Published:Updated:

வாசகர் மேடை

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

ஆகாசத்தில் ‘ஆஹா’சம்!

வாசகர் மேடை

ஆகாசத்தில் ‘ஆஹா’சம்!

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

?ஆண்கள் பெண்களாகவும் பெண்கள் ஆண்களாகவும் ஒரே ஒருநாள் மாறினால் உலகில் என்னென்ன நடக்கும்?

தீட்டுன்னு எதுவும் இல்ல. மற்ற கழிவுகள் வெளியேறுவது போலத்தான் மாதவிடாயும் என்ற புரிதல் வரக்கூடும்.

umakrishh

அந்த ஒரு நாளில் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஆண் ஒரு பெண்ணின் வலியை உணர்வான்.

imparattai

அன்று ஒருநாள் மட்டும் தி.மு.க-வில் மகளிர் அணிச் செயலாளர் பதவி உதயநிதிக்கும், இளைஞர் அணிச் செயலாளர் பதவி கனிமொழிக்கும் வழங்கப்படும்.

malarsoorya

விகடன் தாத்தா விகடன் பாட்டியாக அட்டைப்படத்தில் காட்சி அளிப்பார்.

parveenyunus

பார்’ல பெண்கள் கூட்டம் அலைமோதும்

பார்லர்’ல ஆண்கள் கூட்டம் அலைமோதும்!

billumohan83

இப்படி நடந்ததற்குக் காரணம் தி.மு.க-தான் என்று பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கட்சியினர் கூறுவார்கள்.

saravankavi

யார் எப்படி மாறினாலும், இப்ப இருக்கிற மாதிரியே செல்போனைத்தான் நோண்டிக்கிட்டே இருப்பாங்க பாஸ்..!

KLAKSHM14184257

பாலியல் தொல்லைகள் எப்படி ஒரு பெண்ணைக் காயப்படுத்துகிறது, சமுதாயத்தில் பல வலிகளோடு ஒரு பெண் எப்படி தன்னையும் தன் குடும்பத்தையும் நடத்துகிறாள் என்பதை ஆண்களால் உணர முடியும்...

தன் குடும்பத்தை எப்படியும் மேலே உயர்த்தி விட வேண்டும் என்று மாடாய் உழைக்கும் ஆணின் தவிப்பு பெண்ணுக்குப் புரியும்... ஆக இது நடந்தா நல்லாதான் இருக்கும்.

Rekha Rekha

வாசகர் மேடை

ஒரே நாள் என்பதால் மாற்றத்தை உணர்ந்து சுதாரிப்பதற்குள் நாளே கடந்துபோயிருக்கும்.

உதயகுமார் க. இரா.

பெண் ட்ரம்ப், பெண் ஸ்டாலின், பெண் ராகுல், பெண் பழனிசாமி, ஆண் மம்தா, பெண் மோடி, ஆண் தமிழிசை, ஆண் சோனியா... அப்பப்பா... ஆளை விடுங்கப்பா!

Tamil Johnson

‘ஒரு பெண்ணின் மனசு ஒரு ஆணுக்கும் தெரியும்!’னு பழமொழி மாறிடும்.

Ravikumar Krishnasamy

எல்லோருக்கும் டிபன் பாக்ஸ் பேக் பண்ணி தலைசீவி புடவைகட்டி அவசரமா வேலைக்குக் கிளம்பற அவஸ்தையை ஒரு நாள் அனுபவித்து லேட்டா ஆபீஸ் போனால், மேலதிகாரி ஒண்ணுமே திட்டமாட்டார். ஏன்னா, அத அவரும் அனுபவிச்சிட்டுதான் வந்திருப்பார்.

Abirami

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? வடிவேலு சயின்ஸ் ஃபிக்‌ஷனில் நடித்தால், என்ன டைட்டில் வைக்கலாம்?

நாசாமணி

venkime1

அவதார் ஆறுமுகம்.

altaappu

முட்டுச்சந்தில் மூன்ரேக்கர்

chithradevi_91

ஹியூமராயன் 2.0 #VikatanMedai

amuduarattai

இஸ்ரோவில் 23 ஆம் புலிகேசி.

amuduarattai

ஓவியங்கள்: ராபின்சன்
ஓவியங்கள்: ராபின்சன்

‘ஸ்கை’புள்ள..!

Thaadikkaran

“மிஷன் ‘இம்சை’ பாசிபுள்”

KrishnaratnamVC

நிலவில் நீல் ‘மீம்’ஸ்ட்ராங்..!

KLAKSHM14184257

சூனாபானாவும், சூப்பர் நோவாவும்...

Maidhamaavu

இயந்திர லோகத்தில் நா.அழகப்பன்.

imayavan340

நான் செவ்வாய் கிரகத்துக்குப் போறேன்

Sathia Moorthi

ராக்கெட் விடும் விஞ்ஞானி பற்றிய படம்... “இப்ப விட்றா பாக்கலாம்.”

Karthik M Somasundaram

நாசாவின் மனசிலே

Neravy Gajendiran

ஆகாசத்தில் ‘ஆஹா’சம்!

Venkat Nathan

? வாட்ஸ்-அப்பில் புதிதாக என்ன வசதியைச் சேர்க்கலாம்?

குரூப்பில் நீண்டகாலம் தூங்கிக்கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்ப, அலாரம் வசதி.​

செல்லத்துரை, சென்னை - 123

ஒரு முறை நம்ம பார்த்த வீடியோவை, பத்து வருசத்துக்கு மறுபடி வராம பாத்துக்கணும்.

venkime1

குட்நைட், குட்மார்னிங் படங்கள், தமிழனாய் இருந்தால் சேர் பண்ணு, உங்களுக்குத் தெரியுமா என ஆரம்பிக்கும், முடியும் மெசேஜுகளுக்கு ஃபார்வேர்டு வசதியை நீக்க வேண்டும்.

kaattuvaasi

ஒருத்தர் இத்தனை க்ரூப்புக்குத்தான் அட்மினா இருக்கமுடியும்னு ஒரு வரம்பு.

ItsJokker

பின்னாளில் அனுப்ப வேண்டிய பிறந்தநாள் வாழ்த்துகள்/செய்திகளை முன்கூட்டியே அந்தந்த தேதிகளைக் குறிப்பிட்டு ஆட்டோ செண்ட் செய்யும் வசதி.

Akku_Twitz

Hmm kk mm ரிப்ளைகள் போட்டா 2வது நிமிஷம் அந்த ரிப்ளை போடுறவங்க போன் வெடிச்சுடணும்! அவங்களுக்கெல்லாம் எதுக்கு வாட்ஸப்புன்றேன்!

RajiTalks

நம்முடைய கான்டாக்ட் லிஸ்ட்ல இருக்கறவங்க யாருவேண்டுமானாலும் நமக்குத் தகவல் அனுப்பலாம் என்பதைத் தடை செய்யணும். நமக்கு வாட்ஸப் யாரெல்லாம் அனுப்பலாம் என்பதை நாம் முடிவு செய்யும்படி ஒரு டிக் ஆப்ஷன் வைக்கலாம்.

mekalapugazh

வீடியோ மற்றும் புகைப்படங்களை download செய்யாமல் பார்க்கும் வசதி. FB, Twitter மாதிரி. இதன் மூலம் அடிக்கடி ஸ்டோரேஜ் சுத்தம் செய்யும் வேலை இருக்காது. வேணும்னா download பண்ணிக்கலாம்.

vbss75

இரவு 11 மணிக்கு மேல் 3 அல்லது 4 மெசேஜ் மட்டுமே செய்ய முடியும் என்ற வசதி. மீண்டும் காலை 5 மணி முதல் எப்போதும் போல் மெசேஜ் செய்யலாம்...

Rajeshk11006121

Boyfriend tracking... அதாவது அவுக யார்ட்ட பேசுறாங்கன்னு போட்டுக்குடுக்கற மாதிரி ஒரு ஆப்ஷன சேர்க்கலாம்.

Sowmya Red

உங்கள் தொடர்புகளில் எவர் உங்களுக்கு அருகில் இருக்கிறார் என்றும் அறியும் வசதி. ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கும் குறைவாக இருந்தால், “வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்ப முடியாது, நேரில் சென்று பேசவும்” என்று வாட்ஸ் அப்பில் வர வேண்டும். பல குடும்பங்கள் ஒன்றுபடும்!

