? ரஜினிகாந்தும் தொலைக் காட்சியில் ஏதேனும் ஒரு நிகழ்ச் சியைத் தொகுத்து வழங்க வந்தால், அது எந்த நிகழ்ச்சியாக இருக்கலாம்? (இதுவரை இல்லாத கற்பனையான நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம்)
வானிலை அறிக்கை கூற வரலாம். ஏனெனில் மழை வருவதாக ‘ரெட்’ அலர்ட் வரை தருவார். ஆனால் மழை வராது.
@VijiKumaran1
கொஞ்ச வருஷத்துக்கு முன்ன சன் டிவியில் அனிதா குப்புசாமி குழந்தைகளோட இன்ட்ராக்ட் பண்ற மாதிரி ஒரு ஷோ நடத்துவாங்க. அது போல நடத்தலாம். நிறைய குட்டி நீதிக்கதைகள் சொல்லி, குழந்தைகளை என்டர்டெயின் பண்ணுவாரு.
@RajiTalks
உங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார்..?
(அதீத திறமை இருந்தும், முன்னேற வாய்ப்பு கிடைக் காமல் இருக்கும் கிராமத்து இளைஞர்களைத் தேடிக் கண்டறிந்து, அவர்களுக்கு சூப்பர் ஸ்டாரே நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சி)
@KLAKSHM14184257

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘மொட்ட பாஸ்’
13 அரசியல்வாதிகள், 144 நாள்கள், 420 கேமராக்கள் உள்ள மொட்ட பாஸ் வீட்டினுள் இருக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு, காசு சுண்டிவிடப்பட்டு டாஸ்க்குகள் வழங்கப்படும். இறுதியில் ஜெயிப்போருக்கு மந்திரி சீட் வழங்கப்படும்!
@IamJeevagan
உங்களில் யார் அடுத்த சமூகவிரோதி..?
(தண்ணீர்ப் பிரச்னையில் இருந்து, ஹைட்ரோகார்பன் வரை போராடுபவர்களில், திறமையான சமூகவிரோதியை, தனது சூப்பர் பவரை வைத்து சூப்பர் ஸ்டார் கண்டறியும் நிகழ்ச்சி)
@KLAKSHM14184257
நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போறோம்னு சொல்லியே ஓட்டிருவோம்ல. அது என்ன நிகழ்ச்சின்னு மக்கள் யூகத்துல சொல்லுவாங்க. அதுல எது பெஸ்ட்டோ அத நடத்திட வேண்டியதுதான்.
@bharathjee1
நீங்க ரெடி; நான் ரெடியில்ல..!
(கேம் ஷோ)
@manipmp
`எல்லாம் மாயை’ என்னும் நிகழ்ச்சியில், தான் கடந்த, அனுபவித்த மாயைகளை மக்களோடு பகிர்ந்து மக்களின் அனுபவங்களை எபிசோடு எபிசோடாக விவாதிக்கலாம்.
யூசுப் ஜாகிர்
நிகழ்ச்சி பேரு: “இந்த உலகம் இன்னுமா நம்புது.”
உலகம் முழுவதும் பல ஆண்டுகளாகப் பொய்க்காத நம்பிக்கைகளை, ஆனால் ஒரு போதும் நடக்காதவற்றை நடக்கும் என்று பெரும்பாலா னோரைப் பல ஆண்டுகள் நம்பவைத்து வரும் நபரை அல்லது விஷயத்தைப்பற்றி ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோடாக நடத்தலாம்.
Mahendiran
Chandrasekaran
“வரும் ஆனா வராது” - புது நிகழ்ச்சி. அவர் கேட்கும் கேள்விகளுக்கு நாம சரியா மாத்தி மாத்தி பதில் சொல்லணும்... இதுல ஏழு வரம் தருவாரு. அதை நாம் அப்படியே வேஸ்ட் பண்ணணும். கடைசியில் ஜெயிப்பவர்களுக்குப் பரிசு “வரும் ஆனா வராது...”
