Published:Updated:

'டெல்லி போராட்டம்: கான்ஸ்டபிள் மாரடைப்புக்கு காயமே காரணம்'

'டெல்லி போராட்டம்: கான்ஸ்டபிள் மாரடைப்புக்கு காயமே காரணம்'
'டெல்லி போராட்டம்: கான்ஸ்டபிள் மாரடைப்புக்கு காயமே காரணம்'
'டெல்லி போராட்டம்: கான்ஸ்டபிள் மாரடைப்புக்கு காயமே காரணம்'

புதுடெல்லி: டெல்லி போராட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் மரணமடைந்ததற்கு தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்தக்காயங்களே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மாணவி பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டதற்கு நியாயம் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்த போலீஸ் கான்ஸ்டபிள் தோமர், மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில், அவரது உடலில் கழுத்து,மார்பு உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காயங்கள் காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், கான்ஸ்டபிள் தோமர் மரணத்தில் நிலவிய சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. 

முன்னதாக கடந்த ஞாயிறன்று டெல்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை  வெடித்தது.போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது,வன்முறை  வெடித்தது.அப்போது நடைபெற்ற களேபரத்தில் சுபாஷ் சந்த் தோமர் (47) என்ற  கான்ஸ்டபிள் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில்தான் அவர் உயிரிழந்ததாக  கூறப்பட்டது.இதனால் போராட்டக்காரர்கள் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில்,இது  தொடர்பாக 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சுபாஷ்சந்த் தோமர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில் இறந்தாரா அல்லது  திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தாரா? என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

தோமருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில்,"தோமர் கொண்டு வரப்பட்டதும்  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தோம். அதற்கு ஏற்ப அவருக்கு 2  நாட்களாக சிகிச்சை அளித்தோம்.இருப்பினும் அவரை காப்பாற்ற இயலவில்லை"என்று  கூறியிருந்தனர்.

ஆனால் டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் இதை மறுத்திருந்தார்.தோமரின் நெஞ்சு,  கழுத்து, வயிறு பகுதிகளில் உள்காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில்தான் தோமர் உயிரிழந்துள்ளார் என்றார்.

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள பிரேத பரிசோதனை அறிக்கை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.