Published:Updated:

ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: வைகோ கைது (படங்கள்)

ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: வைகோ கைது  (படங்கள்)
ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: வைகோ கைது (படங்கள்)

தூத்துக்குடி: தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி  கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட 150 பேரும், ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்ட மீனவர்கள் 150 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: வைகோ கைது  (படங்கள்)

கடந்த 23ஆம் தேதி அதிகாலையில் தூத்துக்குடி பகுதியில் திடீரென ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல், இருமல் போன்ற பாதிப்பு ஏற்பட்டது. எதனால் இந்த பாதிப்பு என தெரியாததால் தூத்துக்குடியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.

ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: வைகோ கைது  (படங்கள்)

இந்த சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். இதற்கு விளக்கம் கேட்டு ஆலை நிர்வாகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ் குமார், இறுதி அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: வைகோ கைது  (படங்கள்)

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

##~~##
ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: வைகோ கைது  (படங்கள்)

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி வைகோ தலைமையில் இன்று கலெக்டர் அலுவலகத்தை மீனவர்கள், மற்றும் அனைத்துக் கட்சியினர், பொது மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: வைகோ கைது  (படங்கள்)

இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற மீனவர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஆலையை மூடக் கோரி வரும் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை முன்பு வைகோ தலைமையில் போராட்டம் நடத்த உள்ளனர்.

எஸ்.சரவண பெருமாள்

படங்கள்: சிதம்பரம்