்றார் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து, தச்சம்பட்டு காவல் துறையினரிடம் கேட்டபோது, “பறையம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். ஆறாவது குற்றவாளியான தருமன் என்பவரை கைதுசெய்துள்ளோம். கருணாநிதி உட்பட மற்ற ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடிவருகிறோம். விரைவில் கைதுசெய்வோம்” என்றனர்.

கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘இதுதொடர்பாகப் பேசினால், எங்கள்மீதும் வழக்கு தொடர்ந்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. எனவே எங்களின் பெயர்களை வெளிட வேண்டாம். ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் கருணாநிதிக்கு எதிராகப் போட்டியிட்ட ராம்குமார் தோல்வியடைந்து விட்டார். அந்தப் பகையை மனதில் வைத்துக் கொண்டு அன்றைய தினம் நடந்த சண்டையின் போது கருணாநிதியைக் கேவலமான வார்த்தையில் ராம்குமார் திட்டினார். அந்தக் கோபத்தில் செருப்பால் அடிக்க முயன்றார் கருணாநிதி. அது ராம்குமார் மீது படக்கூட இல்லை. மற்றபடி சாதிப் பெயரைச் சொல்லி திட்டவெல்லாம் இல்லை’’ என்றனர்.

இதுதொடர்பாக பறையம்பட்டு கிராமத்தில் சிலரிடம் பேசினோம். “ஊராட்சி மன்றத் தலைவர் தி.மு.க-வில் செல்வாக்கு உள்ளவர். எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். ராம்குமார் திராவிடர் கழகத்தில் திருவண்ணாமலை மாவட்ட மாணவரணித் தலைவராக உள்ளார். சம்பவத்தின்போது ஊராட்சி மன்றத் தலைவர் குடும்பமே சேர்ந்து ராம்குமாரை அடித்தது. ராம்குமார் போலீஸில் புகார் கொடுத்ததும், ஊராட்சி மன்றத் தலைவர் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுதான் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்” என்றனர்.

இதுதொடர்பாக எ.வ.வேலுவிடம் பேசினோம். “நான் யாருக்கும் பாதுகாப்பு கொடுக்கவில்லை. அடித்தவர் ரெட்டியார், அடிப்பட்டவர் ஆதிதிராவிடர். உள்ளாட்சித் தேர்தலின்போதே இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. அதுதான் இப்போது நடந்த சண்டைக்கும் காரணம். என்னுடைய வழக்கறிஞரை வைத்து இருவரையும் அழைத்து சமாதானம் பேசச் சொல்லியிருக்கிறேன். சமாதானம் பேசிக்கொண்டிருக்கின்றனர். நான் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் பகுத்தறிவு பற்றித்தான் பேசுவேன். கட்சிகளின் கொள்கை பற்றிய விழிப்புணர்வு என்பது கிராமங்களுக்கு இன்னும் முழுமையாகப் போய் சேரவில்லை” என்றார்.