Published:Updated:

பாலியல் பலாத்காரம்: டெல்லி போராட்டத்தில் வன்முறை; தடிய்டியால் பதட்டம்!

பாலியல் பலாத்காரம்: டெல்லி போராட்டத்தில் வன்முறை; தடிய்டியால் பதட்டம்!
பாலியல் பலாத்காரம்: டெல்லி போராட்டத்தில் வன்முறை; தடிய்டியால் பதட்டம்!

புதுடெல்லி: மாணவி பலாத்காரம் செய்யபட்டதை கண்டித்து டெல்லியில் ஜனாதிபதி வீடு  முன்பு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை  குண்டுகளை வீசியும் கலைத்தனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. 

பாலியல் பலாத்காரம்: டெல்லி போராட்டத்தில் வன்முறை; தடிய்டியால் பதட்டம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக்  கண்டித்தும்,பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,குற்றவாளிகளுக்கு  தூக்குத்தண்டனை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,   மாணவ,மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் போராட்டம்  தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் போராட்டம் நடத்தியவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய  மேற்ப்பட்ட போது, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனையடுத்து வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கல் வீசித் தாக்கியதில் போலீஸ் வாகனங்கள் சேதமடைந்துன.

##~~##
இதனால் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார்  போராட்டக்காரர்களைக் கலைத்தனர். டெல்லி முழுவுதும் 5வது நாளாக பல்வேறு  அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவ, மாணவிகள்  காயம்

போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகை செல்லும் பாதை  மூடப்பட்டது. தடியடி நடத்தினாலும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்று  போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.தடியடில் பல மாணவ, மாணவியர்கள் காயமடைந்தனர்.

போலீசார் தடியடி நடத்தியும் மாணவர்கள் கலையாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போலீசார் தடியடி நடத்தியது சிறிது கலைந்த மாணவர்கள் மீண்டும் கூடியுள்ளனர்.


குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

இதனிடையே போராட்டம் தீவிரமடைந்துள்ளதால்,போராட்டக்காரர்களை சாந்தப்படுத்தும்  விதமாக, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை  விதிக்குமாறு பரிந்துரைக்கப்படும் என்று டெல்லி காவல்துறை ஆணையர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.