Published:Updated:

``நாங்கள் என்ன சாவர்க்கரா... நாங்கள் எல்லாம் பெரியாரே..." - வண்ணாரப்பேட்டை அதிர்வுகள்!

போராட்டம்
போராட்டம்

வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய பெண்கள் அதற்கு 'சென்னையின் ஷாகீன்பாஃக்' என்று பெயரிட்டுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளால் பல்வேறு அமைப்புகளாலும் நடத்தப்பட்டுவந்த போராட்டம், பிப்ரவரி 14-ம் தேதியிலிருந்து தன்னெழுச்சிப் போராட்டமாக மாறியிருக்கிறது.

> போராட்டபூமியாக மாறியிருக்கும் வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையை 'சென்னையின் ஷாகீன் பாஃக்' என்ற பதாகை அலங்கரித்துள்ளது.

> மேடையில் நின்றுகொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் மட்டுமல்லாமல், மழலைகளும்கூட 'ஆதார் கார்டு இருக்கு... என்.ஆர்.சி எதுக்கு...', 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று நரம்புகள் புடைக்க முழக்கமிடுகிறார்கள். அவர்கள் எழுப்பும் முழக்கங்களை, அங்கு நூற்றுக்கணக்கில் திரண்டிருக்கும் பெண்கள் எதிரொலிக்கிறார்கள்.

> பெரும்பாலும் இஸ்லாமியப் பெண்களே திரண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில், அம்பேத்கரையும் பெரியாரையும் முன்னிறுத்தித் தொடர்முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன்பாக் என்ற பகுதியில் இரண்டு மாதங்களைத் தாண்டி இடைவிடாது நடக்கும் போராட்டம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அதேபோன்ற ஒரு தொடர்போராட்டத்தை சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய பெண்கள் அதற்கு 'சென்னையின் ஷாகீன்பாஃக்' என்று பெயரிட்டுள்ளனர்.

> “மோடியே அமித்ஷாவே... 'போ'ன்னு சொன்னா போவதற்கு, நாங்கள் என்ன சாவர்க்கரா... நாங்கள் எல்லாம் பெரியாரே... நாங்கள் எல்லாம் அம்பேத்கரே... நாங்கள் எல்லாம் திப்புசுல்தானே, 'இந்து - முஸ்லிம் சமூக மக்கள்... நாங்கள் எல்லாம் சகோதரர்கள்' எச்சரிக்கை எச்சரிக்கை... இது அம்பேத்கரின் கூட்டம் எச்சரிக்கை'' என்று நரம்புகள் புடைக்க கோஷமிடுகிறார்கள் இஸ்லாமியப் பெண்கள்.

> வண்ணாரப்பேட்டையில் நாம் கண்ட காட்சிகள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவூட்டுவதாக இருந்தன. NO CAA, NO NRC, NO NPR என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ ஷர்ட் அணிந்த இளைஞர்கள் போக்குவரத்தையும், மக்கள் நடமாட்டத்தையும் ஒழுங்குபடுத்துகிறார்கள்.

> போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களும் உணவுப்பொட்டலங்களும் குளிர்பானங்களும் அவ்வப்போது விநியோகிக்கப் படுகின்றன. விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2T4fGnD

> எந்தப் பக்கம் திரும்பினாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான சுவரொட்டிகள் காட்சியளிக்கின்றன. சிறுவர், சிறுமியர் தங்கள் கன்னங்களிலும், பெண்கள் தங்கள் கைகளிலும் NO CAA NO NRC என்று மெஹந்தி வரைந்திருக்கிறார்கள். அதே வளைக்கரங்களில் தேசியக்கொடிகளும் அசைந்து கொண்டிருக்கின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் பெண்களால் பற்றவைக்கப்பட்ட போராட்டத் தீ, தமிழகம் முழுவதும் பற்றிப்பரவி அனலாகத் தகித்துக்கொண்டிருக்கிறது.

போராட்டம்
போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன்பாக் என்ற பகுதியில் இரண்டு மாதங்களைத் தாண்டி இடைவிடாது நடக்கும் போராட்டம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அதேபோன்ற ஒரு தொடர்போராட்டத்தை சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய பெண்கள் அதற்கு 'சென்னையின் ஷாகீன்பாஃக்' என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று பலரும் பங்கேற்கும்வகையில் மாறியுள்ள இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் முற்போக்கு இயக்கங்களும் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர்.

கடந்த 14-ம் தேதி காவல்துறையினர் போராட்டக் காரர்கள்மீது தடியடி நடத்தியதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் 'ஷாகீன் பாஃக்' ஆக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் தி.மு.க இருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார் பா.ஜ.க தலைவர் இல.கணேசன். சில சக்திகளின் தூண்டுதல் என்று சட்டசபையில் விளக்கம் தந்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

- களநிலவரத்துடன், களத்தில் உள்ளவர்களின் பேட்டிகள் மற்றும் அரசியல் பார்வையையும் உள்ளடக்கிய ஆனந்த விகடன் சிறப்புச் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > தொடங்கியது டெல்லி... தொடர்கிறது சென்னை! - இது இன்றைக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அல்ல https://www.vikatan.com/social-affairs/politics/protest-against-caa-in-tamil-nadu

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு