Published:Updated:

பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது!

Vikatan Correspondent
பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது!
பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது!
பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது!

மும்பை:  தேசிய சின்னத்தை அவமதித்ததாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம்  திரிவேதி,தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு முன்னாள்  உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய  கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி  அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது,அதற்கு ஆதரவாக பிரபல  கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி, தனது இணைய தளம் மூலம் ஏராளமான கார்ட்டூன்களை  வரைந்தார்.

அதில் ஒன்றில் நான்கு சிங்கங்களின் முகங்களுக்கு பதில் வாயில் ரத்தம் வடியும்  ஓநாய்கள் இருப்பதுபோல் வரையப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் தேசிய சின்னத்தை அவமதிக்கும் வகையில்  உள்ளதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.,

பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது!

அத்துடன் நாடாளுமன்ற கட்டிடத்தை கழிப்பறை போலவும்,  பாரத மாதாவை மானபங்கம் செய்வது போலவும் வேறு இரு கார்ட்டூன்கள் இடம்பெற்றிருந்தன.

 
இது தொடர்பாக அசீம் திரிவேதி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து மும்பை போலீசார் அவரை நேற்று முன் தினம் கைது  செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 16ம் தேதி வரை போலீஸ் காவலில்  வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து அவரை தங்கள் காவலில் வைத்து போலீசார்  விசாரித்து வருகின்றனர்.
பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது!

அத்துடன், அசீம் திரிவேதியின் இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.

பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது!

இந்நிலையில்,திரிவேதி கைதுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,பிரஸ்கவுன்சில்  ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

திரிவேதி வரைந்த கார்ட்டூனில் சட்டவிரோதமாக எதுவும் இல்லை என்றும்,  ஜனநாயகத்தில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.இதில் சில உண்மையாகவும், பல  தவறாகவும் உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.