ஊரெங்கும் டெங்கு பரவிவருகிறது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் வழக்கம்போல் திணறுகிறது தமிழக அரசு. அரசு மருத்துவமனைகள், நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. வடகிழக்குப் பருவமழைக்காலம் வேறு தொடங்கிவிட்டது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல்களும் அதிகரித்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில்தான் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அக்டோபர் 25-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். “உயிர் காக்க வேண்டிய மருத்துவர்களே இப்படி போராட்டம் நடத்தலாமா?” என்ற கேள்வியுடன் அரசு டாக்டர்கள் சிலரிடம் பேசினோம்.

தர்மபுரியைச் சேர்ந்த அறுவைசிகிச்சை நிபுணரான லட்சுமி நரசிம்மன்...

‘‘சுகாதாரத் துறையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. இங்குதான் மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவ மாணவர்களும் அதிகம். ஆனால், பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு 1 சதவிகிதம் மட்டுமே நிதி ஒதுக்குகிறார்கள். இதனால், எங்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய முடியவில்லை. ஏழாவது ஊதியக்குழு விதிகளின்படி இளநிலை மருத்துவம் முடித்தவர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் 56,500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. 13 வருட பணி அனுபவத்துக்குப் பிறகு, மத்திய அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 1,23,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தத் தொகை தமிழக அரசு மருத்துவர்களுக்கு 21-வது ஆண்டில்தான் கிடைக்கிறது.

2009-ம் ஆண்டில் சம்பள உயர்வுக்காக நாங்கள் போராட்டம் நடத்தியபோது பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சம்பள உயர்வு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், சொன்னபடி செய்யவில்லை. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `ஆறு வாரங்களில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்’ என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்தார். அக்டோபர் 8-ம் தேதியுடன் ஆறு வாரகாலம் முடிந்துவிட்டது. மீண்டும் அமைச்சர் தரப்பில் கேட்டபோது, `தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. அது முடியட்டும்’ என்றார்கள். இதனால், போராட்டத்தை மீண்டும் தள்ளிவைத்தோம். தொடர்ந்து அக்டோபர் 24, 25-ம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், எங்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. அதனாலேயே போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்” என்றவர், சற்றே இடைநிறுத்தித் தொடர்ந்தார்.

‘‘எங்களது போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட மாட்டார்களா என்று கேட்டீர்கள். தீவிர சிகிச்சைப் பிரிவிலும், காய்ச்சல் பிரிவிலும் எந்தத் தடையும் இல்லாமல் சிகிச்சை நடைபெறுகிறது. ஒருவேளை நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால்கூட, அதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு’’ என்றார்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் பாக்கியலட்சுமி, ‘‘உலகம் முழுவதுமே நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பதான் மருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் இங்கு, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்கிறார்கள். இதனாலேயே, மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது; நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். முதுநிலைப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இருந்த 50 சதவிகித இடஒதுக்கீட்டை மறுபடியும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோன்று அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு முடித்தவுடன், வெளிப்படையான கலந்தாய்வு மூலம் அவர்களுக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்’’ என்றார்.

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ‘‘பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை தர வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். எனவே, எங்கள் போராட்டத்துக்கு பொதுமக்களும் அனைத்து கட்சியினரும் ஆதரவு தர வேண்டும்’’ என்றார்.

இந்த நிலையில், தொடர்ந்து ஐந்து நாள்கள் பணிக்கு வராத மருத்துவர்கள்மீது ‘பிரேக் இன் சர்வீஸ்’ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கான நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கப்படாது என்றும் சுகாதாரத் துறை எச்சரித்திருக்கிறது.

அக்டோபர் 31-ம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் 50 பேரை பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். ``பணிக்குத் திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் நியமிக்கும் பணி தொடங்கும்’’ என சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்தார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களோ, ‘‘இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களின் கோரிக்கைளை ஏற்று சுமுகமான தீர்வை ஏற்படுத்தித் தரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது’’ என்கிறார்கள்.