Published:Updated:

தேர்தலில் கெஜ்ரிவால் கட்சிக்கு ஆதரவாக மட்டுமே பிரசாரம்: ஹசாரே

தேர்தலில் கெஜ்ரிவால் கட்சிக்கு ஆதரவாக மட்டுமே பிரசாரம்: ஹசாரே
தேர்தலில் கெஜ்ரிவால் கட்சிக்கு ஆதரவாக மட்டுமே பிரசாரம்: ஹசாரே
தேர்தலில் கெஜ்ரிவால் கட்சிக்கு ஆதரவாக மட்டுமே பிரசாரம்: ஹசாரே

புவனேஸ்வர்: தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக்கு ஆதரவாக மட்டுமே தாம் பிரசாரம் செய்ய இருப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த ஹசாரே, நாட்டில் அடுத்து வரும் பொதுத் தேர்தல்களில், நேர்மையான, தகுதியான வேட்பாளர்களை மட்டுமே ஆதரிக்கப் போவதாக தெரிவித்தார்.

##~~##
குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ள 'ஆம் ஆத்மி' கட்சி சார்பில் போட்டியிடுபவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று கூறிய அவர்"
தாம் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றும்,கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்கியது சிறப்பானது என்றும் தெரிவித்தார்.
தங்கள் இருவரின் வழிகள் வேறு வேறாக இருந்தாலும், இலக்கு ஊழல் இல்லாத இந்தியாவாகவே இருப்பதாகவும் கூறிய ஹசாரே,அரவிந்த் கெஜ்ரிவாலின் வேட்பாளர்கள் தகுதியானவர்களாக இருந்தால், அவர்களுக்காக பிரசாரம் செய்து, அவர்களை பதவியில் அமர்த்துவேன் என்று மேலும் தெரிவித்தார்.