Published:Updated:

வெளி மாநிலங்களில் நீட் தேர்வுமையம்..! சி.பி.எம் சாலை மறியல்!

வெளி மாநிலங்களில் நீட் தேர்வுமையம்..! சி.பி.எம்  சாலை மறியல்!
வெளி மாநிலங்களில் நீட் தேர்வுமையம்..! சி.பி.எம் சாலை மறியல்!

வெளி மாநிலங்களில் நீட் தேர்வுமையம்..! சி.பி.எம் சாலை மறியல்!

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, சி.பி.எம் கட்சி சார்பில் சிவகங்கை பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட 40 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சி.பி.எம் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கந்தசாமி பேசும்போது, 'நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று போராடி வரும் வேளையில், நீட் தேர்வு மையத்தை வெளிமாநிலங்களுக்கு மாற்றியிருப்பது, தமிழக மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மொழி தெரியாத மாநிலம், நீண்ட நெடிய பயணம், பஸ், ரயில் முன்பதிவு செய்ய முடியாத நிலை, இதையெல்லாத்தையும்விட, ஏழை மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத முடியாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது மத்திய அரசு. கிராமப் புறத்தான் டாக்டர் ஆகக் கூடாது என்பதில் பி.ஜே.பி அரசாங்கம் சரியாக இருக்கிறது. வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது கிராமப்புற மாணவர்கள்தான். தமிழக அரசு முன்கூட்டியே மத்திய  அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். செய்யத் தவறிவிட்டது எடப்பாடி தலைமையான தமிழக அரசு. நாளை கேரளா, ராஜஸ்தான் சென்று தேர்வு எழுதப் போகும் மாணவர்கள்  துணையின்றி தேர்வு எழுதச் செல்லமுடியாது. தமிழக அரசு அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாய் பணம், ரயில், பஸ் சலுகையெல்லாம் மாணவர்களுக்குப் பயன்படாது. கிராமப்புறத்தில் இருந்து செல்லும் மாணவனின் அப்பாவுக்கோ, மாணவனுக்கோ ராஜஸ்தானில் எந்த ஸ்கூல் தன் மகனுக்கு சென்டர் என்பதை எப்படி யாரிடம் கேட்டுப் போவார்? இதெல்லாம் மத்திய அரசின் யுத்தம். எனவேதான் நீட் தேர்வை எதிர்த்துப் போராடிவருகிறோம். தமிழகத்தில் இருந்து சுமார் பத்தாயிரம் பேராவது இந்தத் தேர்வுக்காகச் செல்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக சாலைமறியலில் ஈடுபட்டோம். சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு