Published:Updated:

நிரந்தரமாக மூடப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?

நிரந்தரமாக மூடப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?
நிரந்தரமாக மூடப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?

நச்சு வாயுவை வெளியேற்றிய ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதை தூத்துக்குடி மக்கள் வரவேற்றுள்ளபோதிலும்,  இதில் உள்ளடி வேலைகள் ஏதும் இருக்குமோ என்ற சந்தேகமும், நிரந்தரமாக மூடப்படுமா என்ற சந்தேகமும் அவர்கள் மனதில் நிழலாடுகிறது.

நிரந்தரமாக மூடப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?

கடந்த 23 ம் தேதி தூத்துக்குடி நகர் முழுவதும் விஷவாயு பரவியது. நகர மக்கள், கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற இன்னல்களுக்கு ஆளானார்கள். 'ஸ்டெர்லை காப்பர் ஆலையிலிருந்துதான் அந்த விஷவாயு வெளியானது’ என மாவட்ட கலெக்டர் உட்பட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது. கடந்த 25 ம் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை, 28 ம் தேதி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து ஸ்டெர்லைட் ஆலை நோக்கி ஊர்வலம் என நடந்த போராட்டங்களுக்கு வைகோ தலைமை தாங்கினார்.

வியாபாரிகள், மீனவ சமுதாய அமைப்புகள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் மாவட்ட கலெக்டர், மாவட்ட மாசுகடுபாட்டு வாரிய அதிகாரிகள் விளக்கம் கேட்டு அனுப்பியிருந்த நோட்டீஸ்&க்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதனை பரிசீலனை செய்த அதிகாரிகள், ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும்’ என உத்தரவு போட்டனர். அதனைத்தொடர்ந்து முதல்கட்டமாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கிறது. மூடுவதற்கான அடுத்தக்கட்ட முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

நிரந்தரமாக மூடப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?

கொண்டாட்டத்தில் இருந்த சுற்றுசூழல் ஆர்வலரான கிருஷ்ணமுர்த்தியிடம் பேசினோம், ‘‘கடந்த 1994 ஆம் ஆண்டு போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்ட, அதன்பிறகு வந்த கருணாநிதி காலத்தில் இயங்க துவங்கியது இந்த கம்பெனி. அப்போதிலிருந்து இதுபோன்ற போராட்டங்கள் நடந்துகோண்டேதான் இருக்கிறது. ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் சகாயமடைந்து முடங்கியிருக்கிறார்கள். இவர்களின் சுயநலத்தால் கடந்த 20 வருடங்காலங்களில் தூத்துக்குடியும் அதன் சுற்றுவட்டாரமும் சுகாரத்தை இழந்துவிட்டது.

எப்போதுமே குறைந்த அளவு விஷவாயுவை ‘ஸ்லோ பாய்சன்’ போல் அனுப்பி மக்களை சித்ரவதை செய்து கொண்டிருந்த அந்த ஆலை, கடந்த 23 ஆம் தேதி அதன் சுயரூபத்தை காட்டியது. அதன்பிறகு நடந்த போராட்டங்களின் பலன்தான் இத்தனை மாற்றங்கள்.

இந்த போராட்டத்தின் உஷ்ணத்தை குறைக்கும் நோக்கில் இதனை அரசியல் விளையாட்டாக கையாளக்கூடாது. ஏற்கனவே பிடிக்காமல் இருக்கும் மத்திய அரசை மிரட்டுவதற்காக இந்த போராட்ட சக்தியை மாநில அரசு பயன்படுத்திவிடக் கூடாது. இந்த மூடல் நடவடிக்கை உண்மையாக இருக்கவேண்டும். ‘மூடுவதுபோல் மூடுகிறோம். வரும் ஐந்தாம் தேதி வரவிருக்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பில் மனுதாரர்களுக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் அதனை பயன்படுத்தி மீண்டும் ஓட்டிக் கொள்ளுங்கள்’ என ரகசிய ஒப்பந்தம் எதுவும் போட்டுவிடக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்’’ எனக் கூறினார்.

இந்நிலையில்,  தூத்துக்குடி மக்கள் பெரிய அளவில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். இருந்தாலும் ‘இது நிரந்தரமான மூடலா? இல்லையா’ என்கிற சந்தேகம் அவர்கள் மனதில் நிழலாடுகிறது..

இதற்கிடையே தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்து வந்த பணியாளர்கள் மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பதினைந்தாயிரம் பேர் இந்த ஆலையில் வேலைபார்த்து வருகிறோம். எங்களது குழந்தைகளை இங்கு படிக்க வைத்திருக்கிறோம். இனிமேல் நாங்க எங்கே போவோம். எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஆலையை மீண்டும் இயங்க ஆவன செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

நிரந்தரமாக மூடப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?

அதுபோல் ஒப்பந்த தொழிலாளர்கள், ‘‘எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி சொல்லுங்க’ என  தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.   

நிரந்தரமாக மூடப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?

இந்நிலையில், பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த தூத்துக்குடி மாவட்ட தொழிலதிபர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படுவதன் மூலம் தூத்துக்குடிக்கு மேற்கொண்டு யாரும் தொழில் தொடங்க வராமல்போகிற அபாயம் உள்ளதாகவும், எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

என்னப்பா நடக்குது இங்கே?

-எஸ்.சரவணப்பெருமாள்,
படங்கள்:
ஏ.சிதம்பரம்