Published:Updated:

கைலாசாவில் ராமர் கோயில்!

மோடியுடன் மோதும் நித்தி...
பிரீமியம் ஸ்டோரி
மோடியுடன் மோதும் நித்தி...

மோடியுடன் மோதும் நித்தி...

கைலாசாவில் ராமர் கோயில்!

மோடியுடன் மோதும் நித்தி...

Published:Updated:
மோடியுடன் மோதும் நித்தி...
பிரீமியம் ஸ்டோரி
மோடியுடன் மோதும் நித்தி...
“நித்தியானந்தம்...” - பிரைவேட் எண்ணிலிருந்து வந்த அழைப்பை எடுத்த அந்தத் தொழிலதிபரின் மனைவியின் காதுகளில் பக்திப் பரவசமாகப் பாய்ந்தது பதிவுசெய்யப்பட்ட அந்தக் குரல்! தொடர்ந்து பேசிய பெண் ஒருவர், “பரமஹம்சர் உங்களுடன் பேச விரும்புகிறார்” என்று இணைப்பை மாற்றுகிறார். “பிளஸ்ஸிங்ஸ்... பரமஹம்ச நித்தியானந்தம்...” என்று தனது வசீகரப் பேச்சை ஆரம்பிக்கிறார் கைலாசாவின் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டிருக்கும் நித்தியானந்தா!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறார் நித்தி. இப்போது அவர் கையிலெடுத்திருப்பவை, ‘அயோத்திக்குப் போட்டியாக கைலாசாவில் ராமருக்குத் தங்கக்கோயில், தனி ரிசர்வ் வங்கி, தனி கரன்ஸி’ என மூன்று வித்தைகள்! நித்தியிடம் நெருக்கமாக இருந்து, பிறகு முரண்பாடுகள் காரணமாகப் பிரிந்து வந்தவர்கள் இது பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

ரிசர்வ் வங்கி சாத்தியமா?

“இந்திய ரிசர்வ் வங்கியின் பாணியிலேயே கைலாசாவுக்கு ரிசர்வ் வங்கித் திட்டத்தை அறிவித்திருக்கிறார் நித்தி. ஏற்கெனவே ‘ஆதி சைவ மதத்தின் அகில உலகத் தலைவரா’கத் தன்னைத் ‘தானாகவே’ அறிவித்துக் கொண்டவர் நித்தி. அதன்படி, ஆதி சைவத்தின் தாயகமான இந்தியாவையே பொருளாதாரத்திலும் பின்பற்றுவதாக தோரணையை ஏற்படுத்தியுள்ளார். தவிர, அவருக்குப் பல கோடிகளை வாரியிறைத்த பக்தர்களின் பூர்வீகமும் இந்தியாதான். எனவே, இந்தியர்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு வங்கியின் பெயரையேவைத்து அடுத்த வசூலுக்குத் தயாராகிவிட்டார் நித்தி.

அதேசமயம், தனி கரன்ஸியை அச்சடிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. ஏகப்பட்ட சர்வதேச விதிமுறைகள் உள்ளன. ஒரு நாட்டின் நாணயம் என்பது வெறும் காகிதம் அல்ல; அந்த நாட்டின் தங்கத்தின் இருப்பைப் பொறுத்தே கரன்ஸி முடிவு செய்யப்படும். நித்திக்கு இன்னும் நாடே உருவாகவில்லை; அதற்குள் வங்கி, நாணயம் என்று பிதற்றுகிறார். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை” என்றவர்கள், நித்தியின் சிவனுக்கு தங்கக்கோயில் கட்டும் திட்டத்தைப் பற்றியும் சொன்னார்கள்.

கைலாசாவில் ராமர் கோயில்!

அடேங்கப்பா... ஆயிரம் தங்கத்தூண்கள்!

“நித்தி பெங்களூருவில் இருந்த காலகட்டமான 2016-ம் ஆண்டிலேயே தனது கனவுத் திட்டமான தங்கக்கோயில் திட்டத்துக்கான முன்னெடுப்புகளைத் தொடங்கிவிட்டார். ‘பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் தங்கக்கோயில் எழுப்பப்படும். அது சைவர்களுக்கான சிவன் கோயிலாக இருக்கும்’ என்று நம்பிக்கையளித்து, பக்தர்களிடம் பல கோடி ரூபாயை வாரிக்குவித்தார். அந்த வகையில் சுமார் 1,250 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

