Published:Updated:

மறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்!

மறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்!

மறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்!

‘‘அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு நம்பர் 1 என நாடே சொல்லும். அதற்கு முக்கியக் காரணம், தேவையான உபகரணங்கள் இருப்பது மட்டுமல்ல; திறமையான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களும் தமிழகத்தில் அதிகமாக இருப்பதே. இன்னும் சில ஆண்டுகளில் இந்தப் பெருமை தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு இருக்காது’’ என வேதனையோடு சொல்கிறார்கள் தமிழக அரசு மருத்துவர்கள்.

மறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்!

‘நீட்’ தேர்வினால் இடஒதுக்கீட்டை ஒழித்து தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய அரசு எப்படி பொசுக்கி வருகிறதோ, அதுபோல அரசு மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்புக்கான தகுதித் தேர்வில் இதுவரை இருந்துவந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நீக்கியுள்ளது மத்திய அரசு. இந்த இட ஒதுக்கீடு இல்லையென்றால் அரசு மருத்துவர்களால் பட்ட மேற்படிப்புப் படித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களாக ஆகவே முடியாது. இதை எதிர்த்துதான் கடந்த ஒரு வாரமாக தமிழக அரசு மருத்துவர்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர்.

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ராமலிங்கம், ‘‘ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மூன்று பிரிவுகள் உள்ளன. இவற்றில் சுமார் 18 ஆயிரம் மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் பலர் பணியாற்றிக்கொண்டே பட்ட மேற்படிப்பு படித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களாக உயர்வார்கள். இதற்கு இடஒதுக்கீடு உண்டு. மொத்தம் இருக்கும் 1,580 இடங்களில் பாதிக்குப் பாதி அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும். மீதமுள்ள இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகிதம் தருவதே இத்தனை ஆண்டு நடைமுறை. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக இந்திய மருத்துவ கவுன்சில், இந்த இடஒதுக்கீட்டை முற்றிலுமாக நீக்கியுள்ளது. இந்தநிலை நீடித்தால், அரசு மருத்துவமனைகளில் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல நேரிடும். மருத்துவத்தை கார்ப்பரேட் கைகளுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்!

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட பொருளாளர் டாக்டர் பெருமாள், “நீட் பெயரைச் சொல்லி நமது மருத்துவ வளங்கள் எப்படி வெளிமாநிலத்தினருக்குக் கொடுக்கப்படுகின்றனவோ, அதுபோல தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கிடையாது என்று அரசு மருத்துவத்தைத் தனியார் கைகளில் கொடுக்க நினைக்கிறது மத்திய அரசு. தனியார் மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிப்பதை அரசு மருத்துவர்கள் சம்பாதிப்பதற்கு குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகளாகும். அதற்குள் எங்களுக்குப் பணி ஓய்வே வந்துவிடும். இதனால், இப்போது படித்துவரும் மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளையே நாடிச் செல்கின்றனர். சில ஆண்டுகளில் தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள் மொத்தமாக அழிந்துவிடும்” என்றார்.

- ஜெ.அன்பரசன், படங்கள்: ஸ்ரீனிவாசுலு