திருக்கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை..’ என்று பக்திப் பரவசத்துடன் சபரிமலைக்குக் கிளம்பத் தயாராகிவிட்டனர் ஐயப்ப பக்தர்கள். ஆனால், கடந்த ஆண்டைப்போலவே பயமும் பதற்றமும் இப்போதும் பக்தர்கள் மனதில் குடிகொண்டிருக்கின்றன. ‘ஆர்.ஏ.எஃப்’ எனப்படும் அதிரடிப்படை பாணியில், சபரிமலைக்குச் செல்வதற்காக பக்தர்கள் வந்து இறங்கும் கேரளத்தின் முக்கியமான நகரங்களிலெல்லாம் ‘ஆர்.எஸ்.எஸ் ஆக்ஷன் ஃபோர்ஸ்’ கண்கொத்திப் பாம்பாகத் திரிந்துகொண்டிருப்பது பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.

‘ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்’ என்று 2018–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. காலங்காலமாக, 10 வயதுக்குட்பட்ட மற்றும்

50 வயதைத் தாண்டிய பெண்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட சூழலில், இந்தத் தீர்ப்பு, பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைக் கொந்தளிக்க வைத்தது. அந்த அமைப்புகள் கடும்போராட்டத்தில் இறங்கின. கேரளாவே கிட்டத்தட்ட எரிமலையானது. இதைவைத்து பா.ஜ.க அரசியல் லாபம் அடையப் பார்க்கிறது என்பதைத் தாமதமாக உணர்ந்த காங்கிரஸும் சுதாரித்துக்கொண்டு, கேரளாவை ஸ்தம்பிக்கவைத்தது. அதேசமயம், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு, ‘நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவோம்’ என்பதில் உறுதியாக இருந்தது.

‘அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்ட சில அமைப்புகள், போராட்டத்தை ஆரம்பித்தன. மார்க்சிஸ்ட் கூட்டணி சார்பில் ‘வனிதா மதில்’ என்கிற பெயரில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை பெண்களை சுவர்போல் நிறுத்தி போராட்டம் நடத்தினர். மறுநாளே பிந்து, கனகதுர்க்கா ஆகிய இரண்டு இளம்பெண்களை பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்ப தரிசனம் செய்யவைத்தது ஆளுங்கட்சித் தரப்பு. இது ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்த தீயில் நெய் ஊற்றியதுபோல் பரவ, கேரளாவைக் கடந்து தமிழகம் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும பரபரப்பைப் பற்றவைத்தது. தொடர் போராட்டங்கள், 144 தடை உத்தரவு, போலீஸ் குவிப்பு, சபரிமலை ஐயப்பனை தரிசித்த பெண்கள், தரிசிக்கும் முயற்சியில் இறங்கியதற்காகத் தாக்கப்பட்ட பெண்கள்... என கடந்த ஆண்டின் மகரவிளக்கு மண்டல பூஜை பெரும்பதற்றத்துடனே கடந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே, ‘` `சபரிமலையில் 10 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கமாட்டோம்’ என்று முந்திக்கொண்டு அறிவிப்பை வெளியிட்டு விட்டது ஆளும் கம்யூனிஸ்ட் அரசு. இந்த விஷயம், `கடந்த காலங்களில் முற்போக்கு முகம் காட்டிய கம்யூனிஸ்டு களின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது’ என்று விமர்சனங்கள் கிளம்பின. ‘காங்கிரஸ், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது’ என்று போராட்டத் தில் இறங்கி யதால்தான் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதுதான் இடதுசாரிகளை அதிரவைத்து, அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றவைத் துள்ளது’’ என்கிறார்கள் கேரளத்தின் அரசியல் விமர்சகர்கள்.

சபரிமலை தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுவை கடந்த நவம்பர் 14 அன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் முந்தைய தீர்ப்பான ‘அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யத் தடை ஏதுமில்லை’ என்பதையும் உறுதிசெய்தது. எனவே, கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்புடன் பெண்களை சபரிமலைக்கு கேரள அரசு அழைத்துச் செல்லும் என்ற எதிர்பார்ப்பும் எகிறிய சூழலில்தான், கேரள அரசு பின்வாங்கி விட்டது.

