Published:Updated:

"டி.வி. நிகழ்ச்சியை நிறுத்தாவிட்டால்..." - கமலுக்கு வேல்முருகன் எச்சரிக்கை!

வேல்முருகன்
வேல்முருகன்

அதே டி.வி-யில் 'கேரளப் பெண்கள் அழகா... தமிழகப் பெண்கள் அழகா?' என்றதொரு தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெறப்போவதாக அறிவிப்பு வெளிவந்தவுடன், அதை நிறுத்தச் சொல்லி வேண்டுகோள் வைத்தோம்.

"தமிழ்க் கலாசாரத்தைக் கெடுக்கும் டி.வி நிகழ்ச்சியை நடத்திவரும் கமல்ஹாசன், தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், எங்கள் வேலையைக் காட்டுவோம்" என்று மேடையிலேயே பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்.

சமீபத்திய சிறைவாசத்துக்குப் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிவரும் வேல்முருகனைச் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம்.

"மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறீர்கள். மண்ணின் மைந்தர்களுக்கான அளவீடு எது?"

"டி.வி. நிகழ்ச்சியை நிறுத்தாவிட்டால்..." - கமலுக்கு வேல்முருகன் எச்சரிக்கை!

"இந்த மண்ணிலேயே நிலம் வாங்கி, தொழில்செய்து 300, 400 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே வாழ்ந்துவருகிற கன்னடம், தெலுங்கு மக்களையும்கூட இந்த மண்ணின் மைந்தர்களாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஆனால், 'நாங்களும் பச்சைத் தமிழன்தான்' என்று வசனம் பேசுபவர்களை நாங்கள் நம்பவில்லை. அவர்கள் குறுகிய காலத்துக்குள் இங்கு வந்து எம்மண்ணில் சம்பாதித்தப் பணத்தையெல்லாம் தங்கள் மாநிலத்திலேயே முதலீடுசெய்து, தங்கள் மக்களின் நலனுக்காகவே வாழ்ந்துவருபவர்கள்."

"மண்ணின் மைந்தன் கோஷம் எழுப்பப்படும் மாநிலங்களில் எல்லாம், பிற மொழி பேசுபவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தப்படுவதுதானே இங்கே வரலாறாக இருக்கிறது?"

"தமிழர்களை, மற்ற தேசிய - மொழி இனக் குழுக்களோடு ஒப்பிட முடியாது. கர்நாடகத்திலோ, மகாராஷ்டிரத்திலோ தமிழர்களை அடித்து விரட்டியதுபோல நாங்கள் இங்கே யார் மீதாவது தாக்குதல் நடத்தினோமா? தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய வகையில், இங்கே பிற மாநிலத்தவர்கள் வாழ்கிறார்கள். திருப்பூர், வேலூர் போன்ற நகரங்களில் நைஜீரியர்கள், சிங்களவர்கள் என்று வேற்று நாட்டவர்களும்கூட வாழ்ந்துவருகிறார்களே."

"தமிழ்க் கலாசாரத்தை ஒரு டி.வி நிகழ்ச்சி கெடுப்பதாகக் கூறும் நீங்கள், 'இந்தப் போக்கை நடிகர் கமல்ஹாசன் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், எங்கள் வேலையை நாங்கள் காட்டுவோம்' என்று மேடையிலேயே வெளிப்படையாக மிரட்டுகிறீர்களே?"

"டி.வி. நிகழ்ச்சியை நிறுத்தாவிட்டால்..." - கமலுக்கு வேல்முருகன் எச்சரிக்கை!

"அது வேண்டுகோள்தான்... மிரட்டல் அல்ல! ஏற்கெனவே ஒருமுறை அதே டி.வி-யில் 'கேரளப் பெண்கள் அழகா... தமிழகப் பெண்கள் அழகா?' என்றதொரு தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெறப்போவதாக அறிவிப்பு வெளிவந்தவுடன், அதை நிறுத்தச் சொல்லி வேண்டுகோள் வைத்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். இப்போதும் அதே டி.வி நிகழ்ச்சி ஒன்றில், பண்பாட்டுச் சீரழிவை உண்டாக்கும் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. அதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பாவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அதை நிறுத்துவதற்காகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கைதான் விடுத்திருக்கிறோம்."

- த.கதிரவன்

> "சிறைவாசத்தின்போது நீங்கள் உண்ணாவிரதம் இருந்ததும்கூட உடல்நலப் பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்களே?"

> "சுங்கவரிக் கட்டணம் கேட்டதாக 'டோல்கேட் சம்பவத்தில்' வேற்று மொழி பேசும் ஊழியர்களை நீங்கள் தாக்கியதாக வழக்கு உள்ளதே?"

> "என்.ஐ.ஏ சட்டத்திருத்தம் மற்றும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீங்கள் ஆதரித்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் இவற்றை ஆதரிக்கின்றனவே?"

இந்தக் கேள்விகளுக்கு வேல்முருகன் அளித்துள்ள விரிவான பதில்களை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்கலாம். சந்தா விவரங்களுக்கு https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு