Published:Updated:

ஜெயலலிதா அரசை டிஸ்மிஸ் செய்யலாம்: சுப்ரமணியன் சுவாமி

 ஜெயலலிதா அரசை டிஸ்மிஸ் செய்யலாம்: சுப்ரமணியன் சுவாமி
ஜெயலலிதா அரசை டிஸ்மிஸ் செய்யலாம்: சுப்ரமணியன் சுவாமி
 ஜெயலலிதா அரசை டிஸ்மிஸ் செய்யலாம்: சுப்ரமணியன் சுவாமி

புதுடெல்லி:  சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவிப்பதால், அவரது ஆட்சியை டிஸ்மிஸ் செய்யலாம் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி," ஜெயலலிதாவின் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான இந்தக் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.

##~~##
அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி நீக்கச் செய்யலாம்.
அத்துடன், மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு 256-ன் கீழ் சில வழிகாட்டு முறைகளை அனுப்ப வேண்டும்" என்று கூறியுள்ளார்.