இந்தக் குழப்பமும் பதற்றமும் நிறைந்த சூழ்நிலையில், நவம்பர் 16–ம் தேதி, மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினமே ஆந்திர மாநிலத்திலிருந்து பத்து இளம் பெண்கள் ஐயப்பனை தரிசிக்க பம்பை நதிக்கரையை அடைந்தனர். கடந்த ஆண்டு பாதுகாப்பு கொடுத்த அதே கேரள போலீஸ், இந்த முறை சபரிமலையின் ஆசாரங்களையெல்லாம் எடுத்துக்கூறி திருப்பி அனுப்பிவிட்டது. கேரள இடதுசாரி அரசின் இந்த நிலைப்பாடு சி.பி.எம் கட்சியின் டெல்லி தலைமைக்கே அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

“நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கேரள சி.பி.எம் மாநிலக் குழுக் கூட்டத்தில், ‘சபரிமலைக்கு இளம்பெண்களை அழைத்துச் செல்வதற்காக கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காது’ என்று தீர்மானம் நிறைவேற்றி, ‘காலத்துக்கேற்ற மாற்றம்’ என்று பெயரும் சூட்டினர். அதன் பிறகு கேரளத்தில் நடந்த இடைத்தேர்தலில் பத்தனம்திட்டா மாவட்டத்தின் கோனி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றது கம்யூனிஸ்ட். ‘இதற்கு ஐயப்பன் சுவாமியே காரணம்’ என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் ‘கடகம்பள்ளி’ சுரேந்திரன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. 2021-ம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலும், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தலும் நடக்கவுள்ளன. அதனால், திட்டமிட்டே சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் அரசு இறங்கி வந்துள்ளது’’ என்கிறார்கள் கேரள அரசியல் நோக்கர்கள்.

இதுகுறித்து கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறும்போது, ‘‘சபரி மலையில் இளம்பெண்களை அனுமதிப்பதில் விதிப்படி தடையில்லை என்றாலும், நடைமுறைப்படி பார்த்தால் தடை உள்ளது. மறுசீராய்வு மனுவை ஏழு பேர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றியதன் மூலம் பெண்களை அனுமதிக்கலாம் என்ற முந்தைய விதியில் நிச்சயமற்றத்தன்மை ஏற்பட்டுவிட்டது. சீராய்வு மனு மீண்டும் பரிசீலனை செய்யும் நிலை தொடர்கிறது. எனவேதான் இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிக்க வேண்டாம் என்று அரசு முடிவு எடுத்திருக்கிறது’’ என்றவர், ‘‘அதேசமயம், முற்போக்குத்தன்மையைத் தூக்கிப் பிடிப்பதில் அரசு பின்வாங்காது’’ என்றார் மீசையில் மண் ஒட்டாதவராக!

கேரள மாநில காங்கிரஸ் செயலாளர் ஜோதீஸ்குமார் சியாமகாலவிடம் கேட்டபோது, ‘‘வழக்கை ஏழு பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றியதால் பெண்களை அனுமதிக்கவில்லை என்று கேரள அரசு இப்போது கூறுகிறது. ஆனால், சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு சொன்னபோதே, எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறவில்லை. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரள முதல்வரும் முதல்வரும் வேண்டுமென்றே அவசரக்கோலத்தில் இளம்பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்று பிரச்னையை உருவாக்கினார்கள். பா.ஜ.க அதை தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி போராட்டங்களில் இறங்கி அதகளம் செய்தது. நாங்கள் மட்டுமே பக்தர்களுடன் நின்றோம். பக்தர்களின் நம்பிக்கை என்பது ஒரு வழி; அரசியல் என்பது மற்றொரு வழி. இரண்டையும் சேர்த்துக் குழப்பிக்கொண்டதால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியதால், தற்போது பின்வாங்கிவிட்டார்கள்’’ என்றார்.

