Published:Updated:

மும்பை, கர்நாடகாவிலும் தமிழர்கள் போராட்டம்

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆதரித்தும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் மும்பை, கர்நாடகாவிலும் போராட்டம் பரவியுள்ளது.

கர்நாடக வாழ் தமிழர்களும் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஏராளமான தமிழக இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

##~~##
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தின் போது இவர்கள் வலியுறுத்தினர்.
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் தராவி பகுதியில் உள்ள தமிழர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.