Published:Updated:

வாசகர் மேடை

vasagar medai
பிரீமியம் ஸ்டோரி
News
vasagar medai

நிறைய... நிறைய...

? வீட்டில் அதிக விலைகொடுத்து வாங்கிவிட்டு சும்மாவே போட்டுவைத்திருக்கிற பொருள் என்ன... அதைப் பார்க்கும்போது உங்க ஃபீலிங் எப்படி இருக்கும்?

20 ரூபா கொடுத்து வாங்கின `மேட்’ கூட அறையை சுத்தமாக வைக்க உதவுது. ஆனா பல ஆயிரம் கொடுத்துக் கல்யாணத்துக்கு வாங்கின இந்த கோட்... போங்க பாஸ்!

@iamkingvarman

அதிக விலைக்கு வாங்கிய உடற்பயிற்சி சாதனங்கள்... உடல் எடை குறையுதோ இல்லையோ பேங்க் பேலன்ஸ் கணிசமாகக் குறையும்.

@VijiKumaran1

நிறைய இருக்கு மை லார்ட். துண்டு காயப்போடும் ட்ரெட்மில், 4 கிலோ கல்யாண லெஹங்கா, உடைஞ்சிடக்கூடாதுன்னு பரண்ல போட்டிருக்கற டின்னர்செட், வருஷத்துக்கு ஒருமுறை மெய்ண்டெனன்ஸ் செலவு பண்ணிட்டு ஓட்டாம நிக்கற பைக், லாக்கர்ல இருந்து வெளியவே வராத நகைகள்... லிஸ்ட் பெரிசு...

@vikky_tweet

வாசகர் மேடை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேறென்ன, புக்ஸ்தான்... வாங்கும்போது இருக்குற வேகம் வாங்குன பிறகு இருக்காது!

@ItsJokker

30 நாள்களில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம் என்ற ரெபிடெக்ஸ் புத்தகம். இங்கிலீஷ்காரன் ஆவோம்னு எவ்வளவு தன்னம்பிக்கையா வாங்கினோமென்று தோன்றும்.

@amuduaratta

High Heels. இதைப் பார்க்கும் போதெல்லாம் ஏன் வாங்கினேன்னு ஃபீல் பண்ணுவேன்.

@Lovly_Shailu

அழகா இருக்குன்னு வாங்கிய அனைத்துப் பொருளும்... அழுக்காயிரும்னு யூஸ் பண்ணவே மாட்டோம்..!

@Thaadikkaran

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

? தினந்தோறும் சீரியஸான மசோதாக்களைக் கொண்டுவரும் மத்திய அரசு, மக்களை மகிழ்விக்க ஒரு ஜாலியான மசோதாவைக் கொண்டுவரலாம் என்றால், என்ன மசோதா கொண்டுவரலாம்?

சிறந்த மீம் கிரியேட்டருக்கு விருது கொடுக்கும் மசோதா நிறைவேற்றலாம்.

@Sabena_Aadhi

காதலித்த நபரையே கல்யாணம் செய்வது கட்டாயமில்லை என்ற மசோதா.

@ARiyasahmed

ஒரு மாசத்துக்கு எதுக்குமே GST இல்லைன்னா ஜாலியா இருக்கும்.

@vikky_tweet

எங்களைத் தவிர வேற யாரு ஆட்சி வந்தாலும், எந்தப் புது மசோதாவும் கொண்டு வரக்கூடாதுங்கற மசோதா.

@nanbanvela

ரஜினி இன்னும் ஒரு மாதத்தில் கட்சி ஆரம்பித்தே தீர வேண்டும் என்கிற மசோதா.

@parveenyunus

வாசகர் மேடை

மனதை குஷிப்படுத்தும் வகையில் `வடிவேல் கி பாத்’னு சாயங்கால நிகழ்வு கொண்டு வரலாம்.

Sowmya Red

பா.ஜ.க அமைச்சர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது விஞ்ஞானம் பற்றி பேட்டி கொடுக்க வேண்டும்னு சொன்னாலே போதும்... வயிறுகுலுங்கச் சிரிக்கலாம்.

Immam Kasali

“பாராளுமன்ற பக்கோடா” என்ற மசோதாவை நிறைவேற்றி எம்.பி-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் தனது தொகுதி மக்களுக்கு பக்கோடாவை வீட்டு முகவரிக்கே பார்சலில் அனுப்பிவைக்கலாம்!

Kanniya Kumar

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? போலீஸ் சினிமாக்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

ஹீரோ தவிர மத்த எல்லாரும் அன்ஃபிட் மாதிரி காமிக்கிறது.

@bharathjee1

நேர்மையான போலீஸ்னாலே அவங்க குடும்பத்து ஆளுகள போட்டுத்தள்றது.

@umakrishh

rajini
rajini

போலீஸ் ஸ்டேஷன் பெயர்ப்பலகை புதிதாய் இருப்பது...

@Balumarappan2

போலீஸ் தேர்விற்கான அனைத்துப் பயிற்சிகளையும் ஒரே பாட்டில் நாயகன் கற்றுக் கொள்வது.

@balasubramni1

நினைச்சா ரிசைன் பண்ணிட்டு, நினைச்சா ஜாயிண்ட் பண்றது!

M__karthika

ஹீரோ தாலி கட்டப் போகும் நேரம் கல்யாண மண்டபத்தில் வந்து ‘`நிறுத்துங்க...’’ என்று சவுண்டு விட்டு, அரெஸ்ட் செய்வது.

Manicka Vasagam

“மேலிடத்தில இருந்து எனக்கு பிரஷர் மேல பிரஷர். என்னையா பண்ணிட்டிருக்கீங்க?”

மேலதிகாரி மற்ற காவலர்களிடம் கேட்பது.

Raja Mazhai

? சிம்புவும் தனுஷும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?

மன்மதன் வம்பு

@imayavan340

கிருஷ்ணரும் அர்ஜுனரும்

@Balumarappan2

வந்தா சண்டையோடதான் வருவோம்

@nandhu_twitts

Dhanush, simbu
Dhanush, simbu

இணைந்த guyகள்

@parveenyunus

சிம்ஷூ

Sowmya Red

ஏடாகூடம்

Mooka Ibrahim

சிம்பு கால்சீட் கொடுத்துட்டு நடிக்க வரமாட்டாரு. தனுஷ் மட்டும் நடிச்சு படம் வெளிவரும். அதனால

பேரு ‘ஒத்தை வித்தை.’

Sathia Moorthi

‘செஞ்சுடுவோம்...’

Manicka Vasagam

சகலை Vs ரகளை

Logesh Muthuraj

? ராணுவத்தில் வேலை பார்க்கும் மிலிட்டரி மேன் தோனிக்கு ஒரு பாட்டு டெடிகேட் பண்ணுங்க.

எதிரிகளை ஹெலிகாப்டர் ஷாட்டால் எல்லை தாண்டி அடிப்பாய்...

@imayavan340

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்

வெடிகுண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்..!

@billumohan83

dhoni
dhoni

‘தல’மகனே தனிமை கண்டு வருந்தாதே.

@Dharanishraja

“நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி

ஆளக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோனி...”

@IamJeevagan

நான் ஆட்டக்காரன், ஆட்டக்காரன்

‘நாலு’ம் தெரிஞ்ச ரூட்டுக்காரன்

நியாயம் உள்ள ‘ரன்ரேட்டு’க்காரன்...

@mohanramko

நேற்று நீ ஆட்ட நாயகன்

இன்று நீ நாட்டு நாயகன்...

@vikneshmadurai

கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க

நான் Gun எடுத்தால் காஷ்மீரில் இருப்பேன் சொல்றேங்க..!

@balasubramni1

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை டீமின் உடமையடா

மேட்சிலும் வின்னு, போரிலும் வின்னு

தாயகம் காப்பது கடமையடா..!

விக்னேஷ் ஆகிய நான்

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை

? டி.டி.வி.தினகரன், ஜெ.தீபா,

ஓ.பன்னீர்செல்வம் மூன்று பேரும் ஒரு விமானப்பயணத்தில் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?

? தூங்கி எழுந்ததும் வருடம் 2050 என்று காட்டுகிறது. உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி என்னவாக இருக்கும்?

? சூப்பர் ஹீரோ படங்களைத் தமிழில் எடுத்தால் எந்த கேரக்டருக்கு யார் பொருத்தம்? ஏன்?

? அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்விக்கி போன்ற டெலிவரி சர்வீஸ்களை வைத்து ஒரு புதுமொழி சொல்லுங்களேன்!

? கொஞ்சம் தூறல் போட்டாலும் போதும்,

உடனே மழைக்கவிதை எழுத ஆரம்பித்துவிடுபவர்களைப் பற்றி ஒரு காமெடி கவிதை (நான்கே வரிகளில்) எழுதுங்களேன்!

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.