தங்கக்கோயிலில் ஆயிரம் தூண்கள் பொருத்துவதற்கு, ஒரு தூணுக்கு எட்டரை கோடி ரூபாய் என பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டது. ‘தங்கத்தூணுக்காக நிதி கொடுப்பவர்களின் முகத்தைத் தூணில் பதித்து மரியாதை செய்வோம்’ என்று ரகளையான அறிவிப்பையும் வெளியிட்டார் நித்தி. முகத்தைப் பதிக்க பக்தர்கள் போட்டி போட்டார்கள்... டிமாண்ட் எகிறியது. எனவே, ஒரு தூணுக்கு ஒருவர் என்பதை மாற்றி, ‘ஒரு தூணின் நான்கு பக்கங்களிலும் நான்கு பேர் முகங்களைப் பதிக்கலாம்’ என அடுத்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக, பிடதியில் ஒரு தங்கத்தூணையும் நிர்மாணித்து ‘டெமோ’ காட்டப்பட்டது. இதற்குப் போட்டி போட்டுக்கொண்டு வெளிநாட்டு, உள்நாட்டு பக்தர்கள் தொகையை வாரி இறைத்தார்கள். சிலர் தங்கமாகவும் கொடுத்தார்கள்.

பணப் பரிவர்த்தனைகள் முழுக்கவே ஹவாலாதான். இப்படி வசூலிக்கப்பட்ட தொகை இந்தியா மட்டுமன்றி கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒன்பதுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18 காலகட்டத்தில் தன்வசமிருந்த பணம் முழுவதையும் வெளிநாடுகளிலுள்ள தனது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். இப்படிப் பணம் மட்டுமன்றி, பெரும் செல்வந்தர்கள் சிலர் நித்திக்குத் தங்கள் சொத்துகளையும் எழுதிக் கொடுத்துள்ளனர். காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் சில தொழிலதிபர்கள் தங்களது சொத்துகளை நித்திக்குத் தாரைவார்த்துள்ளார்கள். வெளிநாடுகளில் ஹோட்டல் நடத்திவரும் பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரும் நித்திக்குப் பல கோடி ரூபாயைக் கொடுத்துள்ளார்.

எங்கிருக்கிறார் நித்தி?

இப்போது நித்தியுடன் இருக்கும் பக்தர்களை ஆன்லைனில் தொடர்புகொண்டு, ‘கைலாசா எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால், ‘அது ஆப்பிரிக்காவில் உள்ளது, அமெரிக்காவில் உள்ளது’ என்று நேரத்துக்கு ஒரு பதிலைச் சொல்கிறார்கள். கைலாசா நாட்டுக்காக நித்தி சில தீவுகளைப் பேரம் பேசியது உண்மைதான். ஆனால், இதுவரை அவர் எந்தத் தீவையும் விலைக்கு வாங்கவில்லை. அவர் தற்போது கரீபியன் தீவிலுள்ள பர்முடாஸ் எனும் குட்டித்தீவில் வசிப்பதாகத் தகவல்கள் வருகின்றன. தனது பிரசங்கங்களை அங்கிருந்துதான் வழங்குகிறார் நித்தி. அவருடன் ஏராளமான இளம் பெண் சந்நியாசிகளும் தங்கியுள்ளனர்.

கைலாசா நாட்டுக்காக நித்தி தேர்வுசெய்த நான்கைந்து இடங்களில் எந்த இடத்துக்கும் சட்டபூர்வமான ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் கரீபியன் பகுதியிலுள்ள ‘செயின்ட் கிட்ஸ் & நிவிஸ்’, ‘செயின்ட் வின்சென்ட் & கிரனடைன்ஸ்’, ‘வனாட்டு’ ஆகிய தீவுகளில் தற்போது முதலீடுகளைச் செய்துவருகிறார் நித்தி. அந்தத் தீவுகளின் ஆளும் தரப்பிடம், ‘நான் உங்கள் நாட்டுக்கு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவேன். உங்கள் கட்டுப்பாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றை எனக்கு விலைக்குத் தர வேண்டும்’ என்று பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.

கைலாசாவில் ராமர் கோயில்!

