கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சம்ஸ்கிருத மொழி மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை 643.83 கோடி ரூபாய். அதேநேரம், சம்ஸ்கிருதத்துடன் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு, சம்ஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட பல மடங்கு குறைவான நிதியையே ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. இதனால், நாடு முழுவதுமே பல்வேறு தரப்புகளிலிருந்து அதிருப்தியான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் மக்களவையில் நடந்த விவாதத்தின்போது இந்த விவகாரம் வெளிப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா, சிவசேனா கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள், செம்மொழி களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தனர். ‘மராத்தி மொழி ஏன் செம்மொழியாக அறிவிக்கப்படவில்லை?’ என்ற கேள்வி விவாதத்தின்போது எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய கலாசாரத் துறை, சம்ஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவரங் களையும் அறிக்கையாகச் சமர்ப்பித்தது. அதில், ‘சம்ஸ்கிருத மொழி மேம்பாட்டுக் காக 2017-2018 கால கட்டத்தில் 198.31 கோடி ரூபாய்; 2018-2019 காலகட்டத்தில் 214.37 கோடி ரூபாய்; நடப்பு நிதி ஆண்டில் 231.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது’ என்று தெரிவித்திருக்கிறது. சம்ஸ்கிருத மொழி ஆய்வுக்கழகமான ‘ராஷ்டிரிய சம்ஸ்கிருத் சன்ஸ்தன்’ என்ற அரசு அமைப்புக்கு இந்தப் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதர செம்மொழி ஆய்வுக்கழகங்களுக்கு மிகக் குறைந்த நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 2017-18 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 10.59 கோடி ரூபாய். 2018-2019 நிதியாண்டில் வெறும் 4.65 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளார்கள். நடப்பு நிதியாண்டுக்கு 7.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக் கிறது. தெலுங்கு மற்றும் கன்னட மொழி ஆய்வு மையங்களுக்கும் இதே நிலைதான். அந்த மையங்களுக்கு 2017-18ம் ஆண்டில் 10 கோடி ரூபாய்; 2018-19ம் ஆண்டில் 9.9 கோடி ரூபாய்; நடப்பு நிதியாண்டில் 10.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய கலாசாரத் துறை சமர்ப்பித்த அதே பதில் அறிக்கையில், ‘ஒரு மொழி, 1500 முதல் 2000 ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் நிலையில், அதற்கு மக்கள் தரும் அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு செம்மொழி அந்தஸ்து தரப்படும். அதன் அடிப்படையில் தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஆறு மொழிகள் மட்டுமே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது. செம்மொழிகளுக்கான ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அவை செயல்பட்டுவந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு சம்ஸ்கிருதத்தைவிட 22 மடங்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, மலையாளம் மற்றும் ஒடிய மொழி ஆய்வுக்கு, மத்திய அரசு இதுவரை எந்தவித ஆய்வு மையத்தையும் நிறுவவில்லை என்பதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பது அவசியம். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தியால் மட்டுமே சாத்தியம்’ என்று ட்வீட் செய்திருந்தார். இது, பல மாநிலங்களில் விவாதங்களை உருவாக்கியது. போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில், மத்திய அரசு பிற செம்மொழிகளைவிட சம்ஸ்கிருதத்துக்கு பல மடங்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பது மக்களவையில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இதுகுறித்து மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்தான் சம்ஸ்கிருத மசோதா கொண்டுவரப் பட்டது. பிரதமரும் ‘சம்ஸ்கிருதம்தான் இந்திய மொழிகளின் தாய்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆறு மொழிகளை செம்மொழிகளாக அறிவித்தால், அவை அத்தனையையும் ஒரே மாதிரியாக அணுக வேண்டும். ஒரே மாதிரியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல், சம்ஸ்கிருதம் என்ற ஒற்றைக் கொம்பைப் பிடித்துக் கொண்டிருப்பது ஆர்.எஸ்.எஸ் சிந்தனை. இது, தற்போது கட்டற்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சம்ஸ்கிருதத்துக்கு இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்ட மத்திய அரசு, செம்மொழி தமிழ் ஆய்வு மையத்துக்கு நிரந்தர இயக்குநரை நியமிப்பதில்கூட அக்கறைகாட்டவில்லை. கீழடி அகழ்வாராய்ச்சியிலிருந்து அவர்களாகவே வெளியேறியபோதே அவர்களின் காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டது. சம்ஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கும் மத்திய அரசின் பாகுபாடு வெளிப்படையாகவே தெரிகிறது’’ என்றார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தோம். ‘‘தமிழ் என்பது, ஒரு மாநிலத்துக்கான மொழி. மாநில அரசுகளும் மாநில மொழிகளின் வளர்ச்சியில் பங்கேற்று, அதற்காக தனியே நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால் சம்ஸ்கிருதம், குறிப்பிட்ட மாநிலத்துக்கு அல்லது குறிப்பிட்ட இனத்துக்கான மொழி அல்ல. அதனால் இதில் மாநில அரசுகளின் பங்களிப்பு கிடையாது. எனவே, மத்திய அரசு பல வருடங்களாகவே நாடு முழுவதும் சம்ஸ்கிருத மொழிக்கான ஆய்வு நிறுவனங்களை உருவாக்கி, நிதி ஒதுக்கீடு செய்து, செயல்படுத்திவருகிறது. மத்திய அரசு என்றைக்குமே மொழிகளில் ஏற்றத்தாழ்வு பார்த்ததில்லை. ஒவ்வொரு மொழிக்கும், ஆய்வுகளின் தேவைக்கேற்ப மட்டுமே அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இங்கே தமிழகத்தில் தமிழ்வழிப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுவருகின்றன. தமிழ் மொழியை அரசியலாக்கி ஆட்சிக்கு வந்தவர்கள் அதுபற்றியெல்லாம் அக்கறை செலுத்தாமல், சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் தரப்படுவது பற்றிப் பேசி பிரச்னையில் குளிர்காய்ந்து கொண்டிருக் கிறார்கள்’’ என்றார்.

ஓரவஞ்சனை என்னும் முழுப்பூசணியை மறைக்க முடியுமா என்ன?