Published:Updated:

காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் போராட்டம்!

காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் போராட்டம்!
காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் போராட்டம்!
காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் போராட்டம்!

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடபட்டதை கண்டித்து, கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. காவிரி தண்ணீரை கர்நாடக மாநிலம் திறந்துவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில்,உச்ச நீதிமன்றத்தில் வருகிற திங்கட்கிழமை மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.

இந்நிலையில்,தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், அந்தச் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அதன் தலைவர் கே.எஸ்.புட்டனையா தலைமையில் மண்டியா மாவட்டம், கெஜ்ஜலகெரே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

எடியூரப்பா கைது

##~~##
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மைசூரில் இருந்து பெங்களூர் நோக்கி நடைபயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சித் தலைவருமான எடியூரப்பா தனது பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு, தொண்டர்களுடன் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்றார். தடையை மீறி அணையை முற்றுகையிட முயன்றதால், எடியூரப்பா உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தமிழகத்தின் முகவர் போல முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் செயல்படுகிறார்.காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதைத் தடுக்க முடியாத அவர்,தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்திவிட்டு,பிரதமரைச் சந்தித்து கர்நாடகத்தின் நிலையை எடுத்துக் கூற வேண்டும்.பதவி ஆசைக்காக அவர் கர்நாடக மக்களின் நலனைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார்.கர்நாடக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்"என்றார்.