‘‘இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். அவர்கள் எவரும் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லத் தேவையில்லை” - ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இப்படி முழங்குகிறார்கள்.

‘‘இலங்கை அகதிகள் 90 சதவிகிதம் பேர் இலங்கைக்குத் திரும்பிச் செல்லவே விரும்புகிறார்கள். அவர்கள் அங்கே குடியமர்த்தப்பட வேண்டும்’’ - பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் ஓயாமல் இப்படி முழங்கிக்கொண்டிருக்கிறார்.

இவற்றுக்கு நடுவே, ‘‘இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதுதான் சரியான தீர்வு. அதைத்தான் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுத்தியுள்ளோம். அவரும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்’’ என்று நடுவாந்திரமாக ஒரு விஷயத்தை முன்வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இவர்கள் ஆயிரம் பேசட்டும். ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிக முக்கியம். அதைத் தெரிந்து கொள்வதற்காக, அந்த மக்களிடையே கருத்துக் கேட்பு நடத்தத் திட்டமிட்டு, அதன்படியே நடத்தி முடித்துள் ளோம். இந்த நிலையில், கருத்துக் கேட்பு நடத்தியதற்காக ஜூனியர் விகடன் நிருபர்கள்மீது அதிரடியாக வழக்குகளைப் பாய்ச்சி, பயமுறுத்தும் வேலையை ஆரம்பித்திருக்கின்றன மத்திய மற்றும் மாநில அரசுகள்.

பொதுவாகவே, குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்தப் போராட்டங்களையெல்லாம் ஒடுக்குவதற்காக அபாயகரமான வழிகளை கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன மத்திய மற்றும் மாநில அரசுகள். அஸ்ஸாம் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி எனப் பல பகுதிகளிலும் போராட்டங்களை ஒடுக்குவதில் தீவிரம்காட்டப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டா ளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கைதுசெய்யப் படுகின்றனர். அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பான போராட்டங்களில் மட்டும் ஐந்து பேர் கொல்லப் பட்டுள்ளனர். 393 பேர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடையடைப்புப் போராட்டம் அறிவித்ததால், ஏறத்தாழ 100 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை. இதில் 21 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 1,100 பேர் கைதுசெய்யப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 5,558 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் தொடர்புடையதாகக் கூறி கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரியின் குடும்பத்தினரைக் காணச் சென்ற பிரியங்கா காந்தியின் கழுத்தை நெரித்து, கீழே தள்ளியதாக உத்தரப்பிரதேச காவல்துறை மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்படுகிறது. கர்நாடகாவின் மங்களூருவில் போராட்டக்காரர்களை ஒடுக்க காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில், இருவர் பலியாயினர். காவல்துறை தாக்குதல் நடத்திய இடங்களிலெல்லாம் பொதுமக்களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும்மேலாக, இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ‘‘பல்கலைக்கழக மாணவர்கள், நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களை வழிநடத்தும் தலைவர்களிடம் தலைமைப் பண்பு இல்லை” என்று ஓர் அரசியல்வாதிபோல் பேசியிருப்பது, பலரையும் அதிரவைத்துள்ளது. கோலம் போட்டவர்களைக்கூட கைதுசெய்து அச்சுறுத்தி யிருப்பதுதான் உச்சக்கட்டக் கொடுமை. சென்னை, பெசன்ட்நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் போட்ட பெண்களைக் கைதுசெய்திருக் கிறது தமிழக அரசு. மொத்தத்தில் அரசாங்கத்துக்கு எதிராக யாருமே பேசிவிடக் கூடாது என்பதைத்தான் உணர்த்த ஆரம்பித்துள்ளன மத்திய - மாநில அரசுகள். இந்நிலையில், அடுத்த பாய்ச்சலாகத்தான் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ண ஓட்டத்தை அறியவே, தமிழகம் முழுவதும் இருக்கும் அகதிகள் முகாம்களில் 37 முகாம்களைச் சேர்ந்த அகதிகளைச் சந்தித்தோம். அவர்களுடைய விருப்பம் என்ன என்பது பற்றி அறிந்து கொள்வதற்காக, கருத்துக் கேட்புப் படிவத்தை அளித்து பதில்களைப் பெற்றோம்.

கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது தெரிந்ததும் டிசம்பர் 27-ம் தேதி போலீஸ் தரப்பு திடீரெனப் பரபரப்பானது. நிருபர்கள்மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்தன. எதுவாக இருப்பினும் எதிர்கொள்ளக் காத்திருந்தோம். அடுத்தநாள் (டிசம்பர் 28) கன்னியாகுமரி மாவட்ட நிருபர் சிந்து மற்றும் புகைப்படக்காரர் ராம்குமார் ஆகியோர்மீது மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை காவல் நிலையங்களில் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பிரிவு 447 - குற்றமுறு அத்துமீறி நுழைதல் (குற்றம்புரியும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைதல்); பிரிவு - 188 அரசாங்க அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்படியாமல் இருத்தல். அதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்; பிரிவு-505 (1) பி மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராகக் குற்றம்புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், பிரசுரங்களை விநியோகித்தல் ஆகியவைதான் அந்தப் பிரிவுகள்.