Ganapathi
Chidambaram Ganesh
எந்திரிங்க விடிஞ்சிடுச்சி...
சித்திரசேகர் லட்டு
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS? கங்கை கொண்டான், கடாரம் வென்றான் மாதிரி எடப்பாடி சிறப்பை விளக்க ஒரு பட்டம் ப்ளீஸ்...
தந்திரங்களின் எந்திரன்
@balasubramni1
அதிர்ஷ்டம் கொண்டான்
@Sabena_Aadhi
நவரத்தினங்களின் தலைவன்.
யார் அந்த நவரத்தினங்கள்னு கேட்கிறீங்களா?
1. தெர்மாகோல் செல்லூர் ராஜு, 2. சோப்புநுரை கருப்பண்ணன் 3. தண்ணீர்ப் பற்றாக்குறை வேலுமணி, 4. மின்தடை தங்கமணி, 5. `அம்மா இட்லி சாப்பிடல, பொய் சொன்னோம்’ திண்டுக்கல் சீனிவாசன், 6. அணை உடைப்பு கண் திருஷ்டி ஆர். பி. உதயகுமார், 7. ஒற்றைத் தலைமை ராஜன் செல்லப்பா, 8.முதல்வர் இந்திராகாந்தி விஜயபாஸ்கர், 9. முதல்வருக்கு ஜாதகம் நல்லா இருக்கு கே. டி. ராஜேந்திர பாலாஜி.
இதுபோன்ற சிறப்பு வாய்ந்த நவரத்தினங்களின் தலைவன்.
Saravanan Kavi
பெரிய புராணன்
Velanganni Velu
சேலத்து சேக்கிழார்
Safath Ahamed

“எப்போதும் வென்றான்” என்ற பட்டம் கொடுக்கலாம். எதிர்க்கட்சிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை ஒவ்வொரு முறையும் முறியடித்து வருவதால் அவருக்கு இந்தப் பட்டம் கொடுக்கலாம்.
Ambai D Muthuselvam
கவரிங் மான்
Sabanayagam
விடாப்பிடி எடப்பாடியார்
Muthiah Kannan
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
? நவீன இலக்கியவாதிகள் - நான்கே வரிகளில் ஜாலியான சிறுகுறிப்பு வரைக.
இந்தியால வாழறதே அவலம்னு ஆரம்பிச்சி, கேரளால வாழறது சொர்க்கம்னு முடிப்பவர்கள்.
@Jack_Selva_
பேரன்பின் ஆதி ஊற்றாகிய அவர்கள் வீட்டுக்குப் போவதை கூடடைதல் என்பார்கள்.
பேரிரைச்சலின் மௌனத்துக்குள் வாழ்ந்து பால்யத்தை ஆதுரமாக ரசிப்பார்கள்.
@RedManoRed
சக எழுத்தாள பிரபலங்களைத் திட்டிட்டே இருக்கணும். சினிமாக்காரர்களுடன் எப்போதும் அண்டர்கவர் ஆப்பரேசனில் இருக்கணும். புரியுற மாதிரி ஆனா புரியாத மாதிரி எழுதணும். குறைஞ்சது 1000 பக்கத்துக்கு நாவல் எழுதணும்.
@chithradevi_91
சாதாரணமாகப் பேசும் போதுகூட ஆகச்சிறந்தது, விளிம்புநிலை, முரண்பாடு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.
@sudhansts
அவங்க படைப்பு புரியலைன்னு விளக்கம் கேட்டா, இதுக்கு அதுவே பெட்டர் ரேஞ்சுக்கு விளக்கம் தருவது!
- வேற எதும் கேப்பியான்னு நமக்கு நாமே கேட்டுக்கணும்!
@vrsuba
? ராஜினாமா செய்துவிட்ட ராகுல்காந்தி ஓய்வு நேரத்தை எப்படி சிறப்பாகக் கழிக்கலாம்?