பா.ஜ.க பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ் கூறுகையில், ‘‘கடந்தமுறை சபரிமலையில் பக்தர்களின் நம்பிக்கையைத் தகர்க்க 144 தடை உத்தரவு விதித்து சமூகச் செயற்பாட்டாளர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். முற்போக்கு என்று கூறிக்கொண்டு பக்தர்களைத் தாக்கினார்கள். அதனால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் பலமாக இருந்த பகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார்கள். சபரிமலை விவகாரத்தில் மக்கள் ஆதரவு தங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து இப்போது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது ஆளுங்கட்சி. இதுபோதாது, இதற்கு முன்பு பக்தர்களுக்கு இழைத்த அநீதிக்கு முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டும்’’ என்றார் கறார் குரலில்.

இதற்கிடையே, கடந்த முறையைப் போலவே தற்போதும் இந்த விஷயத்தை வைத்து கேரள மக்களின் கவனத்தை ஈர்க்கும் வேலையை ஆரம்பித்துவிட்டன பா.ஜ.க மற்றும் சங்பரிவார் அமைப்புகள். இளம்பெண்கள் வரக் கூடாது என்று கேரள அரசு கூறினாலும், அதையும் மீறி பெண்கள் வரத்தான் செய்கிறார்கள். அவர்களையெல்லாம் நிலக்கல் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி அனுப்பிவிடுகின் றனர். இந்த விஷயத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டன ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள். கிட்டத்தட்ட ‘ஆர்.எஸ்.எஸ் ஆக்ஷன் ஃபோர்ஸ்’ என்பதுபோலவே அதிரடியாகக் களத்தில் சுழல்கின் றனர். பத்தனம்திட்டா, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட கேரளத்தின் பல இடங்களிலும் செல்போன் சகிதமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர். சபரிமலைக்குச் செல்வதற்காக வந்திறங்கும் இளம்பெண்களைப் பின்தொடரும் இவர்கள், வீடியோவும் எடுத்து உடனுக்குடன் தங்களுக்குள் பரிமாறிக்கொள்கிறார்கள். இதைவைத்தே அந்தப் பெண்களை வழியில் மடக்கும் ‘ஆக்ஷன் ஃபோர்ஸ்’ பிரதிநிதிகள், அவர்களையெல்லாம் மிரட்டி திருப்பி அனுப்ப ஆரம்பித்துள்ளனர். இப்படி இவர்கள் அதிரடியாகக் களத்தில் இறங்கியிருப்பது, சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் பெண்கள் அமைப்புகளைப் பதற வைத்துள்ளதோடு, பக்தர்களையும் சேர்த்தே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டும் பிரச்னைகள் வெடித்து, அது பெரிதாகப் பரவிவிடுமோ என்பதுதான் அவர்களுடைய கவலை. இப்படி ‘ஆக்ஷன் ஃபோர்ஸ்’போல் செயல் படுபவர்களை கேரள போலீஸும் கண்டு கொள்வதில்லை என்பது கூடுதல் கவலை!

இந்நிலையில், ‘சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவை கேரள கம்யூனிஸ்ட் அரசு திரும்பப் பெறவேண்டும்’ என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் தற்போது கிடுக்குப்பிடி போட ஆரம்பித்திருப்பது, ஆளும்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

சபரிமலையில் கேரள காவல்துறையுடன் நக்சல் தடுப்புப் பிரிவான தண்டர்போல்ட் மற்றும் சுமார் 200 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் சந்நிதானத்தில் அமைதி நிலவுகிறது. கடந்த ஆண்டு கோயில் காணிக்கை வருவாய் குறைந்தது. இந்த ஆண்டு கேரள அரசின் முடிவால் முதல் நாளிலேயே 3.32 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசும்போது, “உச்ச நீதிமன்றம், ‘சபரிமலை கோயிலில் வழிபட இளம்பெண்களுக்கு அனுமதி உண்டு அல்லது இல்லை’ என தீர்ப்பைத் தெளிவாக வரையறுத்திருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. ஏழுபேர் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றியிருப்பதன் மூலம், கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு இடைக்காலத் தடை என்பதை மறைமுகமாகக் கூறியுள்ளனர்” என்றார்.

பா.ஜ.க தரப்பில் பேசிய கட்சியின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், “ஏற்கெனவே, கூறிய தீர்ப்பை மறுஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் உட்படுத்துவதே அரிதினும் அரிது. இதிலிருந்து, சபரிமலை கோயிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், பக்தர்களின் பக்கம் நியாயம் இருப்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது” என்றார்.