Published:Updated:

மதுரை: `ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடருவோம்!’ - தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

`உளுந்தூர்பேட்டை இளம்பெண் சரஸ்வதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் வி.சி.க-வுக்கும் தொடர்பு இல்லை. சரஸ்வதியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம்’ -திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைக்கொலை வழக்கு சம்பந்தமாக மதுரையில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

அப்போது, செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அரக்கோணம் இரட்டைக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். வி.சி.க-வுக்கு வாக்கு சேகரித்ததால் நடைபெற்ற திட்டமிட்ட சாதியப் படுகொலை என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையோடு நிலம் வழங்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதுவரை நிலம் வழங்கியதே இல்லை. 1995-ம் ஆண்டு தொடங்கி இதுவரை மாநில விழிக்கண் குழு கூட்டம் 3 முறைதான் நடந்துள்ளது.

முதல்வருக்கு விழிக்கண் கூட்டம் நடத்துவது பற்றி அக்கறை இல்லை என்பதை இது காட்டுகிறது. மற்ற மாநிலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தவிர்க்கப்படுவது ஏன்?

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

இந்தியாவிலயே சாதிய வன்கொடுமைகள் அதிகளவில் நடப்பதால் தமிழகத்தை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.

பா.ம.க நிறுவனர் மக்களின் பிரச்னையை திசை திருப்பும் வகையில் சாதிய பிரச்னைகளை பேசி வருகிறார். தமிழகத்தில் நடக்கும் காதல் பிரச்னைகளுக்கு எல்லாம் வி.சி.க-தான் காரணம் என்பதுபோல அருவருப்பான அரசியலை ராமதாஸ் கையில் எடுக்கிறார்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

வி.சி.க குறித்து ராமதாஸ் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவருகிறார். ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரவுள்ளோம்.

உளுந்தூர்பேட்டை இளம்பெண் சரஸ்வதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் வி.சி.க-வுக்கும் தொடர்பு இல்லை. சரஸ்வதியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம்.

சரஸ்வதியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

தமிழ் சமூகங்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தி அரசியல் லாபம் காண்பது சமூக நீதிக்கு எதிரானது.

அரக்கோணம் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரியுள்ளோம்.

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ரெம்டெசிவர், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

பிரதமரின் நேற்றைய பேச்சு அலங்கார உரையாகத்தான் இருந்தது. ஆறுதல் அளிக்கும் வகையில் எதுவும் பேசவில்லை. வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றது.

போர்க்கால அடிப்படையில் கொரோனா பணிகளை தீவிரபடுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமான முறையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்கள் நுழைவதால் பாதுகாப்பை தீவிரபடுத்த வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு