Published:Updated:

“ஏழைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டியா?”

ஸ்மார்ட் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மார்ட் சிட்டி

சூடாகிறார் சுப்பராயன்

‘ஸ்மார்ட் சிட்டி சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மீறிச் செயல்பட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும்’ - மேற்கண்ட வரிகளின் சாராம்சத்துடன் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளருக்கு, திருப்பூர் எம்.பி-யான சுப்பராயன் அனுப்பியுள்ள கடிதம் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 24 திட்டங்களுக்கு 948 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடந்துவருகின்றன. இதைப் பற்றி எதையுமே தனக்குச் சொல்வதில்லை என்பதுதான் சுப்பராயனின் கோபத்துக்குக் காரணம்.

ஸ்மார்ட் சிட்டி
ஸ்மார்ட் சிட்டி

இதுகுறித்து சுப்பராயனிடம் கேட்டோம். ‘‘நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். தவிர, மத்திய அரசு அமைத்த மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கிறேன். திருப்பூரில் செயல்படுத்தப்பட்டுவரும் ஸ்மார்ட் சிட்டி பற்றி என்னிடம் எதையுமே கலந்து ஆலோசிப்பதில்லை. தகவலும் தெரிவிப்பதில்லை. பத்திரிகைகள் வாயிலாகத்தான் எனக்கு தகவல் தெரிகிறது. இதுகுறித்து பலமுறை விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையாளருக்குக் கடிதம் கொடுத்தும் பதில் இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தத் திட்டத்துக்காக திருப்பூர் பூ மார்க்கெட், பொது நிகழ்ச்சிகள் நடத்தும் டவுன் ஹால், தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை இடிக்கிறார்கள். பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்துப்புதூர் நடுநிலைப் பள்ளியையும் இடித்து பார்க்கிங் கட்டுகிறார்கள். ‘எந்தக் காரணத்துக்காகவும் பள்ளிக்கூடங்களை இடிக்கக் கூடாது’ என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறியிருக்கிறார்கள். ஏழைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டு காம்ப்ளெக்ஸ், கார் பார்க்கிங் கட்டிவிட்டால் ஸ்மார்ட் சிட்டி உருவாகிவிடுமா?

ஸ்மார்ட் சிட்டி
ஸ்மார்ட் சிட்டி

மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாதபோது நான்கைந்து அதிகாரிகள் சேர்ந்து எப்படி இந்த முடிவை எடுத்தார்கள். திட்டங்களுக்கு ஓப்பன் டெண்டர் விடப்பட்டதா, இடிக்கப்பட்ட இடத்தில் எடுத்த கல், மண் போன்ற பொருள்கள் எங்கே என்பது உள்ளிட்ட ஒன்பது கேள்விகளுக்கு, மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து இதுவரை பதில் இல்லை. சிறப்புக் குழு ஒன்றை அமைத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டம்மீது விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

சுப்பராயன்
சுப்பராயன்

இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரிடம் கேட்டோம். ‘‘எம்.பி-யின் அனைத்து கடிதங்களுக்கும் பதில் கொடுத்துவிட்டோம். ஆரம்பத்திலிருந்தே ஸ்மார்ட் சிட்டி திட்டம்மீது புகார் கொடுக்கும் நோக்கில் அவர் இருக்கிறார். மார்க்கெட்டிலிருந்து அப்புறப்படுத்தியவர்களுக்கு எதிர்காலத்தில் அதே இடத்தில் கடை கொடுக்கச் சொல்கிறார். அரசாங்க விதியில் அப்படி எதுவுமில்லை. முறையாக அனுமதி பெற்றே முத்துப்புதூர் பள்ளியை இடித்திருக்கிறோம். அதற்குப் பதிலாக புதிய பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்துள்ளோம். அவர் பதவிவகிக்கும் `டிஷா’ கமிட்டி, மாவட்ட அளவிலான திட்டங்களைக் கண்காணிக்கவே தவிர, ஸ்மார்ட் சிட்டிக்கானது அல்ல” என்றார்.