Published:Updated:

வாசகர் மேடை: ஒரே நாடு... ஒரே மேடை!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

ஒரு படத்தை ஒரேமுறைதான் எடுக்கணும். பார்ட் டூ த்ரீ நோ

வாசகர் மேடை: ஒரே நாடு... ஒரே மேடை!

ஒரு படத்தை ஒரேமுறைதான் எடுக்கணும். பார்ட் டூ த்ரீ நோ

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை
வாசகர் மேடை: ஒரே நாடு... ஒரே மேடை!

ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன்... அடுத்து என்ன ‘ஒரே’ திட்டம் கொண்டுவரலாம்?

ஒரே ஓட்டு ஒரே ரேட்டு! - டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

ஒரே டிரெயின்; ஒரே பஸ்; ஒரே கார்; ஒரே டூ வீலர்; ஒரே... என்பதே அனைத்திலும்...! - தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்

ஒரு படத்தின் கதையை ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தும் விதத்தில் ‘ஒரே படம் ஒரே கதை’ என்ற திட்டம் கொண்டு வரலாம். - Arul Ak

ஒரே நாடு... ஒரே மாடு!

(பசுப் பாதுகாப்பு) - Ram Aathi Narayenan

இந்திய மக்களாட்சியை ஒரே ஒரே என்ற தத்துவத்தின் மூலம் மன்னராட்சியை நோக்கி இனி இட்டுச்செல்லமாட்டோம் என ஒரே கொள்கை முடிவெடுத்தால் போதும். - Mohamed Nathir

ஒரே நாடு ஒரே டோல்கேட். - venkime1

ஒரே நாடு ஒரே முதல்வர் (நம்ம எடப்பாடியக் கேட்டிருந்தா இப்படித்தான் பதில் சொல்லியிருப்பார்) - Vignesh J

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரே இட்லி... ஒரே ஒரு கோடி - வினோ

அரசு வேலைகளில் ஒரே கான்ட்ராக்டர், ஒரே கமிஷன்... Saravanan Obula

ஒரே நாடு... ஒரே பிரசார மேடை (எல்லாக் கட்சிக்காரங்களும் ஒண்ணா வந்து நில்லுங்க, பார்ப்போம்!) - Ramakrishnan

ஒரு படத்தை ஒரேமுறைதான் எடுக்கணும்.பார்ட் டூ த்ரீ நோ! - manipmp

காங்கிரஸ் கட்சிக்காகவே ‘ஒரே கட்சி... ஒரே ஒரு கோஷ்டி’ கொண்டு வரலாம்... ZJfUJ5WVBajnQjH

ஒரே நாடு; ஒரே சாப்பாடு. எல்லார் வீட்லயும் உப்புமா மட்டும்தான். - venkime1

ஒரே நாடு ஒரே கோடு. கோட்டுக்கு அந்தப் பக்கம் வட இந்தியா, இந்தப் பக்கம் தென்னிந்தியா.எப்பூடி? - se_balamurugan

கடவுள் ஃபேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ அக்கவுன்ட் ஆரம்பித்து ஸ்டேட்டஸ் போடுவதாக இருந்தால், அவரது முதல் ஸ்டேட்டஸ் என்னவாக இருக்கும்?

வந்துட்டேன்னு சொல்லு... வேற வழியில்லாமல் வந்துட்டேன்னு சொல்லு! - கி.ரவிக்குமார், நெய்வேலி

20 thousands year challege ன்னு அப்ப இருந்த பூமியுடனும், இப்ப இருக்குற பூமியுடனும் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் போட்ருப்பாரு. - சி.பரிமணமுத்துக்குமரன், மதுரை

“என் அட்மின் செய்யும் தவற்றுக்கு நான் பொறுப்பல்ல.” - எஸ்.பி.ஈஸ்வரிராஜ், திருச்சி

ஹாய் பிரண்ட்ஸ்... இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள். வாழ்த்து சொல்ல யாரும் இல்லையா... எனக்கு likes கிடையாதா... - Mano Francis

இன்று முதல் உங்கள் வேண்டுதல்களை ஆன்லைனிலும் முன்வைக்கலாம். கோயிலுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை! Ashok VijayaSri

I am single - Bhuvana Jerome

மவனே எவனாவது என் புரொஃபைல் போட்டோ எடுத்து 1 நிமிடத்திற்குள் ஷேர் செய்தால் இன்றைக்கு உங்களை நல்ல செய்தி வந்தடையும்னு போட்டீங்க... முதல் டெட் பாடி நீதான்... சொல்லிட்டேன். - Rekha Rekha

