Published:Updated:

டெல்லி சம்பவம்: போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்துக் கலைப்பு!

புதுடெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்ட சமபவத்துக்குக் கண்டனம் தெரிவித்து டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் வீடு  முன்னர் போராட்டம் நடத்தியவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடிக்கப்பட்டனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவ,மாணவிகள் மற்றும் சில அமைப்புகளை  சேர்ந்த போராட்டக்காரர்கள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் வீடு முன்னர் கூடி, அவரை  பதவி விலக கோரி முழக்கங்களை எழுப்பினர்.

##~~##
போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை அகற்றி, முதல்வர் ஷீலா தீட்சித்தின் வீட்டுக்குள்  அவர்கள் நுழைய முயன்ற நிலையில், 50க்கும் மேற்பட்டோர் சாலைக்குச் சென்று,  கோஷங்களை எழுப்பியும் மறியலில் ஈடுபட்டும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிட்டபடியே முன்னேறியதால்,  அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர்.
ஆனால் போலீஸார் இவ்வாறு தண்ணீரைப் பீய்ச்சியடித்து கலைத்ததற்கு அவர்கள்  கண்டனம் தெரிவித்தனர். இது அரசு மற்றும் போலீஸாரின் கையாலாகாத்தனம் என்றும்  தவறான அணுகுமுறை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.