`‘சேவை நோக்கில் தொடங்கப்பட்ட `108 ஆம்புலன்ஸ்’ சேவையை, இப்போது வணிகமாக்கி விட்டார்கள். காலாவதியான வாகனங்களை வைத்துக் கொண்டு மக்கள் உயிரோடு விளையாடுகிறார்கள்’’ எனக் கொந்தளிக்கிறார்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்.

தமிழக அரசுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, ஆந்திராவைச் சேர்ந்த ‘ஜி.வி.கே எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற தனியார் நிறுவனம், 2009-லிருந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்துவருகிறது. தமிழகத்தில் 948 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. 4,700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆம்புலன்ஸ்களைப் பராமரிப்பது, ஊழியர்களைப் பணியமர்த்தி சம்பளம் வழங்குவது போன்ற பணிகளை மட்டுமே ஜி.வி.கே நிறுவனம் செய்கிறது. இதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட் கூட்டத்தொடரில், அந்த நிறுவனத்துக்கு வரிவிலக்குடன் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை தமிழக அரசு வழங்கிவருகிறது.

‘இவ்வளவு தொகையை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஜி.வி.கே நிறுவனம், ஆம்புலன்ஸ்களை முறையாகப் பராமரிப்பதில்லை. காலாவதியான ஆம்புலன்ஸ்களை இயக்குகின்றன’ எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக, காஞ்சிபுரம் சம்பவத்தைச் சொல்கிறார்கள்.

‘‘காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை யிலிருந்து பெண் நோயாளி ஒருவர் மேல்சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்ஸில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். திடீரென அந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்க, நோயாளியும் ஆம்புலன்ஸ் டிரைவரும் பரிதாபமாக இறந்தனர். ஆம்புலன்ஸ் பழுதாக இருந்ததுதான் விபத்துக்குக் காரணம். இந்தப் பழுதுகுறித்து ஒரு வாரத்துக்கு முன்பே தன் மேலதிகாரியிடம் எழுத்துபூர்வமாக வலியுறுத்தியிருக்கிறார் அந்த டிரைவர். இதை கண்டுகொள்ளாத அந்த மேலதிகாரியின் அலட்சியப்போக்குதான் இரண்டு உயிர்களை காவுவாங்கியிருக்கிறது’’ என்று கொந்தளிக் கிறார்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.

பெயர், அடையாளத்தை மறைத்துப் பேசிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிலர், ‘‘108 ஆம்புலன்ஸ் களைப் பராமரிக்க, மாவட்டம்தோறும் மேலாளர் தலைமையில் தனி அதிகாரி மற்றும் மூன்று கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளது ஜி.வி.கே நிறுவனம். அவர்கள் எதற்காக இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பிரேக் ஃபெயிலியர், டயர் தேய்மானம், இன்ஜின் கோளாறு என முக்கியமான பிரச்னைகளைக்கூட அவர்கள் கண்டுகொள்வ தில்லை. பெரும்பாலான வாகனங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. இன்னொரு பக்கம், ஊழியர்களையும் கசக்கிப் பிழிகின்றனர்.