ஓய்வு பெறுவதற்கு முன்னாடி என்ன பண்ணிட்டிருந்தீங்க?
சும்மா இருந்தேன்...
அதேதான் ஓய்வு பெற்ற அப்புறமும்... போய்ச் சொல்றா அவங்க கிட்ட...
@RajiTalks
தமிழ்நாட்டுக் கடைக்கோடி கிராமத்தில் அ.தி.மு.க/தி.மு.க கிளைச் செயலாளர்களின் செயல்பாடுகளைப் பார்த்து காங்கிரஸ் உ.பி/ம.பி/ராஜஸ் தான்/பீகார் மாநிலங்களில் கட்சி வளர்க்கலாம்.
@venkime1
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கலாம். ராகுல் ஆர்மி உருவாக்கி, அதை வைத்துச் சண்டை போட்டு, ஆட்சியைப் பிடிக்கலாம்.
@amuduarattai
வனிதா இல்லாத பிக்பாஸ்...வடிவேலு இல்லாத தமிழ் பிலிம்ஸ்... கோலாகல சீனிவாஸ் இல்லாத அரசியல் விவாதம்...ராகுல் இல்லாத காங்கிரஸ்... என்ன கொடுமை சார்... ஓய்வும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்...
@Balumarappan2
மோடியை சமாளிப்பதற்கு முன்பு திருமணம் செய்து மனைவியைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ளலாம்.
@yugarajesh2
அப்ப இவ்வளவு நாளா அவரு ஓய்வுல இல்லியா... சொல்லவே இல்லை!
@prabacurren
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாகச் சிறையில் இருப்பவர்களை மன்னித்து விட்டேன் என்று சொன்ன நீங்கள் அதன் செயல் காரியமாக அவர்களை வந்து சந்தித்து அவர்களை மீட்க முயற்சி செய்யலாம்...
@Rajeshk11006121
எத்தனை நாளைக்குத்தான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவாங்க... இவர் அரசியலில் இருந்து சினிமாவுக்கு வரலாம்!
@M__karthika
இயக்குநர் ஷங்கரிடமோ அல்லது ஏ.ஆர். முருகதாஸிடமோ வாய்ப்பு கேட்டு அவர்களின் படத்தில் ஒருநாள் பிரதமராக வாவது பிரதமர் நாற்காலியில் அமர்ந்து பிராப்தத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
Asokan Kuppusamy
? பெண்கள் செய்யும் விஷயங்களில் எது உங்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கு? (பெண்களும் பதில் சொல்லலாம்)
பேசுவாங்க பேசுவாங்க பேசிட்டே இருப்பாங்க. ஆனால் சத்தம் சுத்தமாய் வெளியே கேட்காது. எப்படித்தான் முடியுதோ!
-சு.பிரபாகர், தேவகோட்டை.
எக்ஸாம்ல மூணு மணி நேரம் முழுசா எழுதுவாங்க. அப்படி என்ன எழுதுவாங்கன்னு இன்னும் புரியாத புதிராக உள்ளது.
@bharathjee1
பெட் கவர் தலையணை கவர் எல்லாத்தையும் நம்மளே கஷ்டப்பட்டுப் போடுவோம். ஆனா அதை எல்லாத்தையும் எடுத்துட்டு மறுபடியும் முதல்ல இருந்து போடுவாங்க!
@billumohan83
சந்தோஷமா இருந்தா மேக் அப் பண்றாங்க;
சண்டையா இருந்தா பேக் அப் பண்றாங்க.
@saravankavi
டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டில் சண்டை என்றால் டிவியை நிறுத்திவிட்டு ஒட்டுக்கேட்பது.
@imayavan340
ஆபீஸ் எத்தனை மணிக்கு முடியும்னு தெரியும்... தெரிந்தும் எப்ப வருவீங்கன்னு கேட்கிறது.
@Dharanishraja
கத்திரிக்காயை சொத்தையில்லாமல் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து, கணவனைத் தேர்ந்தெடுக்கும் போது கோட்டை விடுவது!
