பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில், தமிழக டி.ஜி.பி-யாகப் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது; சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், மத்தியப் புலனாய்வுத் துறை இவரது வீட்டில் சோதனை நடத்தியது... எனக் காவல் பணியின் கடைசிக் காலகட்டத்தில் சர்ச்சைகளில் சிக்கியவர் முன்னாள் டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன். கடந்த ஜூன் 30-ம் தேதி தேதி ஓய்வுபெற்ற அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இத்தனை ஆண்டு காவல்துறைப் பணி, மனநிறைவைத் தந்திருக்கிறதா?’’

“காவல் துறையில் இருந்தபோது, தமிழக அரசு எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தது. அவற்றையெல்லாம் சிறப்பாகவே செய்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவு, சட்டத்துக்கு உட்பட்டு மக்கள் பணிகளைச் செய்திருக்கிறேன். காவல் துறையில் சேரும் புதிய காவலர்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறேன். தண்டனைபெற்ற காவலர்களுக்கு, சீர்திருத்த அடிப்படையில் உதவிகள் செய்திருக்கிறேன். எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது மனம் நிறைவாகவே உணர்கிறேன்.”

“காவல் துறையில் மீண்டும் உங்களுக்குப் பதவி கொடுக்கப்படுமா?’’

‘‘சில சிறப்புப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள்தான், ஓய்வுக்குப் பிறகும் மீண்டும் காவல் துறைக்குத் தேவைப்படுவார்கள். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற மரபுப்படி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும்.’’

“அரசுத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவி உங்களுக்குக் காத்திருப்பதாகச் சொல்கிறார்களே?’’

“இது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. யூகத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம்.”

“பணியில் இருந்தபோது மறக்க முடியாத நிகழ்வு எது?’’

“சென்னை சிட்டி கமிஷனராக இருந்தபோது, காவல் துறை மற்றும் சில என்.ஜி.ஓ-க்களுடன் இணைந்து, கைவிடப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தோம். இதில் பயனடைந்த பலர், எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார்கள். இந்த நிகழ்வை எப்போதும் மறக்க முடியாது. தமிழகம் முழுவதும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பல காவலர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். அது மன நிறைவாக இருந்தது.”

“காவலர்களுக்காக உணர்வுபூர்வமாகச் செய்த செயல் எது?’’

“பணிக்காலங்களில் காவலர்கள் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதைத் தடுக்கும்விதமாகக் காவலர் நிறைவாழ்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. மன அழுத்தத்தில் இருக்கும் காவலர்களுக்குத் தொடர்ச்சியாக கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுதும் பல காவலர்கள் இதில் பயனடைந்துள் ளார்கள். பலர் தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்கப்பட்டிருக் கிறார்கள். அவர்கள் எல்லோரும் இப்போது குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தைப் பாராட்டிய முன்னாள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நிறைவாழ்வு பயிற்சி வழங்க வழிவகை செய்தார்.”

“மீண்டும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது சர்ச்சையானதே?’’

“நான் உளவுத்துறை டி.ஜி.பி-யாகப் பணிபுரிந்து வந்தபோது, கூடுதல் பொறுப்பாக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி பதவியையும் வகித்துவந்தேன். அப்போது, நான் ஓய்வுபெறும் நாள் வந்தது. அந்தச் சமயத்தில் இரண்டு ஆண்டுகள் டி.ஜி.பி பதவியை அளித்தார்கள். ஆனால், பலரும் இதைத் தவறாகப் பணி நீட்டிப்பு என்றே சொல்கிறார்கள். இது தொடர்ச்சியான பணிக்காலம்தான்.’’

“நீங்கள் பணியில் இருந்தபோது அரசியல் அழுத்தங்கள் இருந்தனவா?’’

“பணியில் இருப்பவர்கள், பணிச்சுமையை அரசியல் அழுத்தம் என்று எடுத்துக்கொள்கிறார்கள். அரசியல் அழுத்தம் என்று பேச்சளவுக்கு வெளியில் சொல்லிக்கொள்கிறார்கள்... அவ்வளவுதான். உண்மையில் அரசியல் அழுத்தமெல்லாம் இல்லை.’’

“தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று சொல்லியிருந்தீர்கள். இதைத் தடுத்திருக்க முடியாதா?’’

“தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அதுகுறித்துப் பேச முடியாது. அதை கமிஷனின் முடிவுக்கே விட்டுவிடலாம்.”

“உங்கள்மீது வைக்கப்பட்ட குட்கா குற்றச்சாட்டு குறித்து?’’

“குட்கா வழக்கை, சி.பி.ஐ விசாரித்துவருகிறார்கள். அதனால், அதுகுறித்தும் பேச முடியாது. ஆனால், என்னைப் பற்றிச் சொல்லலாம். பொதுவாக நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் காவல் துறையில் உடனடியாக வெளிவந்துவிடும். நான் இதுவரை பணிசெய்த எந்த இடத்திலும் என்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. சென்னைக்கு வந்த பிறகுதான், இந்த ஒரே ஒரு குற்றச்சாட்டு என்மீது வைக்கப்பட்டது. நான் உண்மைக்குக் கட்டுப்பட்டவன். மனச்சாட்சியுடனும் கடவுள் சாட்சியுடன்தான் நான் பணி செய்தேன். நான் டி.ஜி.பி-யாக வந்துவிடக்கூடாது என்று வேண்டும் என்றே என்மீது குற்றச்சாட்டு வைத்திருக்கி றார்கள். உண்மை, விரைவில் வெளியில் வரும்.’’