Published:Updated:

'பசுமை தீர்ப்பாய தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு நடவடிக்கை'

'பசுமை தீர்ப்பாய தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு நடவடிக்கை'
'பசுமை தீர்ப்பாய தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு நடவடிக்கை'
'பசுமை தீர்ப்பாய தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு நடவடிக்கை'

சென்னை: பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால், அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக சட்டசபையில் இன்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 
இத்தீர்மானத்தில் பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.இதற்கு பதில் அளித்து பேசிய சுற்றுசூழல் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்,"தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையில் கடந்த 23.3.2013 அன்று காலை 7 மணிக்கு நச்சு வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில், முதலமைச்சர் தலைமையில் மீண்டும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எடுத்த முடிவின்படி ஆலையை மூட வேண்டும் என உத்தரவிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
 
பின்னர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கடந்த 12 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
 

##~~##
அப்போது தீர்ப்பாயம் வழங்கிய இடைக்கால உத்தரவில் 2 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைப்பதற்கும், குழுவில் ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும் என்றும், இவர்களுக்கு உதவியாக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து ஒருவரும், ஸ்டெர்லைட் ஆலை சார்பாக ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
இந்த நிபுணர் குழுவில் இடம் பெறும் பெயர்கள் வருகிற 18 ஆம் தேதி வெளியிடப்படும். இந்த குழு ஆலையை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தொழிற்சாலையை இயக்கி காட்ட வேண்டும் என்று கூறியுள்ளது.
 
இந்த ஆய்வுக்கு பிறகு நிபுணர் குழுவின் அறிக்கையை வருகிற 29 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. எனவே, பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என்றார்.