Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் குழு அமைப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் குழு அமைப்பு!
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் குழு அமைப்பு!
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் குழு அமைப்பு!

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்பட்ட நச்சு வாயுவினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்பேரில் அந்த ஆலை கடந்த 30 ஆம் தேதி மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று அந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை நீதிபதிகள் அறிவித்தனர்.

##~~##
இந்தக் குழுவின் தலைவராக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சாய், உறுப்பினர்களாக ஐ.ஐ.டி. பேராசிரியை ரெஜி பிலிப், ஸ்டெர்லைட் ஆலையைச் சேர்ந்த அதிகாரி சுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மோகன் நாயுடு ஆகியோரும் நியமிக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த அறிக்கை 29-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் ஆலையை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.