@M__karthika
எவ்வளவு நல்ல டெய்லரையும் சில மாதங்களுக்குள் மாற்றி விடுவது.
@mekalapugazh
உம்முன்னு இருக்காங்களே என்னன்னு விசாரிச்சா ஒண்ணுமில்லன்னுட்டு உம்முன்னு இருக்கறது. ஏன் கோபப் படறாங்க, என்ன தப்பு பண்ணுனோம்னே தெரியாம முழிக்கறது.
@umakrishh
வீட்டுக்கு விருந்தினர் வரும்போது, நம்மை ஓவரா புகழ்வது.
@mohanramko
துணிக்கடைக்குப் போனதும் பிடிச்ச டிரஸ்ஸ பார்த்துட் டாலும் எல்லா டிரஸ்ஸையும் ஒரு ரவுண்டு பார்த்துட்டு, கடைசியா முதல்ல பார்த்த அந்த டிரஸ்ஸையே செலக்ட் பண்ற மனோபாவம்.
பாரதிப்ரியை
எவ்வளவுதான் கணவனுக்குப் பிடித்த மாதிரி சமையல் செய்தாலும், ஒரு பாராட்டு வேண்டாம், குற்றம் சொல்லிட்டே இருக்கும் கணவனுக்கு அடுத்த முறை ஒன்றும் செய்யக் கூடாது என்று மனம் நினைத்தாலும், மறுபடியும் சமைக்கும்போது ‘ஐயோ... கணவனுக்கு இது பிடிக்குமே, அது பிடிக்குமே’ என்று அக்கறை எடுத்துச் செய்வாள் பாருங்கள், அதுதான் பெண் குணம்!
Sri Vidya

என்னதான் உலக அழகி ஐஸ்வர்யா ராயே ஆனாலும், அவளுக்கு மொச்சைப் பல்லு என்று காஷுவலாகச் சொல்லி, தன்னம்பிக்கையுடன் ஒரு பார்வை பார்ப்பது.
Jayashree Sainath
சாதாரண விஷயத்தை ரொம்ப சீரியஸாகவும், சீரியஸான விஷயத்தை ரொம்ப சாதாரணமாகவும் எடுத்துக் கொள்வது.
உதயகுமார் க. இரா.
நாம் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊரிலுள்ள அனைவரும் புத்திசாலிகளாகவும் அவர்கள் கண்ணுக்குத் தெரிவதெப்படி?!
கமலக்கண்ணன் இரா
ஊரு உலகமெல்லாம் போய் எத்தனையோ பிரச்னைகளைச் சமாளிச்சு வேலை பார்த்துட்டு, வீட்டுல ஒரு சின்ன பிரச்னையின் போது உங்களுக்கு ஒண்ணும் தெரியாது பேசாம இருங்கன்னு சொல்லும்போதுதான் ஆச்சர்யமாக இருக்கும்.
தமிழ் என்ற பிரகாஷ்
12 வெரைட்டியில் உப்புமா இருந்தாலும், 13ஆவதா எப்படி இன்னொரு உப்புமாவைக் கண்டு பிடிக்கிறாங்கன்றது இன்னும் புரியலை.
Karthikeyan Yeskha
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? வாட்ஸ்-அப்பில் புதிதாக என்ன வசதியைச் சேர்க்கலாம்?
? காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க என்ன செய்யலாம்? ஜாலியான ஐடியாக்கள் ப்ளீஸ்...
? ‘குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான்’ என்று தெரிந்தால் குரங்குகளின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?
? ஆண்கள் பெண்களாகவும் பெண்கள் ஆண்களாகவும் ஒரே ஒருநாள் மாறினால் உலகில் என்னென்ன நடக்கும்?
? வடிவேலு சயின்ஸ் ஃபிக்ஷனில் நடித்தால், என்ன டைட்டில் வைக்கலாம்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை,ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.