#StopKillingInMyName - Ganesh D Babuy

நான் முகநூலில் ஆன்லைன் லைவில் உள்ளேன்... ஆசிகளை இப்படியே பெற்றுக்கொள்ளுங்கள்.. என் இருப்பிடம் தேடி வந்து தொல்லை தர வேண்டாம்... காணிக்கைகளை கீழே கமென்ட் பாக்சில் உள்ள கணக்கிற்கு மாற்றம் செய்யுங்கள்... இனி என் சேவை உங்களிடம் லைவாக... Priya Perumal

கடவுள் இருக்கான் குமாரு! - Arul Ak

நானே 2ஜி போன்தான் யூஸ் பண்றேன்... பூசாரிக்கு ஐ போன் வேணுமாம்! - Shunmuga Sundaram

இந்த ஃபேக் ஐடிகளைப் படைச்சது யாரா இருக்கும்... Mahendiran Chandrasekaran

நான் கடவுள் ISO9001 2000CERTIFIED - Karthikai Rajan

உங்களைப் படைச்சதுக்கு, கடைசியில என்னையும் இங்க வர வெச்சிட்டீங்களேடா! - Shrin Banu

நான்தான் கடவுள். ஆனால், நீங்கள் நிச்சயம் நம்பமாட்டீர்கள்! - mekalapugazh

உதயநிதி ஸ்டாலின் தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளர் ஆனதற்கெல்லாம் என்னைத் திட்டாதீர்கள். - kumarfaculty

வாசகர் மேடை: ஒரே நாடு... ஒரே மேடை!

தினகரனின் அரசியல் வரலாற்றை வைத்து ஒரு வெப் சீரிஸ் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

‘திக்குத்தெரியாத நாட்டில்!’ - எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்

‘விசிலடிக்காத குக்கர்!’ - டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

‘நீயுமா புரூட்டஸ்’ என டைட்டில் வைக்கலாம்! - எஸ்.பி.ஈஸ்வரிராஜ், திருச்சி,

அசால்ட்டு குமாரும் அவரின் அடிப்பொடிகளும் - umakrishh

டோக்கனால் நான்; டோக்கனுக்காகவே நான் - sultan_Twitz

‘போயஸ்’கோப் - SENTHIL_WIN

வெப் சீரியல் - நினைக்காதே எதுவும் நடக்காதே

முதல் பாகம் - இலைக்கு வலை

இரண்டாம் பாகம் - தப்பிய தொப்பி

மூன்றாம் பாகம் - விசிலடித்த குக்கர்

நான்காம் பாகம் - வெற்றுப் பெட்டி

ஐந்தாம் பாகம் - கட்சி காட்சி

ஆறாம் பாகம் - ஓட்டம் ஆட்டம்

ஏழாம் பாகம் - விரைவில் ரிலீஸ் - saravankavi

சின்னம்மா சொல்ல மறந்த கதை - malarsoorya

எவன் வீட்டுக் காசு; என்ஜாய் பண்ணு பாஸு! - PrabuG16173032

இருபது ரூபாய் நோட்டு - ival_isai

தானா கலைந்த கூட்டம் - Arul Ak

தனியா இருக்கேன்... பயமா இருக்கு - Rishivandiya Baskar

‘தந்திரப்’ புன்னகை..! - Laks Veni

பள்ளிக்காலம், கல்லூரிக்காலம் - ரெண்டு வித்தியாசம், ஜாலியா சொல்லுங்க பார்ப்போம்.

வாத்தியாரப் பாத்து இவரான்னு பசங்க பயந்தா அது ஸ்கூலு.

பசங்களப் பாத்து ஐயோ இவனான்னு வாத்தியாரு பயந்தா அது காலேஜு. - RajiTalks

எப்படா வீட்டுக்குப் போவோம்னு ஏங்கிப் போய் உக்கார்ந்திருந்தது பள்ளிக்காலம்; வீட்ல இருந்து எப்படா காலேஜுக்குப் போவோம்னு தோணிட்டு இருந்தது கல்லூரிக்காலம். - kaattuvaasi

அஞ்சு மார்க் பத்து மார்க் போறதுக்கே அழுதது பள்ளிக்காலம்.

அரியர் வைக்காம வெளியே வந்தாலே போதும்னு வெளியே வந்தது கல்லூரிக்காலம் - umakrishh

பள்ளி-லீவ் லெட்டர்

கல்லூரி-லவ் லெட்டர் - manipmp

வாழ்வின் அரிய பருவம் - பள்ளிப்பருவம்

வாழ்வில் அரியர் பருவம் - கல்லூரிப்பருவம் - atgram

ஒரு சப்ஜெக்டுக்கு ரெண்டு மூணு நோட்டு போட்டா பள்ளிக்காலம்...

