Published:Updated:

`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்!
`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்!

''சென்னை மாநகராட்சியின் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு டெண்டர் விடுவதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. அதனால், துப்புரவுத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்'' என்று சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்!

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு டெண்டர் விடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. அதற்கான டெண்டர், அக்டோபர் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து, அரசு துப்புரவுப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் 11-ம் தேதி பேரணியில் ஈடுபட்டனர். மேலும் 20-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். அதையடுத்து, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்குதல்துறை செயலாளர் ஹர்மிந்தர் சிங், ஊழியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி டெண்டர் விடுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தனர். அதையடுத்து, போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்!

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். அவர், 'உலக வர்த்தக மையத்தில் இந்தியா போட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், பொதுச் சேவைகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான் இந்த முயற்சி. தற்போது, டெண்டர் விடுவதை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளனர். துப்புரவுப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்படும் நிலையில், 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே, சென்னையில் ஒரு சில மண்டலங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதை, ராம்கி என்விரோ என்ஜினீயர்ஸ் என்ற நிறுவனம் ஒப்பந்தத்துக்கு எடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. அதுதொடர்பாக, அந்த நிறுவனத்துக்கு பலமுறை மெமோவும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாகச் செய்திகளும் வெளியாகியுள்ளன. அந்த நிறுவனம், ஊழியருக்கு 6,500 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்குகிறது. அதனால், துப்புரவுப் பணிகள் சரிவர நடப்பதில்லை. அவர்களது நிர்வாகத்தில் முக்கியத் தெருக்கள் மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன. மற்ற தெருக்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. தனியார் நிறுவனங்கள், வீடுகள் இடிக்கப்படுவதால் மீதமாகும் கட்டடக் கழிவுகளைத் துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தம்செய்யத் தேவையில்லை. ஆனால், இந்த ராம்கி என்விரோ என்ஜினீயர்ஸ் துப்பரவுத் தொழிலாளர்களை வைத்து அந்தப் பணிகளைச் செய்து, அந்தக் கழிவுகளையும் மாநகராட்சிக் கழிவுகள் என்று கணக்குக் காட்டி மாநகராட்சியை ஏமாற்றுகிறது. அதற்கு அதிகாரிகளும் உடைந்தையாக இருக்கிறார்கள். மாநகராட்சி விதிகளின்படி, துப்பரவுப் பணிக்கு 500 மீட்டருக்கு ஒருவர் பெருக்க வேண்டும். 250 வீடுகளுக்கு ஒருவர் குப்பைகளை வாங்க வேண்டும். ஆனால், தனியார் நிர்வாகத்தின் கீழ், 150 பணியாளர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 30 பேர் மட்டுமே உள்ளனர். துப்புரவுப் பணியை தனியாருக்கு ஒப்படைக்கும் சூழலில் முறைகேடுகள் அதிகரிக்கும். துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்' என்று தெரிவித்தார்.