போதுமான சம்பளம் கொடுப்பதில்லை. சொந்த ஊரிலோ அருகில் உள்ள ஊரிலோ பணியமர்த்தாமல், வெகுதூரத்தில் பணியமர்த்து கிறார்கள். பயணப்படியும் கொடுப்பதில்லை. இதனால் நாங்கள் பொருளாதாரரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம். வழியிலேயே உயிரிழப்பு ஏற்பட்டால், சில நேரங்களில் ஆம்புலன்ஸையும் எங்களையும் மக்கள் தாக்குகிறார்கள். ஓய்விடமோ, கழிவறையோ கிடையாது. இதனால், நாங்கள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறோம்” என்றனர்.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் இருளாண்டி, ‘‘108 ஆம்புலன்ஸ் சேவையில், காலாவதியான இருநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடுகின்றன. இதுகுறித்துச் சொல்லிச் சொல்லி, எங்களுக்கு தொண்டை வற்றியதுதான் மிச்சம். 108 ஆம்புலன்ஸ் சேவையில் 95 சதவிகிதப் பணிகளை அரசு மேற்கொள்கிறது. ஐந்து சதவிகித பராமரிப்புப் பணிகளை மட்டுமே ஜி.வி.கே நிறுவனம் செய்கிறது. இதைக்கூட அவர்கள் சரிவர செய்வதில்லை. இந்த ஆண்டு மட்டும் ஜி.வி.கே நிறுவனத்துக்கு 260 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. ஆனால் 108 ஆம்புலன்ஸ்களின் பராமரிப்பு, படுமோசமாக இருக்கிறது. மக்கள் உயிரோடு விளையாடுகிறோம் என்பதை அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை. மாவட்டம்தோறும் அதிகாரிகள் கை நீட்டும் தனியார் வொர்க்ஷாப்பில்தான் ஆம்புலன்ஸ்களை சர்வீஸுக்கு விடவேண்டும். சர்வீஸ் கட்டணம் 1,000 ரூபாய் என்றால், 2,000 ரூபாய்க்கு பில் வாங்கி வரச் சொல்கிறார்கள். 40,000 கி.மீ தூரம்தான் ஒரு டயரை உபயோகப்படுத்த வேண்டும். இவர்களோ 80,000 கி.மீ ஓட்டச் சொல்கிறார்கள்.

பணி அழுத்தம் காரணமாக நாங்கள் ஏதாவது சொல்லிவிட்டால், டிரான்ஸ்ஃபர் அல்லது டிஸ்மிஸ் செய்கிறார்கள். எதிர்பாராதவிதமாக ஆட்டோ மோதினால்கூட, ஆம்புலன்ஸ் டிரைவரை 100, 200 கி.மீ தொலைவில் உள்ள ஊர்களுக்கு இடமாற்றம் செய்கிறார்கள். ஊதிய உயர்வுகுறித்த பேச்சுவார்த்தையே ஆரம்பிக்கவே பல மாதங்கள் தாமதப்படுத்துகிறார்கள். அதற்கும் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. `108 ஆம்புலன்ஸ்களுக்காக, மண்டலம் தோறும் சொந்தமாக வொர்க்ஷாப் அமைக்கலாம்’ என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், யாரும் அதைக் காதில் வாங்கவில்லை. பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 260 கோடி ரூபாயில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளை அரசு ஆய்வு செய்தாலே குட்டு வெளிச்சத்துக்கு வந்துவிடும்’’ என்றார் குமுறலாக.

இதுகுறித்து ஜி.வி.கே நிறுவனம் தரப்பில் பேசினோம். ‘‘இந்த ஆண்டு மட்டும் 188 ஆம்புலன்ஸ்களின் ஆயுட்காலம் முடிந்துவிட்டன. அதற்குப் பதிலாக தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திலிருந்து 156 ஆம்புலன்ஸ்களை வாங்கியிருக் கிறோம். டெல்லியிலிருந்து தேசிய சுகாதார மையத்தினர் 66 ஆம்புலன்ஸ் களைக் கொடுக்கிறார்கள். அந்த வாகனங்கள் வரும் வரை, ஓடக்கூடிய வாகனங் களை ஓட்டிக்கொண்டிருக் கிறார்கள். மண்டலம்வாரியாக தனி வொர்க்ஷாப் அமைப்பது சாத்திய மில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனைகளில் இருந்த ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் உட்காரவே முடியாது. இப்போது இருக்கும் `108’ வாகனங்கள் அனைத்தும் கார்ப்பரேட் மருத்துவமனை ஆம்புலன்ஸுகளுக்கு நிகராக இருக்கின்றன. ஆம்புலன்ஸ் சேவைக்கு, கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பணம் வாங்குகின்றன. நாம் முற்றிலும் இலவசமாகக் கொடுக்கிறோம். கார்ப்பரேட் நிறுவனம் 10 வாகனங்களை வைத்து நிர்வகிப்பதற்கும், நாம் ஆயிரம் வண்டிகளை நிர்வகிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன’’ என்றனர்.