எல்லா சப்ஜெக்டையும் ஒரே நோட்டுல எழுதினா கல்லூரிக்காலம்! - Ashok VijayaSri

பள்ளி ஆசிரியர் - இதெல்லாம் நீங்க காலேஜ் போய்ப் படிப்பிங்க.

கல்லூரிப் பேராசிரியர் - இதெல்லாம் நீங்க ஸ்கூலிலேயே படிச்சிருப்பிங்க. - Selva Balaji

பள்ளிக்காலம்: Good Maaaaaaaaaarningggg teeeeeeacher

கல்லூரிக்காலம்: Gud mng - Sribalaji Perumal

வாசகர் மேடை: ஒரே நாடு... ஒரே மேடை!

ஏதாவது ஒரு சினிமாவில் நீங்களே கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்த குறியீட்டைச் சொல்லவும்.

‘உயிரே’ படத்தின் கதை நிகழும் வருடம் சுதந்திரதினப் பொன்விழா ஆண்டு. ஷாரூக் கான் அவர்களை ரயில் நிலையத்தில் சோதனை செய்த பிறகுதான் அனுப்புவார்கள். சுதந்திரதினப் பொன்விழா கொண்டாடுகிறார்கள், ஆனால் சோதனை செய்கிறார்கள் என்பது குறியீடு. - balasubramni1

‘ராவணன்’ படத்தில் சாமியின் தலையிலிருந்து பிறந்தவர் சீதை எனக் குறிக்க, சாமியின் முகத்தருகே ஐஸ்வர்யா ராய் வேண்டுவார்; காலிலிருந்து பிறந்தவர் ராவணன் எனக் குறிக்க சாமியின் காலடியில் விக்ரம் அமர்ந்திருப்பார். இது வருணப் பாகுபாட்டை நுட்பமாய்க் குறிக்கும் #vikatanmedai - AadhiManikkam

“என் பேரு நந்த கோபால் குமரன். என்னை எல்லாரும் NGK ன்னு கூப்டுவாங்க…”ன்னு சூர்யா சொல்லுவாரு. ஆனால் படத்துல அப்படி யாரும் கூப்பிடவே மாட்டார்கள். - saravankavi

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திடமான நம்பிக்கையுள்ள கதாபாத்திரங்கள் நீல நிற உடைகளில் இருப்பார்கள். மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் கதாபாத்திரங்கள் பிரவுன் நிற உடைகளில் இருப்பார்கள். நீலம் நிரந்தரத் தன்மை மற்றும் பிரவுன் சார்ந்திருக்கும் தன்மையின் குறியீடுகள். இதைப் படம் முழுக்கக் காணலாம். - VijiKumaran1

‘சர்கார்’ படத்தில் விஜய் செல்லும் இடத்துக்கெல்லாம் கீர்த்தி சுரேஷ், வலிய கூடவே செல்வது அவர்தான் ஹீரோயின் என்பதற்கான குறியீடு என்பதைக் கண்டுபிடித்தேன் ! - ARiyasahmed

‘பம்பாய்’ படத்தின் ‘உயிரே...உயிரே’ பாடல் காட்சியில் மனிஷா ஓடிவருகையில் இரும்புக் கம்பியில் பர்தா மாட்டி, அதைக் கழற்றி விட்டு வருவர். இது காதலுக்காக மதத்தைத் துறந்து வருகிறார் என்பதைக் குறியீடாக விளக்கும். - Sabena_Aadhi

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல எல்லாருக்கும் காசு குடுத்துதான் கூட்டத்தைச் சேப்பாரு சூர்யா - Jack_Selva_

‘மாரி -2’ ரவுடி பேபி சாங்கில் ஷூவைக் கையில் மாட்டி ஸ்டெப் போடுவது அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஷூ வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கான குறியீடு. - Riyaz Ahmed

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு.

வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம்.

கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ரஜினிகாந்தும் தொலைக்காட்சியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்தால், அது எந்த நிகழ்ச்சியாக இருக்கலாம்? (இதுவரை இல்லாத கற்பனையான நிகழ்ச்சியாகக்கூட இருக்கலாம்)

? கங்கை கொண்டான், கடாரம் வென்றான் மாதிரி எடப்பாடி சிறப்பை விளக்க ஒரு பட்டம் ப்ளீஸ்...

வாசகர் மேடை: ஒரே நாடு... ஒரே மேடை!

? பெண்கள் செய்யும் விஷயங்களில் எது உங்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கு? (பெண்களும் பதில் சொல்லலாம்)

? நவீன இலக்கியவாதிகள் - நான்கே வரிகளில் ஜாலியான சிறுகுறிப்பு வரைக.

? ராஜினாமா செய்துவிட்ட ராகுல்காந்தி ஓய்வு நேரத்தை எப்படி சிறப்பாகக் கழிக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.