Safath Ahamed

“சிவப்பு டிக்”, அதாவது, நாம் அனுப்பும் செய்தியைப் படித்துவிட்டு மனைவியின் முகம் கோபத்தால் சிவந்தால், அதை இங்கிருந்தே கணவனுக்குக் காட்டிவிட வேண்டும். கோபத்தின் அளவைப் பொறுத்து, ஒன்று இரண்டு அல்லது மூன்று சிவப்பு டிக்குகள் வரலாம்.

Safath Ahamed

நோ செண்ட் ஆப்ஷன். “நாங்கெல்லாம் அந்தக் காலத்துல குச்சி மிட்டாய், குருவி ரொட்டி தின்னோம், ஆத்துல குளிச்சோம், டூரிங் டாக்கீஸ்ல படம் பார்த்தோம், தாத்தா பாட்டி கிராமத்து வீட்டில் கயித்துக்கட்டிலில் தூங்கினோம்’’னு அந்துபோன ஆட்டோகிராஃப்ப ஓட்டி வர்ற மாதிரி யாராவது மெசேஜ் அனுப்பினா `நோ செண்ட்...’

Manicka Vasagam

? ‘குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான்’ என்று தெரிந்தால் குரங்குகளின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

‘டார்வின் மேல மானநஷ்ட வழக்கு போடணும்.’

தஞ்சை தாமு, தஞ்சாவூர்

இந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்... நெவர்ர்..!

ashoker

உங்க இனத்துக்கே விதையான எங்களை வித்தை காட்ட வச்சிட்டீங்களேடா!

SeSenthilkumar

வாசகர் மேடை

எங்களுக்கு “அட்ரா ராமா... அட்ரா ராமா...” உங்களுக்கு “ஜெய்ராமா... ஜெய்ராமா...” அவ்வளவுதாண்டா வித்தியாசம்!

absivam

நல்ல வேளை தனியா பிரிஞ்சு அவன் மனிதனாகிவிட்டான்... இல்லையென்றால் நாமும் புதிய கல்விமுறையில படிச்சு, நீட் எழுதி பணமதிப்பிழப்புல சிக்கி, ஜிஎஸ்டி கட்டி, தண்ணீரைத் தேடி அலைந்து, குண்டுகுழியுமான சாலையில பயணிச்சு, போலீசுக்கு அபராதம் கட்டி, அப்புறம் அப்போலோவுக்குப் போயி கோடி ரூவா குடுத்து இட்டிலி வாங்கி சாப்பிட்டிருப்போம்... நல்ல வேளை நாம குரங்காவே இருந்திட்டோம்...

Manivannan Karunanithi

ஒருபக்கம் நம்மை சாமின்னு கும்பிடறான். இன்னொரு பக்கம் நாம வசிக்கவே இடமில்லாம மரத்தை வெட்டிச் சாய்க்கிறான். யார் சொன்னாங்க இவனுக்கு நம்மைவிட அறிவு அதிகம்னு?

Abirami

நாம பண்ணாத சேஷ்டைகளையெல்லாம் மனுஷன் பண்ணிட்டு குரங்கு சேஷ்டைன்னு நம்ம மேல பழி போடறாங்களேன்னு வருந்தும்.

உதயகுமார் க. இரா

``குரங்கிலிருந்து பொறந்தவன்தான் மனுஷன்னு கண்டுபிடிச்சீங்க... ஆனா, உங்களுக்குப் பிடிக்காத ஒருத்தனைத் திட்டும்போது `மூஞ்சப்பாரு, அசல் கொரங்கு மூஞ்சி மாதிரி!’ன்னு ஏன்டா திட்டுறீங்க”ன்னு குரங்குகள் கேட்கும்!

Girija Manaalan

அப்புறம் ஏன் நாங்க இன்னும் குரங்காவே இருக்கோம்?

ப்ரணா ...

? காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க என்ன செய்யலாம்? ஜாலியான ஐடியாக்கள் ப்ளீஸ்...