இதில் பிரிவு-505 (1) பி என்பது, பிணையில் விட முடியாத சட்டப்பிரிவாகும். ‘குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அப்படியான சூழலில் இத்தகைய கருத்துக் கேட்பு எப்படிக் குற்றச்செயலாகும் என்பதுதான் புரியவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பில் இடம்பெற்ற கேள்விகள் முந்தைய பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. இவற்றின் மூலமாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுமா, இத்தகைய கேள்வி களை அந்த அகதிகளிடம் கேட்டு, கருத்துகளைப் பெற்றது அத்துமீறலா, அதன் மூலமாக யாருக்கெல்லாம் பிரச்னை உருவாகியிருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

கருத்துக் கேட்பு என்பது, காலம்காலமாக நடத்தப்படும் ஒரு விஷயமே. கடந்த காலங்களில் அரசியல் மாற்றங்கள், பொதுமக்களுக்கான தேவைகள், கல்வி தொடர்பான மாற்றங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் கருத்துக் கேட்புகளை விகடன் நடத்தியுள்ளது. விகடன் இணையதளம் மூலமாகவும் அடிக்கடி கருத்துக் கேட்புகள் நடத்தப்படுவது வழக்கமே. அனைத்துமே பொதுநலன் கருதி எடுக்கப்படுபவையே. யாரும் இதையெல்லாம் ஒரு பிரச்னையாகப் பார்த்தது கிடையாது. காரணம், அதிலிருக்கும் பொதுநலன்தான். அப்படியிருக்க, இலங்கை அகதிகளிடம் கருத்துக் கேட்பு நடத்தியது பெருங்குற்றம்போல் சித்திரித்து, பிணையில் வர முடியாத பிரிவின்கீழ்கூட வழக்கு பதிவுசெய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதற்காக மக்களின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கும் அரசுகள், தற்போது ஊடகங்களின் பேனா முனையையும் உடைத்திருக்கின்றன. பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் அரசாங்கத்தின் இந்த அடாவடிக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசும் சமூகச் செயற் பாட்டாளர்கள், “பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் செய்ய முடியாத விஷயங்களைக்கூட தமிழகத்தில் செய்துபார்க்கும் அளவுக்கு பா.ஜ.க தலைமை, அ.தி.மு.க அரசை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் ‘பேனாவை உடை, கோலத்தை அழி’ என்கிற ரீதியில் பா.ஜ.க தலைமை ஆர்டர் போடுகிறது. அதை அப்படியே தலை வணங்கி ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிறது அ.தி.மு.க. அரசு.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எந்தளவுக்கு அவர் பா.ஜ.க-வை எதிர்த்தாரோ, அதற்கு நேர்மாறாக எல்லா விஷயங்களிலும் பா.ஜ.க-வின் முடிவுகளை ஆதரித்து, அதன் அடிமைக் கட்சியாகவே மாறிப்போயிருக்கிறது அ.தி.மு.க தலைமை. அ.தி.மு.க அரசின் ஊழல்கள், அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு வழக்குகள், சி.பி.ஐ வழக்குகள் ஆகியவற்றை பா.ஜ.க அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணமும் இதுதான்!’’ என்று குற்றம்சாட்டுகின்றனர்.

மொத்தத்தில் நாடு முழுவதுமே ஓர் அசாதாரண சூழல் நிலவுகிறது. பத்திரிகையாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருமே அதிகார மையங்களால் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். மைய அரசாங்கத்திடம் அதீத அதிகாரக் குவிப்பு என்பது, எத்தகைய ஆபத்துக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு உதாரணமாகி இருக்கிறது நம் நாடு!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான இலங்கை அகதிகளின் நிலைப்பாடு குறித்து, ஒரு சர்வே எடுக்கக் களமிறங்கியது ஜூவி டீம். தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 37 முகாம்களில் மொத்தம் 952 நபர்களிடம் (449 ஆண்கள், 503 பெண்கள்) சர்வே எடுக்கப்பட்டது. சர்வே முடிவுகள் இங்கே...

