Published:Updated:

நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே மகளிர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே மகளிர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!
நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே மகளிர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!
நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே மகளிர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கிடையே மகளிர் பாதுகாப்பு மசோதா  உள்ளிட்ட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி,  நாடாளுமன்றத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

பிரதமர் பதவி விலகும் வரை போராட்டம் நடத்த விடமாட்டோம் என்று முட்டுக்கட்டை  போட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் 9-வது நாளாக  இன்றும் முடங்கியது.

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையேயும் 3 முக்கிய மசோதாக்கள் விவாதம்  எதுவும் இன்றி நிறைவேற்றப்பட்டன.

வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு  பாதுகாப்பு அளிக்கும் வகையிலான மகளிர் பாதுகாப்பு சட்ட மசோதாவை, அமைச்சர்  கிருஷ்ணா தீரத் நிறைவேற்றினார்.

##~~##
இந்த சட்டத்தின்படி,வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும்  சம்பவம் நடந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம்  விதிக்கப்படும்.மேலும் இது தொடரும் பட்சத்தில் அபராதம் அதிகரிக்கும் அல்லது  நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படலாம்.
இதேபோன்று வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) திருத்த மசோதா, தேசிய  நெடுஞ்சாலைகள் ஆணைய திருத்த மசோதா ஆகியவையும் கடும் அமளிக்கிடையே  நிறைவேற்றப்பட்டது.