Published:Updated:

துப்பாக்கி முனையில் மசாஜ்... புகார் கொடுத்த பெண் கைது

கைதின் போது...
பிரீமியம் ஸ்டோரி
கைதின் போது...

உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சிதானா?

துப்பாக்கி முனையில் மசாஜ்... புகார் கொடுத்த பெண் கைது

உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சிதானா?

Published:Updated:
கைதின் போது...
பிரீமியம் ஸ்டோரி
கைதின் போது...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் அத்துமீறல் வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது புகார் கொடுத்த அப்பாவிப் பெண்ணை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீள முடியவில்லை. இப்போது, அதே மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க அமைச்சரான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராகப் பாலியல் அத்துமீறல் புகார் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவியை, கைதுசெய்துள்ளது காவல்துறை.

சுவாமி சின்மயானந்தா, 1999-ம் ஆண்டு வாஜ்பாய் அரசில் இணை அமைச்சராக இருந்தவர்; மூன்று முறை எம்.பி-யாகவும் இருந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஷாஜகான்பூர் என்ற இடத்தில் சின்மயானந்தாவின் அறக்கட்டளை நடத்திவரும் கல்லூரியில்தான், பாதிக்கப்பட்ட மாணவி படித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் சின்மயானந்தாவின் சிபாரிசின் பேரில்தான் கல்லூரியில் இவருக்கு இடம் கிடைத்தது. இதையே, சாதகமாக எடுத்துக்கொண்ட சின்மயானந்தா, மாணவியிடம் அடிக்கடி அத்துமீறினார். கல்லூரி ஹாஸ்டல் அறையில் அந்த மாணவி குளிக்கும்போது ரகசியமாக வீடியோ எடுத்த சின்மயானந்தா, அதைக் காட்டியே அவரைச் சீரழித்துவந்தார். ஒருகட்டத்தில் பாலியல் சித்ரவதையைத் தாங்க முடியாத மாணவி, சின்மயானந்தாவுக்கு பதிலடி கொடுக்கத் திட்டமிட்டார். தன் நண்பர்கள் உதவியுடன், சின்மயானந்தா அறையில் கேமரா பொருத்தினார். இதில்தான் சிக்கிக்கொண்டார் சின்மயானந்தா. அந்த வீடியோ காட்சியில், சின்மயானந்தா அந்தப் பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, மசாஜ் செய்யச் சொல்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வீடியோவைத்தான் தன் புகாரில் ஆதாரமாக காவல்துறையிடம் ஒப்படைத்தார் அந்த மாணவி. அப்படி ஆதாரம் கொடுத்தும் அசரவில்லை போலீஸ். எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட பாலியல் பாதிப்பு தொடர்பாக, ஆகஸ்ட் 24-ம் தேதி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் மாணவி. இதைத் தொடர்ந்து, ஊடகங்கள் சின்மயானந்தாவின் சில்மிஷங்கள்குறித்து செய்திகள் வெளியிட்டன. அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

சின்மயானந்தா
சின்மயானந்தா

வீடியோ வெளியிட்ட மாணவியை சின் மயானந்தா வின் ஆட்கள் கடத்திச் சென்றுவிட, உச்ச நீதிமன்றமே இந்த விஷயத்தில் தலையிட்டது. ஆறு நாள்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மாணவியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை. நீதிமன்றத்தில் மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செப்டம்பர் 20-ம் தேதி 72 வயதான சின்மயானந்தா கைதுசெய்யப்பட்டு, 14 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைதுசெய்தால் அரசியல்வாதிகளுக்கு உடனே நெஞ்சுவலி வந்துவிடுமல்லவா? அப்படி சின்மயானந்தாவுக்கும் வந்தது. தற்போது, அவர் ஷாஜகான்பூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அங்கு சும்மா இருப்பாரா சாமியார்?

துப்பாக்கி முனையில் மசாஜ்... புகார் கொடுத்த பெண் கைது

செப்டம்பர் 25-ம் தேதி, சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கு பெரும்கூட்டமாக வந்த காவல்துறை, அவரை அதிரடியாகக் கைதுசெய்துள்ளது. வீட்டில் இருந்த தன் சகோதரியை தெருவில் தரதரவென இழுத்துச் சென்றதாக மாணவியின் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார். போலீஸ் தரப்பிலோ, ‘வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி சின்மயானந்தாவிடம் ஐந்து கோடி ரூபாய் பேரம் பேசினார் மாணவி’ என்கிறது. இந்த விவகாரத்தில், மாணவியின் நண்பர்கள் மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இப்படி புகார் கொடுத்த மாணவியையே போலீஸ் கைதுசெய்துள்ளது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சின்மயானந்தாவுக்கு எதிரான வழக்கை நீர்த்துப்போகச் செய்யவே, மாணவிமீது வழக்கை ஜோடித்திருப்பதாக பல்வேறு தரப்பிலும் குரல்கள் எழுந்துள்ளன.

மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான மிகிர் தேசாய், “சின்மயானந்தாமீது பாலியல் வழக்கு தொடர்ந்த பெண், இனிமேல் பணம் பறித்தல் வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவே கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். இதற்காக நேரம், பணம், பொருள் எல்லாவற்றையும் செலவழிப்பார். பாலியல் புகார் கொடுத்த வழக்கில் அவர் தீவிரமாகச் செயல்பட முடியாது. முடிவில், ‘பாலியல் புகாரை வாபஸ் வாங்கினால், நாங்கள் பணம் பறித்தல் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம்’ என்று சாமியார் தரப்பு பேசும். பணம் படைத்தவர்களுக்கு ஆதரவாக அதிகாரவர்க்கம் செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது இந்தச் சம்பவம்” என்றார்.

இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுக் குள்ளான சின்மயானந்தாவை, கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது பா.ஜ.க. பிரயாக்ராஜில் உள்ள மகாநிர்வானி அகாரா ஆசிரமத்தின் தலைவர் என்ற வகையில் சாதுக்கள் கூட்டமைப்பான அகில பாரத் அக்கார பரிஷத் அமைப்பிலும் சின்மயானந்தா உறுப்பினராக இருந்தார். அந்த அமைப்பிலிருந்தும் சின்மயானந்தா நீக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி முனையில் மசாஜ்... புகார் கொடுத்த பெண் கைது

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள், குற்றங்கள் நடக்கின்றன.பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு பதிலாக, அவர்களே மேன்மேலும் பாதிக்கப் படுகிறார்கள். அங்கு சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என்கிற சந்தேகம் வலுக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism