Published:Updated:

பாலமேடு ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 20 பேர் காயம்

பாலமேடு ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 20 பேர் காயம்
பாலமேடு ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 20 பேர் காயம்

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 20 பேர் காயமடைந்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் முழுமையான மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே களமிறக்கப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 20 பேர் காயம்

இதேபோன்று மாடு பிடி வீரர்களும் தீவிர பரிசோதனைக்குப் பிறகே காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்

இந்த ஜல்லிக்கட்டில் தேனி,திண்டுக்கல்,சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் அவிழ்த்து விடப்பட்டன.சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க இளைஞர்கள் ஆக்ரோஷமாக பாய்ந்தனர்.இதில் சுமார் 20 பேர் காளைகள் முட்டி காயமடைந்தனர்.

ஜல்லிகட்டை நிகழ்ச்சியை முன்னிட்டு பாலமேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.