டைம் டிராவல் செய்து காமராஜர் காலத்துக்குச் சென்றால்தான் உண்டு.

mekalapugazh

ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரி ஒரே கட்சி ஒரே கோஷ்டி என்ற சட்டம் வந்தால் வாய்ப்பிருக்கலாம்.

tvignesh49

“தமிழக திராவிட முன்னேற்ற காங்கிரஸ் கழகம்” என்று கட்சிப்பெயரை மாற்றலாம்.

amuduarattai

தமிழிசையைத் தலைவி ஆக்கலாம். கை ஓங்குதோ இல்லையோ, எங்களுக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கும்.

@umakrishh

கே.எஸ்.அழகிரியைத் தூக்கிவிட்டு மு.க.அழகிரியைத் தமிழக காங்கிரஸுக்குத் தலைவர் ஆக்கலாம். வீட்டுல அவர் சும்மா இருக்கிறதால காங்கிரஸ் கட்சியை ஆட்சியில அமர்த்த நல்ல நல்ல ஐடியா எல்லாம் வெச்சிருப்பாரு. நமக்கும் பொழுது போகும்.

aathinarayenan

கீழுள்ள வாக்குறுதிகளை அறிவிக்க வேண்டும்!

1. 90s கிட்ஸ்களுக்கு கேர்ள்ஃபிரெண்ட் வசதி.

2. அனைவருக்கும் 24மணிநேர இலவச இண்டர்நெட்.

3. ஃபுட்டீஸ்களுக்கு இலவச நான்வெஜ் ஹோட்டல்கள் திறக்கப்பட வேண்டும்.

4. பெண்களுக்கு இலவச மேக்கப் கிட்.

5. டிக்டாக் பைத்தியங்களுக்கு சீரியலில் வாய்ப்பு.

6. இலவச டாஸ்மாக்.

ameerfaj

`கை’ சின்னத்துக்கு ஓட்டு போட்டா பீப் சவுண்டுக்கு பதில் குத்துப்பாட்டு கேட்கும்னு கெளப்பி விடலாம்! டெஸ்ட் பண்ணிப் பார்க்கவாச்சும் `கை’க்குப் போடுவாங்க!

vrsuba

ஒரு பேப்பரில் ‘ஆட்சி’ என்று எழுதி, அதைக் ‘கை’யால் பிடிக்கலாம்!

Neravy Gajendiran

“நயன்தாராவைத் தமிழக காங்கிரஸ் தலைவியாக்கிவிட்டு, தலைமைப் பதவிக்காக த்ரிஷாவை காமராஜர் சமாதியில் தர்மயுத்தம் பண்ண வைத்து உலக அளவில் டிரண்டிங் செய்து, முதலில் உலக மக்களைத் தமிழக காங்கிரஸை நோக்கித் திரும்ப வைக்கலாம்!

Ramkumar Kumar

‘சோதிக்காதீங்கடா என்னைய’ என்று வடிவேலுபோல சொல்லிட்டு வேற வேலை இருந்தால் அதைப் பார்க்கப் போகலாம்.

Saravanan M

வாசகர் மேடை

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? பள்ளிக்கூடம் அன்றும் இன்றும்... இரண்டே வரிகளில் நச்சென்று ஒப்பிடுங்கள்.

? புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி என்று எந்தப் பட்டமும் வாங்காமலே ஜெ.தீபா அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். இப்போதாவது அவருக்குப் பட்டம் கொடுப்பது என்றால், என்ன பட்டம் கொடுக்கலாம்?

? உலக சினிமா ஆர்வலர்களுக்கான விநோத அறிகுறிகள் என்ன?

? ஓ.பன்னீர்செல்வம் வாழ்க்கை வரலாறு எழுதினால் என்ன தலைப்பு பொருத்தமாக இருக்கும்?

? ரஜினி, மோடி - அமித்ஷாவை கிருஷ்ணர் - அர்ஜுனர் என்று சொன்னது மாதிரி வேறு எந்தெந்தப் பிரபலங்களுக்கு என்ன புராணப் பாத்திரங்கள் கொடுப்பீர்கள்... ஏன்?

வாசகர் மேடை

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002.