மற்றொரு முயற்சியாக, ஜமைக்கா நாட்டின் தூதர் ஒருவருடன் நித்தியும், அவரின் வெளிநாட்டு பெண் பக்தரும் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளனர். ‘ஜமைக்காவில் கைலாசாவுக்காகத் தீவு கொடுத்தால், பணம் மட்டுமன்றி, என்னைப் பார்க்க வரும் பக்தர்கள் மூலமாக உங்கள் நாட்டுக்கு வருமானத்தையும் ஏற்படுத்தித் தருவேன்’ என்று அவரிடம் உறுதியளித்தாராம் நித்தி. அப்போது, ‘கிறிஸ்தவர்களுக்கு போப் ஆண்டவர் எப்படியோ அதுபோல இந்துக்களுக்கான தலைவர் நான் என்று அறிவித்துவிடுவேன். என் மூலமாக உங்கள் நாட்டுக்கு நிறைய வருமானம் கிடைக்கும்’ என்று நித்தி கூறியதைக் கேட்டு வாயடைத்துப் போனாராம் அந்தத் தூதர்” என்றவர்கள், அடுத்ததாக நித்தியின் ராமர் கோயில் திட்டத்தைப் பற்றிச் சொன்ன தகவல்கள்தான் ஹைலைட்!

நித்தியின் ராமர் கோயில்!

“ ‘கைலாசா’ பெயரைவைத்து வித்தை காட்டிவரும் நித்தி, பா.ஜ.க-வின் அடிமடியிலேயே கைவைத்திருப்பதுதான் ஆச்சர்யம். முதலில், ‘பிடதியில் சிவன் கோயில்’ என்று வசூலைப் போட்டார். பிறகு, 2019-ம் ஆண்டு இறுதியில் நித்தி தனது ஆன்லைன் பிரசங்கத்தில், “அயோத்தி தீர்ப்பு வெளியாகிவிட்டது. அங்கு கோயில் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டவுள்ளார்கள். அதற்கு நமது பங்காக 100 கோடி ரூபாயை அளிக்க வேண்டும்” என்று ‘ராமர் கோயில்’ அஸ்திரத்தை வீசியுள்ளார். தொடர்ந்து, தன்னிடம் ஏற்கெனவே கோடிகளைக் கொட்டிய நபர்களின் பட்டியலை எடுத்து தொடர்புகொண்டிருக்கிறார்.

அதன்படி, ராமர் கோயிலுக்கு என்று மட்டுமே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 45 கோடி ரூபாய் பணம் வசூல் செய்யப்பட்டது. இந்தத் தொகை மே மாதத்தில் 75 கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்த 75 கோடி ரூபாயை 100 கோடி ரூபாய் ஆக்க வேண்டும் என்பது நித்தியின் டார்கெட். மேலும், ‘2020-ம் ஆண்டு ஜூலை மாதமே இந்தியா வந்து, ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் பங்கெடுப்பேன்’ என்று நன்கொடையாளர்களிடம் சொல்லியிருந்தார். ஆனால், ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு வைபவமே முடிந்துவிட்டது.

கைலாசாவில் ராமர் கோயில்!

விழாவுக்கு நித்தி வராமல் போகவே... ‘ஏன் வரவில்லை’ என்று கேள்வி கேட்டுக் குடைந்துள்ளனர் நன்கொடையாளர்கள். அப்போது அவர்களிடம், புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப்போட்டிருக்கிறார் நித்தி. ‘இந்தியாவில் உள்ள மோடி அரசு, ஆதி சைவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. அதனால், வைணவத்தைத் தூக்கிப் பிடிக்கும் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இருவரும் எனக்கு அழைப்பு கொடுக்கவில்லை. அதனால்,

கைலாசாவில் ராமருக்குத் தங்கத்தில் கோயில் கட்டுவேன்’

எனப் பக்தர்களைப் பரவசமடையச் செய்துள்ளார் நித்தி.

நித்தியின் இந்த மோடி எதிர்ப்புப் பேச்சு, மத்திய அரசின் காதுகளுக்கும் எட்டியுள்ளது. ஏற்கெனவே, தேடப்படும் குற்றவாளியாக நித்தி அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் விவகாரத்தில் இதுவரை பெரிதாக மெனக்கெடாத மத்திய அரசு, தற்போது வேகம் எடுத்து விட்டது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கமான குஜராத் தொழிலதிபரின் மனைவி பல கோடி ரூபாயை நித்தியிடம் பறிகொடுத்துள்ளார். அவர் மூலம் நித்தியின் வசூல் வேட்டை விவகாரங்கள் மேலிடத்துக்குச் சென்றுள்ளன. இதைத் தொடர்ந்து, நித்திக்கு ‘உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து யாரெல்லாம் பணம் கொடுத்துள்ளார்கள்?’ என்ற விவரங்களை மத்திய அரசு சேகரிக்க ஆரம்பித்துள்ளது” என்றவர்கள் முத்தாய்ப்பாக, “விரைவில் கைலாசாவின் அதிபருக்கு இந்திய அரசு கைவிலங்கு பூட்டி னாலும் ஆச்சர்யமில்லை” என்று முடித்தார்கள்!