விஜயசங்கர், ஆசிரியர், ஃப்ரன்ட்லைன்

“தமிழகத்தில் முன்பெல்லாம் அவதூறு வழக்குப்போடுவார்கள். அதற்காக அலைக்கழிக்கப்படுவதே பெரும் தண்டனையாக இருக்கும். தற்போது நிருபர்கள், புகைப்படக்காரர்கள்மீது நேரடியாக வழக்குத் தொடுத்திருப்பது கருத்து சுதந்திரத்தை முடக்குவதில் இவர்கள் அடுத்தகட்டத்தை எட்டிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. மாற்றுக்கருத்துகளை முடக்குவதில் பா.ஜ.க அரசையே மிஞ்சிவிட்டது அ.தி.மு.க அரசு. இது அந்தக் கட்சி பா.ஜ.க மீது வைத்துள்ள தீவிர விசுவாசத்தைக் காட்டுகிறது.

கருத்து சுதந்திரம் என்பது கருத்துகளைத் தெரிவிப்பது மட்டுமல்ல... கருத்துகளைப் பெற்றுத் தருவதற்கான சுதந்திரத்தையும் உள்ளடக்கியதே. இதற்கான உரிமை பத்திரிகையாளர்களுக்கும், முகாமில் இருக்கும் தமிழர்களுக்கும் உண்டு. அதைப் பறிப்பது ஜனநாயக விரோத நடவடிக்கையே!”

சீமான், ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்

“நியாயமாக இந்தக் கருத்துக் கேட்பை தமிழக அரசுதான் செய்திருக்க வேண்டும். அரசு செய்யத் தவறிய நிலையில், ஊடகம் அதைச் செய்யும்போது அதற்கு தடை விதிப்பது, வழக்குப் போடுவது சர்வாதிகாரம், கொடுங்கோல் ஆட்சியின் கோரம். இதற்காகத்தான் இவர்களுக்கு மத்திய அரசு விருதுகளைக் கொடுக்கிறது. அரசின் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.’’

பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மூத்த தலைவர்

“பத்திரிகைச் சுதந்திரத்தில் தலையிடுவது சரியல்ல என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து. ஆனால் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட நிருபரும் புகைப்படக்காரரும் இலங்கை அகதிகள் முகாமுக்குள் சென்று, அங்கு இருந்த மக்களிடம் விசாரித்ததாகச் சொல்கிறார்கள். முகாமின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவேண்டியது அவரவர் கடமை. இந்தச் சூழலில், அங்கே என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் ஏதும் எனக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அதனால், இதுகுறித்து நான் கருத்து எதுவும் சொல்வதற்கில்லை!’’

மு.க.ஸ்டாலின், தி.மு.க தலைவர்

‘‘எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவற்றைப் பறிக்கும் ஜனநாயக விரோத காரியங்களைத்தான் இன்றைய எடப்பாடி அரசு தாராளமாகச் செய்துவருகிறது. தங்களது ஜனநாயக உரிமைகளை அமைதியான வழியில் பயன்படுத்தும்வகையில் சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த மாணவ மாணவியர் கோலம் போட்டுள்ளனர். அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈழத்தமிழர் அகதிகள் முகாமுக்குச் சென்ற ஜூனியர் விகடன் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்படக்கலைஞர் ராம்குமார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களைச் சந்தித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்பது தவறு என்றால், இந்த அரசாங்கம் அந்த அகதிகள் முகாமுக்குச் சென்று கருத்து கேட்டதா? ‘ஈழத்தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருகிறேன்’ என்று சொல்லும் முதலமைச்சர், அந்த மக்களின் உணர்வை, கருத்தை அறிய அரைமணி நேரமாவது செலவுசெய்தாரா?’’

கே.எஸ்.அழகிரி, மாநிலத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு, யாரோ சிலர் தவறான ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆலோசனைகள் அ.தி.மு.க அரசையே வீழ்த்திவிடும். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கட்சிகளை ஆதரித்துப் பேசுவதற்கும், பிரிவினைவாதம் பேசுவதற்கும்கூட கருத்து சுதந்திரம் இருக்கிறது. காவல்துறை அரசுக்கு உதவியாக இருக்கலாம்; அரசின் வேலைக்காரர்களாக இருக்கக் கூடாது. பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.’’

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.எம்

‘‘இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமுக்குச் சென்ற செய்தியாளர் மீதும் புகைப்படக்காரர் மீதும் வழக்குப் போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கைத் தமிழர்களைச் சந்திப்பது சட்டவிரோதம் என்று தமிழக அரசு கருதுமானால், அதை பகிரங்கமாக முதல்வர் அறிவிக்கட்டும். திருநெல்வேலியில் பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அந்த மக்களைச் சந்தித்தேன். அதற்காக, என்மீதும் எங்கள் தோழர்கள் நான்கு பேர் மீதும் காவல்துறை வழக்குப் போட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களைச் சந்திக்கக் கூடாதா, அவர்கள் என்ன தேசவிரோதிகளா அல்லது அவர்களைச் சந்திக்கச் சென்ற நாங்கள் தேசவிரோதிகளா?"